Monday, April 30, 2012

உயிர் வேதியல் - எதிர்காலம் ஒரு அலசல்- 1

மக்களே...!!!

நம்ம தளம் பற்றின அறிமுகத்தில, இந்த வலைப்பூவுல என்ன விதமான பதிவுகள் எழுதப்போறேன்னு சொல்லும்போது இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பத்தியும் பதிவிடப்படும்ன்னு சொல்லியிருந்தேன். முதல் முயற்சியா, இந்தியாவுல இந்த துறையில இருக்கும் நிறுவனங்கள், மேற்படிப்புக்கு உகந்த நல்ல கல்வி நிறுவனகள் அப்படின்னு ஒரு பட்டியல் போடலாம்ன்னு ஒரு எண்ணம் வந்திருக்கு. 


 INDIAN INSTITUTE OF SCIENCE, BANGALORE

உயிர் வேதியியல் படிச்சிட்டு இருக்கிற எல்லா மாணவர்களுக்கும் படிச்சி முடிச்சதும் என்ன பண்ண போறோம்ன்னு  ஒரு கேள்வி இருக்கும். எனக்கும் இருந்தது. அதுவும் என்னை   மாதிரி படிப்பு வாசனையே இல்லாத கிராமத்துல இருந்து வரவங்களுக்கு இன்னும் ஒரு வேதனை என்ன தெரியுமா...? அங்க இருக்கவங்களுக்கு படிப்புன்னா அது BA TEACHER TRAINING DOCTOR இல்லன்னா ENGINEER . என்ன படிக்கிறன்னு கேட்டவங்களுக்கு விளக்கி சொல்ல முடியாம தடுமாறும்போது கேவலமா ஒரு லுக் விடுவாங்க பாருங்க..!!! எதிர்ல இருக்கற சுவத்துல போயி முட்டிக்கலாமானு தோணும். என்ன படிக்கிறோம்ன்னே சொல்ல முடியாதப்போ, என்ன வேலை கெடைக்கும்ன்னு வேற யாராவது கேட்டுட்டா, இன்னும் சுத்தம். 


ஆனா, இன்னமும் இதை படிக்கிற மாணவர்களுக்கு இது என்ன மாதிரியான துறை, என்ன வேலை கிடைக்கும், வேலை வாய்ப்பு நிலவரம்ன்னு தெரியாம ஒரு கலவரமா தான் இருக்காங்க.  வீட்ல, இல்ல தெரிஞ்சவங்க சொன்னாங்களேன்னு குட்டிகரணம் போட்டாவது MSc வரைக்கும் வந்திட்டு, அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கும் போது தான் கண்ணை கட்டி காட்ல விட்டமாதிரி இருக்கும். 

இந்த துறையில மெடிக்கல் ரெப் வேலைதான் கெடைக்கும்ன்னுவான் ஒருத்தன். பேசாம லெக்சர் ஆயிடேன்ன்னு அட்வைஸ் பண்ணுவான் இன்னொருத்தன். கிளாஸ்ல பாடம் எடுத்த டீச்சரை கலாய்ச்சதெல்லாம் கண்ணு முன்னாடி ஓடி வயித்துல புளிய கரைக்கும். PhD பண்ணினா தான் வேலை கிடைக்கும்ன்னு வேற சொல்லி மண்டை காய வெப்பாங்க. 

ஆனா, இந்த துறையும் மத்த துறை மாதிரி தான். இதுக்குன்னு இருக்கிற வேலை வாய்ப்புகள் எப்பவும் இருந்திட்டே தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனா, மத்த துறைகள்ளயாவது ஏற்றம், இறக்கம் அப்படின்னு சூழ்நிலையை பொறுத்து இருக்கும். ஆனா இந்த துறை அப்படி இல்ல. எப்பவும் ஸ்டாண்டர்டா இருக்கும். அவங்களுக்கு வேண்டியது எல்லாமே, திறமையான ஆளுங்க. இங்க திறமைக்கு மட்டுமே மதிப்பு. பத்து வேலை காலியா இருக்குன்னா, அவங்க எதிர்ப்பார்க்கிற திறமை இல்லன்னா, அப்படி ஒரு ஆள் கெடைக்கிற வரைக்கும் அந்த வேலை காலியாவே தான் இருக்கும். மத்த துறை மாதிரி, ஆள் வேணுமேன்னு கெடைக்கிற ஆளுங்களை எடுக்க மாட்டாங்க.   இது தான் மத்த துறைக்கும் இந்த துறைக்கும் இருக்கிற வித்தியாசம். 

ஸோ, நாம நம்ம திறமைகளை வளர்த்துக்கிட்டா, வேலையை பத்தி கவலையே பட தேவை இல்லை. ஆனா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி அப்படின்னு ஒப்பிட்டா, தமிழ்நாட்டுல நிறுவனங்கள் கம்மிதான். அதுக்கான காரணம் எனக்கும் தெரியல. இப்போ பெங்களூர்ல இருக்கும் சில கம்பெனிகள் பட்டியல் கீழே. 

Actavis Pharmaceutical
Actavis Pharma Development Centre Pvt.Ltd., No.15, 80 Feet Road, Koramangala,
Bangalore, India

Possibly the first generic Pharma from outside India to have a fully integrated operation in the country, Actavis now possesses a full range of service ranging from bio-equivalence studies to stability testing, developing and producing active pharmaceutical ingredients (APIs) - the single largest cost component of the business, developing new formulations and producing finished tablet forms.

Website: http://www.actavis.com/en/corporate+directory/asia/india.html
Career: http://www.actavis.com/en/careers/default.html
Email: gshankar@actavis.com
Tel: +91 80 2563 3097 / 98
Fax: +91 22 2570 6658
 
Alcon Laboratories India Pvt. Ltd
Alcon Lab (India) Pvt. Ltd.,Gopalkrishna Complex, Residency Road Cross, Bangalore, India.

Alcon is a wholly owned subsidiary company of Nestle, Switzerland. Alcon's main business activity is in Eyecare i.e. pharma, surgicals and ophthalmic instruments including diagnostic and surgical equipment. Alcon was established in 1947 and has grown very fast in past 25 years. Alcon's head office is situated in Fort Worth, Texas, USA. It is rated as one of the Fortune 100 Best Companies to Work For.

Website: http://www.alcon.com/in/
Email: alconindia@vsnl.net
Tel : 080-5594943 / 5597652
Fax : 080-5594944

 
Aurigene Discovery Technologies Ltd.
Aurigene Discovery Technologies Ltd., KIADB Industrial Area, Electronic City Phase II,
Bangalore, India

Aurigene Discovery Technologies Limited based in Bangalore, India is a partnership-focused collaborative Discovery organization. Aurigene is an independent subsidiary of Dr Reddy's Laboratories Limited (DRL).

Website: http://www.aurigene.com/
Career: http://www.aurigene.com/career.asp
Email: partnerships@aurigene.com, careers@aurigene.com
Tel: + 91 80 2852 1314, 2852 1316, 2852 8943
Fax: + 91 80 2852 6285
 
Avestha Gengraine, Bangalore
Working in the field of bioinformatics (work on rice genome) 30 people work here
Website: http://www.avesthagen.com/
Career: http://database.avesthagen.com/jobapp/careers_new.php
Email: info@avesthagen.com
Tel: +91-80-2841 1665/ 2308/2770/ 2766
Fax: +91-80-2841 8780

Astrazeneca Pharma India Ltd.
Bellary Road
, Hebbal, Bangalore - 560 024. India
Astrazeneca is a Pharmaceutical company provides a powerful range of products for six important areas of healthcare - gastrointestinal, cardiovascular, cancer, respiratory, neurosciences and infection. With its headquarters based in UK, AstraZeneca has its R&D facilities based in Sweden, USA, Japan & India.
Website: http://www.astrazenecaindia.com/
Career: http://www.astrazenecaindia.com/AstraZeneca India - Careers.asp
 Tel: +91-80-23621-212
Fax: +91-80-23621-214


அஸ்ட்ரா-செனிக்கா பெங்களூருல இருக்கிற ஒரு பெரிய முக்கியமான தனியார் ஆராய்ச்சி கம்பெனி.   நுண்ணுயிரியல் படிச்சி முடிச்சவங்களுக்கு இங்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனா அங்க ஏற்கனவே வேலை பார்க்கிற ஒருத்தர் உங்க விண்ணப்பத்தை பரிந்துரை செய்யனும்ன்னு கேள்வி பட்டிருக்கேன். இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம். தப்பில்லை.


ஓகே... இப்போ  பதிவு ரொம்ப நீளமா போயிட்டு இருக்கு. மீதி இருக்கிற பட்டியலை இன்னொரு தனி பதிவா போடறேன். அதோட இந்த துறையோட நிறை குறைகளை பத்தியும் அலசுவோம். 

அடுத்த பதிவுல சிந்திக்கலாம்...!!!