Sunday, May 20, 2012

டிஎன்ஏ, ஆர்என்ஏ, ஜீன் மற்றும் குரோமோசோம் - விரிவான அறிமுகம்...!!!

மக்களே...!!!

நான் இந்த வலைப்பூவை எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் நான் படிச்சி தெரிஞ்சிக்கிட்டதை நாலு பேருக்கு சொல்லி குடுக்க நெனச்சது தான். துரதிஷ்ட்டவசமா பையாலஜி ஆங்கிலத்துல மட்டுமே படிக்க கிடைக்குது. அதுலயும் உயிர் வேதியியல் ஆங்கிலத்துல மட்டுமே கெடைக்கிற ஒன்னு. ஆனா, நெறைய மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ் வழியில படிச்சிட்டு, ஆங்கில வழி உயிர் வேதியியல் சேர்ந்து படிக்கிறாங்க. ஆனா, இன்னைக்கு வரைக்கும் ஒரு புத்தகம் கூட தமிழ் வழி மாணவர்களுக்கு கிடையாது அப்படிங்கறது தான் உண்மை...

ஸோ, அவங்களுக்கு இந்த வலைப்பூ உதவியா இருக்கும் அப்படிங்கறது என்னோட எண்ணம். பாலோவரா இல்லன்னாலும் நம்ம வலைப்பூவுக்கு நெறைய பேரு வந்து போறது உணர முடியிது... நீங்க எல்லாரும் இந்த வலைப்பூவை உங்களுக்கு தெரிஞ்ச சில மாணவர்களுக்கு கொண்டுபோய் சேர்த்தா, அவங்களுக்கும் கண்டிப்பா உதவியா இருக்கும். என்னோட எண்ணமும் நிறைவேறும்... உங்களுக்கு நன்றி உடையவனாவும் இருப்பேன்...

செல் அமைப்புக்கு முன்னாடி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் வரிசையில, நியுக்ளிக் அமிலங்கள் பதிவோட தொடர்சியா குரோமோசோம் அமைப்பு, அது உருவாகும் முறை அப்படின்னு இன்னிக்கு பார்க்க நெறையவே விஷயம் இருக்கு. என்ஜாய் பண்ணுங்க...இப்போ நம்ம பதிவு...



குரோமோசோம் - CHROMOSOME - ஒரு பார்வை 

நியுக்ளிக் அமிலங்கள் அப்படிங்கறது ஒரு பொதுவான பேருதான்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். DNA வும் RNA வும் தான் அந்த ரெண்டு நியுக்ளிக் அமிலங்கள். ஓகே...ஆனா இந்த DNA வுல தான் புரோட்டீன் பத்தின செய்திகளை கொண்ட GENE ம், செல் பிரிஞ்சி புது செல் உருவாக்கும் போது பிரியிற குரோமோசோமும் அடக்கம். ஸோ, இந்த பதிவு உங்களுக்கு, DNA, RNA அப்படின்னா என்ன, ஜீன் (GENE) அப்படின்னா என்ன, குரோமோசோம் அப்படின்னா என்னன்னு தெளிவா வித்தியாசப்படுத்தி காட்டும்.

செல்லுக்குள்ள உட்கருவுக்குள்ள ஒரு வலை பின்னல் மாதிரி, நியுக்ளியோடைடுகளால் ஆனது தான் DNA . அதேமாதிரி தான் RNA . ஆனா ஒரு செல்லுக்குள எப்பவும் இருக்கறது DNA . ஒரு புரோட்டீன் உருவாகனும் அப்படிங்கும்போது மட்டும் தான் RNA உருவாகும்.

முதல்ல DNA பத்தி பார்க்கலாம். உட்கருவுக்குள்ள வலை பின்னல் மாதிரி அதாவது கலைச்சி போட்ட நூல்கண்டு மாதிரி தான் ஒரு சாதாரண நிலையில இருக்கிற செல்லுக்குள்ள DNA இருக்கும். இந்த DNA நான்கு விதமான நியுக்ளியோடைடுகள் அடுத்தடுத்து நீளமா ஒரு செயின் மாதிரி கோர்க்கப்பட்ட அமைப்பு. இந்த நிலையில இது DNA அப்படின்னு அழைக்கப்படுது. நம்ம செல்லுக்குள்ள இந்த DNA இரட்டையா இருக்கும். அதாவது இரண்டு ரிப்பனை அடுத்தடுத்து வெச்சி முறுக்கின மாதிரியான அமைப்பு.  இந்த ரெண்டு ரிப்பன் அமைப்புல முதல் ரிப்பனை அப்படியே திருப்பி தலைகீழா வெச்சா அது ரெண்டாவது ரிப்பன். இன்னும் தெளிவா சொல்லணும் அப்படினா முதல் ரிப்பன்ல இருக்கிற கடைசி நியுக்ளியோடைடுதான் ரெண்டாவது ரிப்பனோட முதல் நியுக்ளியோடைடு.



THANKS TO: wikispaces.psu.edu

இப்போ ஜீன் (GENE) அப்படிங்கறது, என்னன்னா இந்த நீளமான DNA வுல எந்த பகுதி புரோட்டீன் பத்தின செய்திய கொண்டது, எந்த பகுதி ஒரு வேலை செய்யும் திறனுள்ள புரோட்டீனை உருவாக்க அடிப்படையா இருக்குதோ அது ஜீன். இந்த DNA வோட எந்த எடத்துல இருந்தும் ஆரம்பிக்கலாம்.ஒரு ஜீன் முடியிற இடத்துல இருந்துதான் இன்னொரு ஜீன் ஆரம்பிக்கணும் அப்படின்னு எல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு ஜீனோட பாதியில இருந்து ஆரம்பிச்சி அடுத்த ஜீனோட பாதியில கூட முடியலாம். இதனால ஒன்னும் பிரச்சனை எல்லாம் இல்லை. ஏன்னா இந்த ஜீன்கள் அந்த குறிப்பிட்ட புரோடீனோட தேவை எப்போ இருக்கோ அப்போ மட்டும் தான் அது ஜீன். மத்த நேரத்துல அது சாதாரண DNA அவ்ளோதான்.

இப்போ குரோமோசோம் அப்படினா என்ன...? சாதாரண நிலையில செல்லின் உட்கருவுக்குள்ள, இரட்டை ரிப்பன் அமைப்பு (டபுள் ஹெலிக்ஸ் - DOUBLE HELIX)  DNA  ஒரு வலை பின்னல் மாதிரி  சுத்தி சுத்தி இருக்கும். இதுவே, அந்த செல் ரெண்டா பிரியிற நிலைக்கு வந்ததும் (BY MITOSIS OR MIOSIS ) முதல்ல செல் உறுப்புகள் எல்லாம் உட்கரு சென்ட்ரோசோம் தவிர அப்படியே சைட்டோபிளாசம்ல கரைஞ்சிடும். சாதாரண நிலையில ஒரு வலை பின்னல் மாதிரி  இருந்த DNA ரெப்ளிகேட் ஆகி புது செட் DNA உருவாகும். இந்த தாய் DNA, நகல் எடுக்கப்பட்ட புது செட் DNA ரெண்டும்  டைட்டா பேக் ஆகி ஜோடி குரோமோசோம் ஆக  மாற்றப்படும்.



THANKS TO: rikenresearch.riken.jp

இதை நான் சுலபமா சொல்லிட்டனே தவிர இந்த குரோமோசோம் மாறும் இந்த வேலை மிகவும் சிக்கலானது. இந்த ஜோடி குரோமோசோம் தான் செல் பிரியும் போது புது செல்லுக்குள் அனுப்பப்படும். புது செல்லுக்குள் போன பிறகு, இந்த குரோமோசோம் மறுபடியும் வலை பின்னல் DNA போல மாறி, அந்த புது செல்லுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி கொள்ளும்.

அப்போ, RNA அப்படிங்கறது என்ன...? RNA என்பது நியுக்ளிக் அமிலங்கள்ல ஒன்னு... DNA வோட பார்ட்னர் அப்படின்னு சொல்லலாம். DNA புரோட்டீன் உருவாகுதுன்னு பார்த்தோம். அப்படி உருவாகற புரோட்டீன் DNA வுல இருந்து நேரிடையா வராது. DNA வுல இருக்கிற புரோட்டீனுக்கான செய்தியை RNA வா மாத்தி (TRANSCRIPTION) அந்த RNA வுல இருந்து தான் புரோடீன் (TRANSLATION) வரும். இது எதுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலைன்னு கேள்வி வருது இல்ல...? நம்ம சிஸ்டம்ல இருக்கிற எந்த ஒன்னும் தேவையில்லாம நடக்கிறது இல்ல. இது நமக்கு நல்லாவே தெரியும்.

ஒரு ஜீன் அப்படிங்கறது புரோடீன் செய்தியை கொண்ட பகுதி (எக்சான் - EXON  அப்படின்னு பேரு இதுக்கு) மட்டும் இல்லாம எந்த ஒரு செய்தியையும் கொண்டிராத வெறும் நியுக்ளியோடைடுகளை கொண்ட வெற்று செயினும் (இன்ட்ரான் - INTRON)  சேர்ந்தது. அதாவது முதல் சிறு பகுதியில செய்தி இருக்கும். அடுத்த சிறு பகுதி வெற்று செயின்.. மறுபடியும் சிறு பகுதி செய்தியோடும், அடுத்தது வெற்று என மாறி மாறி இருக்கும்... இந்த நிலையில ஒரு முழு புரோட்டீனை உருவாக்க முடியாது. ஸோ, முதல்ல இரட்டை ரிப்பன் அமைப்புல இருக்கிற ஜீன் DNA அந்த இடத்தில் மட்டும் பிரிந்து ஒற்றை செயினாகி அதில் இருந்து RNA வா ட்ரான்ஸ்கிரைப் பண்ணும்போது, இந்த எக்ஸ்ட்ராவா இருக்கிற அந்த INTRON நீக்கப்பட்டு, முழு செய்தியும் RNA வா மாற்றப்படும். இந்த RNA மெஸேஞ்சர் RNA - mRNA அப்படின்னு பேரு.

THANKS TO: wikimedia.org

புரோட்டீன் அப்படிங்கறது அமினோ அமிலங்களை செயின் மாதிரி கோர்த்த அமைப்புன்னு உங்களுக்கு தெரியும். மேல சொன்ன, mRNA வுல இருக்கிற செய்திக்கு ஏற்ப ஒவ்வொரு அமினோ அமிலமா கொண்டுவது கோர்த்தா முதல் நிலை புரோட்டீன் தயார். முதல் நிலை புரோட்டீன் அப்படினா என்னன்னு தெரியாதவங்க இங்க பார்க்கலாம். இந்த மைனோ அமிலங்களை அதனுடைய சேமிப்பிடத்துல இருந்து கொண்டு வரும் வேலையை செய்யிறது டிரான்ஸ்பர் RNA - tRNA.

அடுத்தது rRNA அப்படின்னு சொல்லப்படற ரைபோசோமல் RNA - RIBOSOMAL RNA . இது ரைபோசொம் அப்படிங்கற செல் உறுப்பு தன்னோட வேலை செய்ய உதவி செய்யிது. இந்த ரோபோசொம் தான் mRNA வுல இருக்கிற உருவாகற புரோட்டீன் எப்படி இருக்கணும் அப்படிங்கற செய்தியை படிக்கும் வேலையை செய்யும். அதன் படி tRNA அமினோ அமிலங்களை கொண்டுவர, புரோட்டீன் உருவாக்கும் வேலை நடைபெறும். இது தான் RNA வோட வேலை.

புரோட்டீனுக்கான செய்தி இந்த ஜீனில் எப்படி இருக்கும்...? ஜீன் அப்படிங்கறது DNA தான் இல்லையா...!!! அது நியுக்ளியோடைடுகளால் ஆனது. இந்த DNA வானது  நியுக்ளியோடைடுகளை  வரிசையா கோர்த்து DNA அதாவது ஜீன் உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த வரிசை தான் செய்தி. வரிசையா இருக்கிற நியுக்ளியோடைடுகளை மூணு மூணு நியுக்ளியோடைடா பிரிச்சா அது தான் செய்தி. அதாவது முதல் மூணு நியுக்ளியோடைடு ஒரு அமினோ அமிலத்தை குறிக்கும். அடுத்த மூணு அடுத்த அமினோ அமிலத்தை குறிக்கும். ஸோ, எந்த மூணு நியுக்ளியோடைடு இருந்தா என்ன அமினோ அமிலம் வரும் அப்படின்னு நம்ம விஞ்ஞானிகள் ஏற்கனவே ஆராய்ச்சி செய்து கண்டு பிடிச்சி வெச்சிருக்காங்க. இந்த புரோட்டீன் செய்தியை கொண்ட ஒவ்வொரு மூணு நியுக்ளியோடைடும் ஒரு கோடான் அப்படின்னு அழைக்கப்படும்.



THANKS TO: accessexcellence.org

ஸோ, ஒரு ஜீன் ட்ரான்ஸ்கிரைப் ஆகி mRNA வந்ததும், ரைபோசோம் அந்த mRNA மேல இணைந்து அந்த mRNA வோட நியுக்ளியோடைடுகளோட கோடான் வரிசையை படிக்கும். அதன் படி tRNA அந்த கோடான் வரிசைக்கேற்ப அமினோ அமிலங்களை கொண்டு வந்து கோர்த்து முதல் நிலை புரோட்டீன்களை உருவாக்கும். அப்புறமா, இந்த புரோட்டீன் செயல் திறன் உள்ள புரோட்டீனாக உருவாக்கப்படும்.  

அடிப்படை உயிர் வேதியியலில் இன்னும் கொஞ்சம் புது விஷயங்களை பார்த்திருக்கோம் இன்னைக்கு. அடுத்த பதிவுல சிந்திப்போம்.










8 comments:

  1. நல்ல பதிவு ...
    உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

    To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button


    Thanks,
    Krishy

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...!!!

      நான் உங்க திரட்டியில் சேரவே விரும்பறேன்... ஆனா, உங்க அந்த கண்டிசன்ல விருப்பம் இல்லை... வேணும்ன்னா, சில குறிப்பிட்ட உதாரணத்துக்கு தொழில்நுட்பம், அறிவியல் மாதிரி சில அரிய களத்தில் எழுதுபவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம்.

      ஒட்டு பட்டை எனது வலைப்பூவில் இணைக்க முடியவில்லை... எனக்கு இந்த மாதிரி டெக்னிகல் விசயங்களில் தகுந்த அறிமுகம் இல்லை... தெரிஞ்சிக்கிட்டு சீக்கிரமே, செய்துக்கறேன்...

      மறுபடியும் நன்றி உங்களுக்கு...!!!

      Delete
  2. Replies
    1. நன்றி பாலா... அடிக்கடி வந்து உங்க விமர்சனங்களை சொல்லுங்க....

      Delete
  3. Replies
    1. Thank your very much for your visit here and for your comment sir...!!!

      Delete
  4. Nanbaa Super aaa na visayam... enku ithana naal ipdi oru site irukkunnu theriaathu... ippa thaan paakkuran... Tq so much....

    ReplyDelete
  5. பயனுள்ள பாடம்

    ReplyDelete