Friday, March 9, 2012

புதுசா ஒரு ஆட்டம் ஆரம்பம்...!!!


புதுசா எழுத ஆரம்பிக்கிற எல்லாரும் செய்யிற மாதிரியே, நானும் ஆரம்பிக்கிறேன்... இல்லன்னா ப்ளாக் வசதி குடுக்கற கூகிள் சாமி கனவுல வந்து கண்ணை குத்துவார் அப்படின்னு கெட்டவங்க இல்ல இல்ல கேட்டவங்க எல்லாரும் சொல்றாங்க.

எல்லாருக்கும் வணக்கம்.... நான் ஒரு உயிர்வேதியியல்ல MSC பண்ணிட்டு,
PhD பண்ணிட்டு இருக்கிற ஒரு ஆராய்ச்சி மாணவன். இதை தவிர பக்கம் பக்கமா சொல்ற அளவுக்கு இன்னும் பெருசா ஒன்னும் சாதிக்கல.... நம்ம ப்ளாக் எழுதற முன்னோர்கள்ள ஒருத்தரோட பழைய பதிவு ஒன்னுல மாசம் பத்து பேரு பதிவு எழுத வரதாவும், ஆனா வந்த வேகத்திலேயே காணாம போயிடரதாவும் சொன்னத நேத்து தான் படிச்சேன்... அவரு வாய்க்கு சக்கரத்தான் போடணும்... அப்படி வந்து காணாம போனதுல இந்த சின்ன பையனும் ஒருத்தன்...

இப்போ இந்த ப்ளாக் பத்தியும் சொல்லிடறேன்... உயிர்நுட்பம் அப்படின்னு பேர  பார்த்திட்டு, இது ஏதாவது காயகல்ப்பம் மேட்டரோ இல்ல, நான் நாராயண ரெட்டி, மாத்ரு பூதம் டைப்போன்னு அவசரப்பட்டு உள்ள வர வேண்டாம்...

இது என்ன டைப்புன்னு புரியவெக்கிறதுக்கு முன்னாடி என்னோட சில கேள்விக்கு பதில் சொல்ல முடியுமான்னு பாருங்க...

1 . உலகத்திலேயே பெரிய தொழிற்சாலை எதுன்னு தெரியுமா?
2. வெய்யில்ல விளையாடிட்டு வர்ற சின்ன பசங்க ராத்திரில பாத்ரூம்
    போயிட்டு வலிக்குதுன்னு சொல்லி அழுவாங்களே, அது எதனாலன்னு
    தெரியுமா...? அதுவே, நெறைய தண்ணி குடிச்சது கொஞ்ச நேரத்தில சரியா
    ஆயிடுத்தே, அது ஏன்...?
3. நெறைய சத்துள்ள ஆகாரம் சாப்பிடனும், ப்ரோடீன் இருக்கணும்...
     விட்டமின் இருக்கணும்... மினரல் இருக்கணும் அப்படின்னு
     சொல்றாங்களே, ஆனா அதெல்லாம் எங்க எதுக்கு பயன்படுதுன்னு
     தெரியுமா..?

தெரிஞ்சவங்க உங்களுக்குள்ள வெச்சிக்கோங்க... தெரியாதவங்க என்னை பாலோவ் பண்ணுங்க... சீக்கிரமா சிந்திப்போம்...!