Monday, April 9, 2012

ஒரு நிஜ முன்னுரை


விளையாட்டு போதும் மக்களே... நான் இங்க என்ன எழுத போறேன்...? ஏன் எழுத போறேன்... ? அதை சொல்லிட்டு மேல போகலாம்ன்னு இருக்கேன்... இத எழுத ஆரம்பிச்சதுக்கு நிஜமான காரணம் ஒன்னு இருக்கு... நான் ஒரு M .Sc உயிர் வேதியியல் முடிச்சிட்டு, இப்போ PhD பண்ணிட்டு இருக்கற ஒரு ஆராய்ச்சி மாணவன்.

எல்லாருக்கும் இருக்கிற மாதிரி, எனக்கும் ஏதாவது பேரு சொல்ற மாதிரி என்னோட profession -ல ஏதாவது சாதிக்கணும் அப்படிங்கற எண்ணம் உண்டு. சமீபத்தில, என்னோட காலேஜ் லெக்சர்ஸ், இப்போ லெக்சரா இருக்கிற என்னோட கிளாஸ் மேட்ஸ் அப்படின்னு சில பேர்கூட பேசற வாய்ப்பு கெடச்சது... அப்போ அவங்க சொன்ன சில தகவல்கள் கேட்டப்போ ரொம்ப வருத்தமாவும், வேதனையாவும் இருந்தது. அது தான் இந்த ப்ளாக் நான் எழுத ஆரம்பிச்சதுக்கு காரணமா அமைஞ்சது. சரி... சர்ர்ர்ரிஈஈ..... விசயத்துக்கு வான்னு நீங்க சொல்றது என் காதுல விழுது.... (அப்படி சொல்றதுக்கு இன்னும் என்னை யாரும் பாலோவ் பண்ணல... இருந்தாலும் நாமலே சொல்லிக்க வேண்டியது தான்).

நமக்கு ஒடம்புல எதுவும் பிரச்சனைன்னா, டாக்டர் போய் பார்ப்போம்.... (கவனிக்க, டாக்டர் விஜய்/விஜயகாந்த்/விக்ரம் அல்ல). அவரும் நம்மள டெஸ்ட் பண்ணிட்டு மருந்து மாத்திரை எல்லாம் குடுத்து அனுப்பிடுவாரு... நமக்கும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடும்... ஸோ, நம்மள பொருத்தவரைக்கும் டாக்டர் அப்படிங்கரவரு தான் எல்லாம் தெரிஞ்சவர்... டாக்டர் படிப்பு தான் எல்லாத்தையும் விட பெரிய படிப்பு... ஆனா, டாக்டர் படிப்ப விட பெருசு ஒன்னு இருக்குன்னு யாருக்காவது தெரியுமா...? அந்த டாக்டருக்கே அப்பன் ஒருத்தன் இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா... ?

சஸ்பென்ஸ் போதும் இல்லையா...  அது தான் biochemistry அப்படின்னு சொல்லப்படும் உயிர் வேதியியல்.... ஒரு டாக்டரால ஒடம்புல என்ன பிரச்னை அப்படின்னு மட்டும் தான் சொல்ல முடியும்... அதுக்கும் ஒரு biochem படிச்ச ஒருத்தங்களோட துணை வேணும்... அவங்க நமக்கு குடுக்கற மருந்துகள் எல்லாமே ஒரு biochem படிச்ச ஒருத்தங்க தான் கண்டு பிடிசிருப்பாங்க... 

சுருக்கமா சொல்லனும்ன்னா எப்படி ஒரு விவசாயியால மட்டும் தான் நெல் விளைய வைக்க முடியுமோ, அது மாதிரி ஒரு biochem படிச்ச ஒருத்தரால மட்டும் தான் ஒரு சிகிச்சை முறையோ அல்லது ஒரு மருந்தோ கண்டுபிடிக்க முடியும்... இன்னும் சொல்லனும்ன்னா டாக்டர் பூசாரி மாதிரி... biochem படிச்சவங்க கடவுள் மாதிரி... ஒரு வியாதிக்கு உண்டான அறிகுறிகள், அதனால செல்லுக்குள் நடக்கும் மாற்றங்கள், அதுக்குண்டான கரணங்கள், அதுக்குண்டான மருந்துகள் அப்படின்னு எல்லாத்தையும் ஒரு biochem படிச்ச விஞ்ஞானி தான் கண்டு பிடிச்சி சொல்வாங்க... டாக்டர் அதுக்கேத்த மாதிரி நடந்துப்பாங்க... சில டாக்டர்களே கூட கண்டு பிடிக்கறாங்க...ஆனா அவங்களும் biochem படிச்சவங்களா தான் இருப்பாங்க... 

ஆனா, இத்தனை சிறப்பு வாய்ந்த படிப்பை படிக்க இப்போ நம்ம தமிழ்நாட்டுல ஆள் இல்லை... படிக்கற சில பெரும் பொறியியல், மருத்துவம் படிக்க வசதியில்லாம, இடம் கிடைக்காம, வேற வழியில்லாததால படிக்க வந்தவங்க.... நெறைய கல்லூரிகள்ல இந்த டிபார்ட்மென்ட் மூடப்பட்டிட்டு இருக்கு... சில கல்லூரிகள்ல சீக்கிரமா மூடப்போறாங்க... எனக்கு தெரிஞ்ச ஒரு சில கல்லூரிகள்ல ஒரு வகுப்பறைக்கு 2 பேர் தான் படிக்கறாங்க... இப்படியே போனா இன்னும் ஒரு பத்து வருசத்தில, நம்ம இந்தியாவில ரிசர்ச் பண்ண ஆளே இருக்க மாட்டாங்க... 

அதுக்கு காரணம் இல்லாம இல்லை... நம்ம மக்களுக்கு இத பத்தின விழிப்புணர்வு கிடையாது... மருத்துவம்/பொறியியல் தாண்டி இன்னும் நாம யோசிக்க துவங்கல.... அதுவும் நாம தமிழ்நாட்டுல முக்கால்வாசி பேர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க... ஒரு பேச்சிலர் டிகிரி மாஸ்டர் டிகிரி படிக்க 5 வருஷம் ஆகும்... இந்த துறையில குறைஞ்சது PhD முடிச்சா தான் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியும்... அதே ஒரு எஞ்சினியர் படிப்பு படிக்க 4 வருஷம் தான் ஆகும்... படிச்சி முடிச்சதும் வேலை கிடைக்கும்...  வேலை வாய்ப்புகளும் குறைவு... (துரதிஷ்டவசமா, இந்தியா முழுவதும் இந்த பீல்டுல இருக்கற கம்பெனிங்க சொற்பம் தான்...) நம்ம அரசாங்கத்துக்கு இப்படி ஒரு படிப்பு தமிழ்நாட்டுல இருக்கான்னு தெரியுமான்னே தெரியல...

சரியா 10 - 12 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல நடந்திட்டு இருந்த சிசு கொலைகள் பத்தி யாரும் மறந்து இருக்க முடியாது... அப்போ நடந்த அதனோட விளைவு இப்போ தமிழ்நாட்டோட ஆண் - பெண் விகிதத்தை எவ்வளவு பாதிச்சிருக்குன்னு நாம கண்கூடா பார்க்கறோம் (கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்கலன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் அழறாங்க மக்களே...) அதே மாதிரி தான் இப்போ பீல்ட்ல இருக்கற விஞ்ஞானிங்க எல்லாம் போன 10 - 15  வருசத்தில படிப்பு முடிச்சி வேலைக்கு வந்தவங்க... ஆனா இப்போ இருக்கற நிலைமை அப்படியே தொடர்ந்தா இவங்களுக்கு அப்புறம் அதாவது இன்னும் ஒரு 10 வருசத்துக்கு அப்புறம் நிலைமை எப்படி இருக்கும்ன்னு நினச்சி பாருங்க, நான் என்ன சொல்ல வரேன்னு தெரியும்!!!!!

நமக்கு தேவையான மருந்துகள் கண்டு பிடிக்க நம்ம நாட்டில ஆள் இருக்க மாட்டாங்க... நாம் ஒவ்வொரு விசயத்துக்கும் அடுத்த நாட்டு விஞ்ஞானிங்க கையை தான் எதிர்பார்க்க வேண்டி இருக்கும்... ஏன்னா வெளிநாடுகள் பொருத்தவரையில இந்த படிப்பு மருத்துவம், பொறியியல் விட முக்கியமானது... அதை படிக்கறவங்க எண்ணிக்கை மருத்துவம், பொறியியல் படிக்கறவங்களை விட அதிகம்....

 அதனால, எதோ என்னால முடிஞ்சா வரையில படிச்சவங்க மத்தியில இந்த படிப்ப பத்தின விவரங்கள நம்ம பதிவுலகம் மூலமா சொல்லி ஒரு விழிப்புணர்வு எற்படுத்தலாம்ன்னு இருக்கேன்... ஆதரவு கொடுங்க மக்களே...!!!!!!!







11 comments:

  1. Replies
    1. Thank you Rajan to visit here and for your comment as well.

      Delete
  2. Nice article.Please continue your effort it is really helpful.One request can you say English equivalent word for tamil word (li kidney for kalleral hope i am right) . i would really appreciate that.

    Thanks

    Swami

    ReplyDelete
    Replies
    1. திரு சுவாமிநாதன்,
      உங்க யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னூட்டத்திற்கு, மிக்க நன்றி. ஆனா, கல்லீரல் என்பது liver. KIDNEY தமிழில் சிறுநீரகம் அப்படின்னு சொல்லப்படுது.

      Delete
    2. Thanks.See how ignorant I am in tamil meanings.

      Swami

      Delete
  3. Replies
    1. thank you simple man. please keep comment on my posts. that makes me to present good job here.

      Delete