Friday, April 20, 2012

அப்பெண்டிசைடிஸ் - குடல் வால் நோய்

நண்பர்களே,

இன்னிக்கு நாம பார்க்க போறது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான்.  ஆனா, நாம போன பதிவுல பார்த்த செல்லுலோஸ் மற்றும் செல்லுலேஸ் என்சைமோட தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான தகவல்.

Appendicitis - அப்பெண்டிசைடிஸ் - குடல் வால் நோய்

நாம எல்லாரும் இதை பத்தி கேள்விப்பட்டு இருப்போம். தீராத வயிறு வலின்னு ஹாஸ்பிடல் போயிட்டு அப்பெண்டிசைடிஸ் அப்படின்னு சொல்லி ஆப்பரேசன் பண்ணிக்கிட்டவங்க நெறைய பேரு. அப்பெண்டிசைடிஸ் பிரச்சனையினால உயிரையே விட்டவங்களும் இருக்காங்க.  

ஸோ.... அதென்ன அப்பெண்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் நோய்...? உயிரே போகற அளவுக்கு அது என்ன அப்படி ஒரு முக்கியமான விஷயம்? தெரிஞ்சிக்க மேல போகலாம்.

நம்ம வயித்துல சிறு குடலும் பேரு குடலும் இணையிற இடத்தில ஒரு சின்ன வால் மாதிரி நீட்டிக்கிட்டு இருக்கறது தான் குடல் வால் ஆங்கிலத்துல அப்பெண்டிக்ஸ் (appendix).



குடல்ல இருந்து வால் மாதிரி வெளியே நீட்டிக்கிட்டு இருக்கறதால அதுக்கு இந்த பேரு வந்திருக்கலாம்ன்னு அனுமானிப்போம். இது நம்ம உடல்ல இருக்கிற ஆனா நாம பயன்படுத்தாம  இருக்கிற ஒரு உறுப்பு. இதை பத்தி ஒரு சுவாரஸ்யமான தகவல்கள்  தான் இன்னிக்கி நாம பாக்க போறது. 

நாம எல்லாரும் அடிக்கடி சொல்ற அல்லது நம்மக்கிட்ட சொல்லப்படற ஒரு விஷயம், எந்த ஒரு பொருளையும் நாம ரொம்ப நாள் பயன்படுத்தாம வெச்சிருந்தா, அது கெட்டு போயிடும் இல்லை ரிப்பேர் ஆயிடும். அது பொருளுக்கும் மெசினுக்கும் மட்டும் இல்லை, நம்ம உடலுக்கும் பொருந்தும். எந்த ஒரு உறுப்பு நாம முழுதுமா பயன்படுத்தாம இருக்கிறோமோ, அந்த உறுப்பு நம்மளோட அடுத்த பரிணாம வளர்ச்சியின்போது சின்னதாவோ, இல்ல காணாமலோ போயிட வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி, எந்த உறுப்பை நாம தொடர்ந்து பயன்படுத்தரமோ அது நம்மளோட அடுத்த பரிணாம வளர்ச்சியில பெருசா வளரலாம். இப்போ இருக்கிற வாழ்க்கை சூழலை வெச்சி பார்க்கும்போது அப்படி நம்மளோட அடுத்த பரிணாம வளர்ச்சியில பெருசா வளரும்ன்னு எதிர்ப்பார்க்கிற ஒன்னு நம்மளோட மூளை. காணாம போயிடும்ன்னு எதிர்ப்பார்க்கிற ஒன்னு நம்மளோட தலைமுடி.

அப்படி காலம் காலமா மனிதன் பயன்படுத்தாம விட்டு சைஸ்ல சின்னதா போயிட்ட ஒரு உறுப்பு தான் இந்த குடல் வால் எனப்படும் அப்பெண்டிக்ஸ். ஆனா, இப்பவும் இது விலங்குகள்ல பயன்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு. மனிதன் ஒரு முழு மனிதனாக பரிணாம வளைச்சி அடையாம விலங்காகவே இருந்தப்பவும், பின்னாடி விலங்குகள் மாதிரி காடுகள்ள வாழ்ந்தப்பவும் இந்த உறுப்பு முழுமையா பயன்பாட்டில தான் இருந்தது. 

அதாவது, அப்போ இருந்த விலங்குகளும், விலங்குகள் மாதிரி இருந்த மனிதனும் எந்த ஒரு உணவையும் சைவம், அசைவம் ரெண்டையும் சமைக்காம அப்படியே சாப்பிட்டு இருந்தாங்க. இதில அசைவ உணவில  எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா சைவ சாப்பாட்டுல ஒரு பிரச்சனை இருந்தது. அசைவம் எனப்படும் இறைச்சி என்பது விலங்கு செல்களால் ஆனது. சைவம் என்பது தாவரங்கள். இந்த தாவர செல்கள்ள, விலங்கு செல்களில் இல்லாத ஒன்னு எக்ஸ்ட்ராவா இருக்கு. அதுதான் பிரச்னைக்கு காரணம். அது.... செல் சுவர்.

இந்த செல் சுவர் அப்படிங்கற மேட்டர் விலங்கு செல்கள்ள இல்லாததால, நம்ம ஜீரண மண்டலம் அதுகிட்ட இருக்கிற என்சைம்களை வெச்சே ஈசியா ஜீரணம் பண்ணிடும். ஆனா, இந்த செல்சுவர் கிட்ட நம்ம ஜீரண மண்டலத்தோட ஜம்பம் பலிக்காது. ஏன்னா, செல் சுவர் செல்லுலோஸ் அப்படிங்கிற பாலி- சாக்ரைடால (போன பதிவுல தான் பார்த்தோம்)  ஆனது.

இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண செல்லுலேஸ் அப்படிங்கற ஸ்பெசல் என்சைம் வேணும். இந்த ஸ்பெசல் என்சைமை உற்பத்தி செய்யக்கூடிய உறுப்பு தான் இந்த குடல் வால்.  மத்த என்சைம்கள் இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண முடியாததற்கு காரணம் செல்லுலோஸின் குளுகோஸ் மூலக்கூறுகள் ஒன்னுக்கொன்னு பிணைக்கப்பட்டு இருக்கிற பிணைப்பு வேறுவிதமானதா இருக்கிறது தான். (போன பதிவுல போட்டிருக்கிற படத்தை எடுத்து பார்த்திங்கன்னா ஸ்டார்ச்லயும் செல்லுலோஸ்லயும் இருக்கிற பிணைப்பு வேறுபடறது தெரியும். இந்தமாதிரி ஒவ்வொரு பிணைப்பும் அதுக்கான தனிப்பட்ட என்சைமால மட்டும் தான் உடைக்க முடியும்.

ஓகே...மேட்டருக்கு வருவோம். அப்படி மனிதன் தன்னோட சாப்பாட்டை சமைக்காம சாப்பிட்டு இருந்த அந்த காலத்துல இந்த குடல் வால் தாவர உணவுல இருக்கும் செல்லுலோசை ஜீரணம் பண்ணக்கூடிய செல்லுலேஸ் அப்படிங்கிற என்சைமை உற்பத்தி பண்ணும் வேலையை செய்துட்டு இருந்தது. காலப்போக்குல, நெருப்பை கண்டுபிடிச்ச மனிதன் தன்னோட உணவை சமைக்க ஆரம்பிச்சதும் இந்த என்சைமுக்கு வேலை இல்லாம போயிடுச்சி. சமைக்கும்போது அந்த வெப்பத்துல, செல்லுலோஸ் தானாவே உடைந்து விடும்.

பல ஆயிரகணக்கான வருசங்கள் போனபிறகு, என்ன ஆச்சின்னா, இந்த குடல் வால் படிப்படியா வேலையிழந்து, தன்னோட உருவம் இழந்து கடைசியா தான் ஒரு காலத்துல இருந்ததுக்கு அடையாளமா, இன்னமும் சின்ன வால் மாதிரி அந்த இடத்துலேயே ஒட்டிக்கிட்டு இருக்கு. இப்போ நாம சமைக்காம சாப்பிடற சில தாவர உணவுகள்ள இருக்கிற செல்லுலோஸ் ஜீரணம் ஆகாம வெளியேற்றப்படுது. ஆனா, விலங்குகள் இன்னமும் தாவர உணவை அப்படியே சாப்பிடறதால இன்னமும் இந்த குடல் வால் அப்படியேதான் இருக்கு. (மேட்டர் சூப்பரா இருக்கா....? )

அப்பண்டிசைடிஸ் அப்படிங்கறது என்னன்னா,  இந்த குடல் வால் சிறு குடலும் பெரும் குடலும் இணையிற இடத்துல இருக்கறதால, நம்ம குடலுக்குள்ள இருக்கிற கழிவு பொருள்கள்ல இருந்து சில சமயம் நோய் கிருமிகள் குடல் வாலுக்குள்ள போய் தொற்று நோயை உண்டாக்கி வீக்கம், வலியை குடுக்கும். ஒரு கண்டிசனுக்கு அப்புறம் இந்த குடல் வால் பெருசா வீங்கி வெடிக்கிற நிலைமைக்கு வந்திடும்.

நாம கண்டிப்பா அறுவை சிகிச்சை மூலமா இந்த நோய் தொற்றின பகுதியை நீக்கியே ஆகணும். இல்லன்னா, அது உடைஞ்சி, குடலுக்குள்ள இருக்கிற அத்தனை நோய் கிருமிகளும் ரத்தத்துல கலந்து, நம்ம மொத்த சிஸ்டமே ஸ்தம்பிச்சி உயிரே போயிடும். இது தான் அப்பண்டிசைடிஸ்.

இன்னிக்கு மேட்டர் ஓவர். எப்படி இருந்தது இன்னைக்கு பதிவு...? மறுபடியும் ஒரு சுவாரஸ்யமான பதிவோட சீக்கிரமே சந்திக்கலாம்.


 

8 comments:

  1. nice and informative.

    தங்கள் எழுத்து நடையும் , கருத்துக்களை கூறும் விதமும் பதிவுக்கு பதிவு மேம்பட்டு வருகிறது , வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர்...!!!

      நான் வெறும் பயோகெமிஸ்ட் மட்டும் தான். அதனால, ஒவ்வொன்னும் எழுதறதுக்கு முன்னாடி முடிஞ்சா வரைக்கும் படிச்சிட்டு தான் எழுதறேன். குறிப்பா, நோய்களை பத்தி எழுதும்போது. இருந்தாலும் ஏதாவது தவறுகள் வரலாம்.
      அப்படி எதுவும் இருந்தால் நீங்க கண்டிப்பா சுட்டிக்காட்டனும்.

      Delete
  2. WOW.. I was surprised to read the history of the Appendix. Thanks for this useful information.. continue your great work. Thanks

    ReplyDelete
    Replies
    1. thank you...

      keep reading... still we have a lot of surprise to experience here...

      Delete
  3. அப்பண்டிஸ் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டாச்சு பாஸு...!!! நன்றி...!!!

    ReplyDelete
  4. nanraierukkirathu

    ReplyDelete
  5. Dear writer,

    Thanks for sharing this useful and interesting information.

    Keep it up.

    KO

    ReplyDelete