Saturday, April 28, 2012

இரத்தம் - ஒரு சிறப்பு அறிமுகம்...!!!


மக்களே...!!!!

நம்மளோட செல் அமைப்பு பத்தின பதிவு கிட்டத்தட்ட ரெடி ஆயிடுச்சி... அனேகமா அடுத்த பதிவு அதுவா இருக்கலாம். அதுவரைக்கும் எழுதறதை நிறுத்தாம, சின்ன சின்ன விசயங்களை எழுதிட்டு இருக்கேன். முடிஞ்ச வரைக்கும் நம்ம வலைப்பூவை சுவாரஸ்யமாகவும், அதே சமயம் பதிவுகளோட தரம் குறையாமலும் வெச்சிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

அதேபோல, எந்த ஒரு சின்ன விசயமா இருந்தாலும் எழுதறதுக்கு முன்னாடி, நெறைய படிச்சி, அந்த தகவல்களை சரி பார்த்து மட்டுமே எழுதறேன். இருந்தாலும் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கறதால, தவறுகள் கண்ணில் பட்டால் தயங்காமல் எனக்கு சுட்டிக்காட்டலாம். அதேபோல, உங்களுக்கு நான் எழுதற மேட்டர்ல, இன்னும் அதிகமா  தகவல்கள் தேவைப்பட்டாலோ, அல்லது உங்களுக்கு மேலதிக தகவல்கள் தெரியவந்தாலோ, எனக்கு தெரியபடுத்தினால் நானும் ஒரு புது விஷயத்தை கத்துக்குவேன்.

இன்னைக்கு நாம பார்க்க போறது இரத்தம் பற்றின சில முக்கியமான தகவல்கள்.  நம் முகத்தை பார்க்கிற சாதனம் கண்ணாடின்னா, இரத்தம் தான் நமக்கு நம்மளோட உடல் நிலையை காட்டுற கண்ணாடி. நம்ம உடம்புல, உடல் நிலையில, எந்த ஒரு சின்ன மாற்றம் நடந்தாலும் அது நம்மளோட இரத்தத்துல தெரிஞ்சிடும். அது எப்படி...? இரத்தம் அப்படின்னா என்ன...? அதனோட வேலை என்ன...? நம்ம உடல்ல ரத்தத்தோட தேவை என்ன...? இது தான் இன்னைக்கு நம்மளோட பதிவு...!!!

நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் நம்மளோட ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு செல்லும் இரத்தத்தால ரத்தகுழாய் மூலமா பிணைக்கப்பட்டு இருக்கு. அதேமாதிரி, தெரிஞ்ச இன்னொரு விஷயம் நம்ம செல் எந்த வேலை செய்யறதா இருந்தாலும் அதுக்கான ஒரு புரோடீனை உருவாக்கி அதை தேவைப்பட்ட இடத்துக்கு அனுப்பி தன்னோட வேலையை முடிச்சிக்கும் இல்லையா...? 

இந்த ரெண்டு விஷயம் தான் ரத்தத்தை ஒரு முக்கியமான அதாவது என்னோட ஸ்டேட்மென்ட்படி ரத்தத்தை ஒரு முக்கியமான நோய் பரிசோதனை  (diagnostic  tool ) பொருளாக மாற்றி உள்ளது. இன்னும் விளக்கமா சொல்லனும்ன்னா, ஒரு நோய் அப்படிங்கறது என்ன...? நம்ம உடலோ அல்லது அதன் ஒரு உறுப்போ அல்லது உடலின் செல்களோ தன்னோட குறிப்பிட்ட வேலையை தன் இயல்பு நிலை மாறி செய்தா இன்னும் சிம்பிளா சொல்லனும்ன்னா, உடலோ உறுப்போ இல்லை செல்லோ எதோ ஒரு காரணத்தால, தன்னோட வேலையை நார்மல் அளவை விட கூடியோ அல்லது குறைவா செய்தா அது ஒரு நோய்க்கான அறிகுறியா இருக்கலாம். (சில விதிவிலக்குகள் உண்டு. அதை நாம இப்போ கணக்குல எடுத்துக்க வேணாம்). அந்த எதோ ஒரு காரணம் எதுவா வேணும்ன்னாலும் இருக்கலாம்.

இப்போ, திடீர்ன்னு ஒருத்தருக்கு நெஞ்சு வலி... அது சாதாரண வாயு பிடிப்பாகவும் இருக்கலாம் அல்லது ஹார்ட் அட்டாக் ஆகவும் இருக்கலாம்... இப்போ டாக்டர்க்கிட்ட போனா அவங்க ECG, ஆஞ்சியோகிராம் (ANGIOGRAM) எல்லாம் பண்ணுவாங்க... அதே மாதிரி ப்ளட் டெஸ்ட்டும் பண்ணுவாங்க... அந்த இரத்த பரிசோதனை எவ்வளவு முக்கியமானது...? அந்த ரத்தத்துல என்ன தெரியும் அப்படிங்கறது தான் நமக்கு ரொம்ப முக்கியம் இப்போ... அதாவது இதயத்துல ஏதாவது அடைப்போ அல்லது வேற ஏதாவது ஒரு காரனத்தினாலோ, இதயத்துக்கு வரவேண்டிய ரத்த சப்ளை நின்னு போச்சின்னா, இதயத்தோட செல்கள் பிராண வாயு கிடைக்காம சேதமாகி  செத்து போகும்... அப்படி சேதமடையும் போது, செல் உடைந்து, செல்லுக்குள் இருக்கிற எல்லா புரோடீன்களும் ரத்தத்துல கலந்திடும். அப்படி கலக்கிற புரோடீன்களில் இதய செல்களில் மட்டுமே கிடைக்கிற சில புரோடீன்களும் இருக்கும். அதாவது இந்த வகை புரோடீன்கள் இதய செல்களை தவிர வேற எங்கேயும் இருக்காது.   இது தான் இந்த ரத்த டெஸ்ட்டுக்கு அடிப்படை.

அதாவது, அந்த குறிப்பிட்ட புரோடீனால ஏதாவது ஒரு வேலை ஆகணும்ன்னா, இதய செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அந்த புரோடீனை தயாரித்து ரத்தத்தில் கலக்க வைக்கும். ஒரு நல்ல நிலையில் உள்ள மனிதனின் ரத்தத்தில் அந்த குறிப்பிட்ட அளவே அந்த புரோடீன் இருக்கும். இதுவே, இதய செல்கள் சேதமடைந்து அளவுக்கு அதிகமாக கலக்கும் போது இந்த அளவு அதிகரிக்கும். அப்படி ரத்தத்துல கலக்கும் அந்த குறிப்பிட்ட புரோடீனோட அளவை அளந்து அதை இயல்பான அளவோட ஒப்பிட்டு பார்த்து அது சாதாரண வலியா  அல்லது ஹார்ட் அட்டாக்கான்னு சொல்வாங்க. அப்படி ஹார்ட் அட்டாக்குக்காக ரத்தத்துல பார்க்க கூடிய புரோடீன் கிரியாடினைன் பாஸ்போ கைனேஷ் (creatinine phospho kinase), சுருக்கமா CPK.

ஏதாவது காரணத்தால் அந்த புரோடீனை இதய செல்கள் தயாரிக்க முடியாம போனாலும் அதுவும் ஒரு நோய் தான். இந்த நிலைமையில் மறுபடியும் ரத்த பரிசோதனை செஞ்சி நார்மல் அளவோட ஒப்பிட்டு பார்த்து கண்டு பிடிச்சிடுவாங்க. (அதுக்காக, உங்க கேர்ள் பிரண்டு பேசாம போனதுனால உங்க இதயம் வலிச்சா எல்லாம் இது மூலமா கண்டுபுடிக்க முடியாது)

அதனால, தான் நாம உடம்பு சரியில்லைன்னு போகும்போது டாக்டர் ரத்த பரிசோதனை செய்யனும்ன்னு சொல்றது இதனால்தான். ஆனா, என்னடா இது சாதாரண தலைவலி காய்ச்சலுக்கெல்லாம் இரத்தம் பரிசோதனை பண்ணனும்ன்னு சொல்றாங்களே அப்படின்னு நாம நெனப்போம். இதயம்ன்னு இல்ல, ஒவ்வொரு உறுப்புக்கும் அதுக்குன்னு சில குறிப்பிட்ட புரோடீன்கள் இருக்கு.

ஓகே... கதை சுருக்கம், முன்னோட்டம் எல்லாம் பார்த்தோம். இப்போ ரத்தத்தை பத்தி ஒரு விரிவான அலசல்...!!!

ரத்தம் நம்ம உடம்புல திரவ வடிவத்துல இருக்கிற, நெறைய புரோடீன்கள், கார்போஹைட்ரேட்ஸ், விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நிறைய விதமான செல்கள் அப்படின்னு பல பொருட்களை தனக்குள்ள கொண்டிருக்கிற ஒரு வஸ்து. நாம சாப்பிடற சாப்பாட்டுல இருக்கிற குளுகோஸ், புரோடீன், லிபிட் எல்லாம் முறையா ஜீரணம் ஆகி பயன்பாட்டுக்கு ரெடியா ஆனதும், ரத்தத்தின் வழியாதான் ஒவ்வொரு செல்லுக்கும் விநியோகம் நடக்கும். உடலோட ஒவ்வொரு செல்லும் தனிதனியா ரத்தத்தோட தொடர்பில் இருக்கும். இதை தவிர ஒரு முக்கியமான வேலை என்னன்னா, செல்கள் உயிரோட இருக்க தேவையான பிராண வாயுவை எடுத்திட்டு போய் செல்களுக்கு விநியோகிக்கிறதும், செல்கள் வெளியேத்துற கார்பன்-டை-ஆக்சைடை இதயத்துக்கு எடுத்திட்டு போய் வெளியேத்துறதும் இரத்தம் வழியாவே நடக்கும்.

ரத்தத்துல என்ன என்னவெல்லாம் இருக்கு....?
நம்ம அஜித் சிட்டிசன் படத்துல சொன்ன டையலாக் இங்க சரியா இருக்கும்ன்னு நெனக்கிறேன். இரத்தம் ஒரு தனி ஆளு இல்லை...!!! அதுக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு...!!! இரத்தத்தை ரெண்டு முக்கியமான பகுதியா பிரிக்கலாம்.... அது திரவ நிலையில இருக்கிற பிளாஸ்மா மற்றும் திட நிலையில இருக்கும் பல பொருட்கள் கலந்த கலவை.

பிளாஸ்மா:- இரத்தத்தை ஒரு பாத்திரத்துல வெச்சி கொஞ்ச நேரம் அப்படியே விட்டுட்டா, மேல வரும் திரவ பகுதி தான் இந்த பிளாஸ்மா. பிளாஸ்மாவோட 92 சதவிகிதம் வெறும் தண்ணி தான். மீதி 8 சதவிகிதம் சில ப்ரோடீன்கள், அமினோ அமிலங்கள் (இவை தான் புரோடீன்களோட அடிப்படை அலகு, புரோடீன் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்) கொழுப்பு  பொருள்கள். பிளாஸ்மாவோட வேலை என்னன்னா ஒரு செல்லுக்கு தேவையான சர்க்கரை, அமினோ அமிலங்கள், கொழுப்பு பொருள்கள் அப்படின்னு எல்லாத்தையும் கொண்டு போய் சேர்க்கறது.

இதுல இருக்கிற சில முக்கியமான புரோடீன்கள் என்னன்னா, ஆல்புமின், குளோபுலின் (செல் சுவாசிக்க தேவையான பிராண வாயு கொண்ட செல்ல பயன்படும்) , அப்புறம் இரத்தம் உறைய தேவைபடர சில புரோடீன்கள் அப்புறம் இரத்தத்துல இருக்கிற இரத்த செல்கள். இந்த இரத்த புரோடீன்களை பத்தி இன்னொரு பதிவுல விளக்கமா பார்க்கலாம்.

இரத்தத்தோட திட நிலை பகுதி அப்படிங்கறது, என்ன என்ன...? அது என்ன வேலை செய்யும்...?

இரத்தத்துல இருக்கிற திட நிலை பகுதியில முக்கியமான பகுதி இரத்த செல்கள்... நம்ம இரத்தத்துல,

சிவப்பு செல்கள் (RED BLOOD CELL OR ERYTHROCYTE) -

இது செல்களுக்கு தேவையான பிராண வாயுவை (ஆக்சிஜன் - OXYGEN) விநியோகிக்கிற மற்றும் செல்கள்ள உருவாகும் கார்பன் டை ஆக்சைட் திரும்ப கொண்டுவந்து இதயத்துல சேர்க்கிற வேலையை செய்யும். அதாவது சிவப்பு செல்கள்ள இருக்கிற ஹீமோக்ளோபின் அப்படிங்கிற சிவப்பு நிற நிறமி தான் இந்த வேலையை பண்ணும். அதேமாதிரி இந்த நிறமிதான்  ரத்தம் சிவப்பா இருக்க காரணம். ஒருவேளை இந்த நிறமி செயல் இழந்து போனாலோ அல்லது செத்து போனாலோ ரத்தம் தன்னோட சிவப்பு நிறத்தை இழந்திடும். அதுமட்டும் இல்லாம இந்த ஹீமோகுளோபின் செயல் இழந்து போனா, சிவப்பு செல்கள் அழிந்து போனா, செல்லுக்கு தேவையான பிராண வாயு கிடைக்காம இரத்தசோகை வரலாம். சில நேரம் மனிதன் உயிர் இழக்க கூட நேரலாம்.

சிவப்பு செல்களுக்கும் மத்த செல்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு... அது என்னன்னு தெரியுமா...? சிவப்பு செல்கள்ள உட்கரு எனப்படும் நியூக்ளியஸ் (NUCLEUS) கிடையாது.   உட்கரு இல்லாததால அது மத்த செல்களை போல உருண்டை வடிவமா இல்லாம தட்டையா இருக்கும். இந்த ஒரு செல்ல மட்டும் உட்கரு இல்லாம போனதுக்கு என்ன காரணம் அப்படின்னா, பிராண வாயுவை விநியோகிப்பதை தவிர அது வேற எந்த வேலையும் அது செய்வதில்லை அப்படிங்கிறதே காரணம்.

இன்னொரு வித்தியாசம் சிவப்பு செல்கள் உருவாகும் விதம். மத்த செல்கள் மாதிரி ரெண்டா பிரிஞ்சி புது செல்களை உருவாக்காது.  ஸ்டெம் செல்கள் (STEM CELL) அப்படிங்கிற தாய் செல்களில் இருந்து தான் புது ரத்த செல்கள் தேவைக்கு ஏற்ப வரும். இந்த முறையை பத்தி விளக்கமா இன்னொரு பதிவுல பார்க்கலாம்.

ஓகே ...இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி... ஒருவேளை ரத்தம் தன்னோட சிவப்பு நிறத்தை இழந்துட்டா அதனோட நிறம் என்னவா இருக்கும்...? மொதல்ல உங்க பதில்...அப்புறம் என்னோட கெஸ் என்னன்னு சொல்றேன்...

இரத்த வெள்ளை செல்கள் - WHITE BLOOD CELLS OR LEUKOCYTES -

வெள்ளை செல்கள்- இது உடலின் போர் வீரர்கள்...அதாவது நாம உடலை நோய் கிருமிகள் கிட்ட இருந்து காப்பத்தரவங்க. நம்ம உடலை அதாவது நம்ம செல்லை சேராத, வெளியே இருந்து எது நம்ம உடலுக்குள்ள பிரவேசிச்சாலும் உடனே இந்த செல்கள் கண்டுபிடிச்சிடும். அது எப்படின்னா, நம்ம உடல் தனக்குன்னு எந்த ஒரு புரோடீனை தயாரிச்சாலும் இந்த செல்களுக்கு முன்கூட்டியே காட்டிட்டு தான் வெளிய ரத்தத்துல கலந்து விடும். அதே மாதிரி எந்த ஒரு புது வெள்ளை செல் உருவானாலும் அந்த செல்லுக்கு நம்ம உடல்ல இருக்கிற அத்தனை புரோடீனையும் அறிமுகப்படுத்தி வெச்சதுக்கு அப்புறம் தான் தன்னோட பாதுகாக்கிற வேலைக்கு அனுப்பப்படும். இது எதுக்காகன்னா, இந்த செல்கள் உடலை பாதுகாக்கறேன்னு நம்ம புரோடீனையே அழிச்சிட கூடாது இல்லையா.... அதுக்கு தான்.


வெள்ளை செல்கள்ள நெறைய வகை இருக்கு. ஆனா நாம சில முக்கியமான சில செல்களை மட்டும் பார்க்கலாம்.


 1 . நியூட்ரோபில்ஸ் - NEUTROPHILS 
       - நம்ம உடம்புல எங்க அடிப்பட்டாலும் சரி, இல்ல எதுவும் நோய் கிருமி தொற்றா இருந்தாலும் சரி, அந்த இடத்துக்கு மொதல்ல வந்து வேலையை தொடங்கறது இதுதான் (PRIMARY RESPONSE ).

 2 . லிம்போசைட் - LYMPHOCYTES
       - இது தான் மெயின் பாதுகாவலர்கள்.   நியுட்ரோபில்ஸ் எதிர்கொள்ளும் கிருமிகள் அடுத்ததா லிம்போசைட்ஸ் கிட்ட தான் வரும். இந்த லிம்போசைட்ஸ் T செல், B செல் அப்படின்னு ரெண்டு வகை உண்டு.

இதுல T செல்கள் தானாவே அந்த கிருமிகளை கொல்லலாம்,  இல்லன்னா B செல்களை தூண்டிவிட்டு அந்த செல்களுக்கு எதிரான புரோடீன்களை (ANTIBODY) உருவாக்கி அதன்மூலமாவும் அழிக்கும்.  இப்படி உருவாகற புரோடீன்கள் நம்ம உடல்லே தங்கிடும். அதே கிருமி மறுபடியும் நம்மை தாக்கினா, இந்த தடவை ஈசியா அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். அம்மை, டைப்பாயிடு, மலேரியா மாதிரி நோய்கள் ஒரு தடவை வந்ததுன்னா, மறுபடியும் வராதுன்னு சொல்றது இதனால தான். இந்தமாதிரி ஒருதடவை தாக்கிட்டு போன கிருமிகளையும், அதுக்கு எதிரான புரோடீன்களையும் நினைவு வெச்சிக்க தனியா ஞாபக B செல்கள் (MEMORY CELLS) அப்படின்னே ஒன்னு தனியா நம்ம இரத்தத்துல இருக்கு. இதைதான் நாம நோய் எதிர்ப்பு சக்தி அப்படின்னு சொல்றோம்.  ஆனா, நோய் எதிர்ப்பு மண்டலம் (IMMUNE SYSTEM) நல்லா இல்லாதவங்களுக்கு எத்தனை தடவை வந்து போனாலும் பிரயோஜனம் இல்லை. 

வெள்ளை செல்கள் எண்ணிக்கையில கம்மியானாலோ, ஏதாவது ஒரு காரணத்தால் அழிந்து போனாலோ, மனிதன் எப்பவும் உடல் நலக்குறைவாகவே இருக்க நேரிடும்.  ஒரு நலிந்தவனை வரவன் போறவன் அடிக்கிற மாதிரி இருக்கிற எல்லா கிருமிகளும் உடலுக்குள்ள எட்டிப்பார்த்து ஹல்லோ சொல்லிட்டு போகும். அதுக்கு சரியான உதாரணம் எய்ட்ஸ். HIV கிருமி உடலுக்குள்ள வந்ததும் பண்ற முதல் வேலையே, நம்ம வெள்ளை செல்களை குறிவெச்சி அழிக்கிறது தான். அதனால, நம்மளோட நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சி,  ஊர்ல இருக்கற அத்தனை நோய்களும் அவங்களுக்கு வரும் கேன்சர் உட்பட. அதனாலதான் எய்ட்ஸ் ஒரு தீர்க்க முடியாத நோயா இருக்கு.

அப்படி வெள்ளை செல்களை குறிவெச்சி அழிக்கிற கிருமிகள்ள முக்கியமானது HIV.  

பிளேட்லெட் அல்லது திராம்போசைட் (PLATELETS OR THROMBOCYTES)

செல் மாதிரி இருக்கும் ஆனா செல்கள் கிடையாது.  இதனோட வேலை இரத்தம் உறைய உதவி பண்றது தான்.  பார்த்து பார்த்து பண்ற, லட்ச கணக்கான ரூபா பணம் போட்டு வாங்கற எத்தனையோ மெசின்கள் எல்லாம் சர்வ சாதாரணமா கெட்டு போற இந்த காலத்துல, பல ஆயிரகணக்கான வருசங்களுக்கு முன்னாடி தானா உருவான மனித உடலை எவ்வளவு கவனமா இயற்கை உருவாக்கி இருக்கு இருக்கு அப்படிங்கறதுக்கு இரத்தம் உறையற இந்த ஒரு நிகழ்வு தான் உதாரணம்.


யோசிச்சி பாருங்க...! இயற்கை இப்படி ஒரு டெக்னிக் வெக்கமலே கூட போயிருக்கலாம். மனிதன் அடிப்பட்டா கட்டு போட்டு தன்னோட உயிரை காப்பாத்திக்கட்டும் அப்படின்னு நெனச்சி விட்டு கூட இருக்கலாம். ஆனா அப்படி விடாம இப்படி ஒரு டெக்னிக்கை வெச்சி இருக்கு. அடிப்பட்ட உடனே பைப்ரின் அப்படிங்கற புரோடீன் ஒரு வலை மாதிரி உருவாகி சேதமடைஞ்ச இரத்த குழாய்க்கு குறுக்கே சிலந்தி வலை பின்னல் மாதிரி அடைச்சிக்கும். இந்த வலையோட இடைவெளி எல்லாம் பிளேட்லெட்ஸ் வந்து சிக்கி இடைவெளிகளை அடைக்க, அதுக்குள்ள இரத்ததோட மத்த புரோடீன்கள், சிவப்பு செல்கள், வெள்ளை சல்கள் எல்லாம் வந்து ஒண்ணா சேர, அத்த இடத்துல ஒரு கட்டி மாதிரி உருவாகி, மேற்கொண்டு இரத்தம் வெளியேறாம தடுக்கப்படும். ரத்தம் அந்த இடத்தில உறைஞ்சி அதுவும் அதிகபட்சமா மூணு நிமிசத்துக்குள்ள இரத்தம் வீணாகாது நின்னு போயிடும். ஹ்ம்ம்ம்... கிரேட் தான்...!!!
 
ஆனா, மூணு நிமிசத்துக்குள்ள இரத்தம் உறையற இந்த வேலைக்கு பின்னாடி எத்தனை ப்ரோடீன்களோட பங்கு இருக்கு தெரியுமா....? 15 விதமான புரோடீன்கள் ஒன்னு சேர்ந்து, 30 விதமான வேதிவினைகளை மூணு நிமிசத்துக்குள்ள செய்து தான் நம்ம இரத்தம் உறையிர வேலையை செய்யிது. இதுல ஒரு புரோடீன் சொதப்பினாலும் நம்ம பாடு கோவிந்தாதான். இதெல்லாம் யோசிச்சி பார்த்தா இயற்கை முன்னாடி நம்ம எல்லாம் ஒரு பச்சான்னு புரியும்.

(HAEMOPHILIA - ஹீமோபிலியா இது ஒருவகையான மரபு சம்பந்தப்பட்ட, இரத்தம் உறைதலில் பங்கு பெறும் சில புரோடீன்கள்  சில குறைபாடுகளோட உருவாகும் ஒரு நோய். இதனால, அந்த புரோடீன்கள் மட்டும் ரத்தம் உறையும் செயல்ல பங்கு பெற முடியாம, இரத்தம் உறையாது. இந்த நோய் உள்ளவங்களுக்கு அடிப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பிச்சா என்ன பண்ணினாலும் நிறுத்த முடியாது. இரத்தம் முழுசுமா வெளியேறி உயிரைவிட வேண்டியதுதான்)  
3. மேக்ரோபெஜ் - MACROPHAGE - ஒரு வகையான ஜீரண செல்களும் கூட 

மேக்ரோபெஜ்கள் வெள்ளை செல் வகையில ஒன்னு. அதே சமயம் அதனால ஜீரண செல்லாகவும் வேலை பார்க்க முடியும். அதாவது நம்ம உடலுக்குள்ள வர நோய் கிருமியை லிம்போசைட் (T  OR  B செல்கள் ) கிட்ட குடுத்து அதன் மூலமா கொல்ல முடியும் அல்லது  நேரடியா நோய் கிருமியை அப்படியே சாப்பிடவோ  முடியும். இது நோய் கிருமியை பொறுத்து அமையும். 
 
4.  இரத்த புரோடீன்கள் - BLOOD PROTEINS

ALBUMIN - ஆல்புமின் 

          - இரத்த ஆல்புமின் ஒரு வாகனம் மாதிரி நம்ம இரத்தத்துக்கு. செல்களுக்கு தேவையான அதனை பொருள்களையும் முக்கியமா புரோடீன் தயாரிக்க, சக்தி தயாரிக்க, தயாரித்தவற்றை சேமித்து வைக்கன்னு என்ன என்ன தேவையோ அத்தனையும் கொண்டுபோற ஒரு லோடு வாகனம் இது.

குளோபுளின்- GLOBULINS 
      
         - ஹீமொகுளோபின்ல இருக்கற குளோபின் தான் இது. இதனோ   ட வேலை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி செல்லுக்கு தேவையான ஆக்சிஜன் கொண்டு  போறது தான் இதனோட வேலை.

பைப்ரினோஜென் - FIBRINOGEN
      
        - இரத்தம் உறைய தேவையான புரோடீன் இதுதான். 

இது தவிர நெறைய இரும்பு, காப்பர் அப்படின்னு செல்லுக்கு தேவையான மினரல், விட்டமின்கள் எல்லாமே நம்ம இரத்தத்துல இருக்கு.

ஓகே... நாம நம்மளோட நிறைவு பகுதிக்கு வந்திட்டோம்... இபோ நான் கேட்ட கேள்வி... இரத்தம் ஏதாவது ஒரு காரணத்தால, சிவப்பு நிறத்தை இழந்துட்டா வேற என்ன  கலர்ல இருக்கலாம்...? என்னோட கெஸ் படி, இரத்தம் சிவப்பு நிறத்தை இழந்துட்டா அடுத்த கலர் பச்சையாக இருக்கலாம். காரணம், அதுல அடுத்த நிலையில அதிகப்படியா இருக்கறது ஹீம் (heam) அப்படிங்கற இரும்பு சம்பந்தப்பட்ட அதே பிராண வாயுவை கொண்டு போக உதவும் ஒரு பொருள். அதனோட கலர் பச்சை. இரத்தம் கண்டிப்பா இந்த கலர்ல தான் இருக்கும்.

ஓகே .... அடுத்த பதிவுல சீக்கிரமே சிந்திப்போம்....!!!

8 comments:

  1. dear dr dolittle, sorry i deleted your comment, since i was doing correction in that particular post about blood.

    i just posted a post and fount some typing errors. but you posted your comment by the time. sorry for that.

    but the information given by you is really useful for me. thank you for that.

    keep visiting to our blog. thank you

    ReplyDelete
  2. no problem brother. u r really doing a good job. keep posting

    ReplyDelete
  3. THANK YOU FOR YOUR VISIT HERE AND FOR YOUR MR.

    ReplyDelete
  4. very nice articles.thank you.i have one doubt.doctors said all cells can metabolizes every minute.but in our kidney cells damage once, it is an irreversible process.they said like this.
    it is true? milkymani@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. Hi Mani,
      Thank you for your visit to my blog and for your comment.
      Actually it is true.
      not only kidney, our liver, nerves, brain, heart - these cells can not retrieve once it is dead. it won't divide.
      that why we are calling there organs as vital organs.

      Delete
  5. எனக்கு cpk அளவு 758 உள்ளது வயது 30 .உடல் முலுவதும் 3 வருடமாக வலி தாங்க முடியவில்லை .மருத்துவரிடம் calcitril tablet சாப்பிட சொல்கிறார்கள் .வலி குறைகிறது .திரும்பி வருகிறது நான் செய்ய தயவு செய்து சொல்லுங்கள் by - prakash

    ReplyDelete
  6. எனக்கு cpk அளவு 758 உள்ளது வயது 30 .உடல் முலுவதும் 3 வருடமாக வலி தாங்க முடியவில்லை .மருத்துவரிடம் calcitril tablet சாப்பிட சொல்கிறார்கள் .வலி குறைகிறது .திரும்பி வருகிறது நான் செய்ய தயவு செய்து சொல்லுங்கள் by - prakash

    ReplyDelete