Saturday, April 28, 2012

இரத்த சிவப்பு செல்கள் - ஒரு சிறப்பு செய்தி ...!!!

நண்பர்களே...!!!

நம்ம நண்பர் டாக்டர் டூலிட்டில் ஒரு விலங்குகள் நல மருத்துவர், நம்மளோட இரத்தம் - ஒரு சிறப்பு பார்வை பதிவை பார்த்திட்டு, ஒரு தகவலை அனுப்பியிருக்கார். நமக்கு அது மிகவும் உபயோகமான தகவலும் கூட. 

என்னோட பதிவுல, இரத்த சிவப்பு செல்களுக்கு உட்கரு இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா, இது மனித செல்களில் மட்டும் தான். ஆனா, பறவைகள் போன்ற, கீழ்மட்டத்துல இருக்கும் முதுகெலும்பு உள்ள விலங்குகள்ல, சிவப்பு செல்கள் இன்னும் உட்கருவோட தான் இருக்கு. 

அதுக்கு என்ன காரணம் அப்படின்னும் அவர் ஒரு பதிலை அனுப்பி இருக்கார். அது கிட்டத்தட்ட, நான் ஏற்கனவே சொன்னதுதான். அதாவது செல்கள் தன்னோட அடுத்தகட்டத்துக்கு போகும்போது, தான் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, பரிணாமம் அடைய அடைய, தன்னோட உருவத்தை தன்னோட தேவைகளுக்கு ஏற்ப  மாத்திக்கிச்சி. சிவப்பு செல்கள்ள கூட அதுதான் நடந்திருக்கு.

அதாவது, கீழ்மட்ட விலங்குகளோட உருவம் சின்னது. அதனால, இதயத்துல இருந்து துவங்கற இரத்த குழாய்கள் உடலோட கடை எல்லையை அடையிற  வரைக்கும் சிலமுறை கிளைகளா பிரிஞ்சா போதுமானதா இருந்தது. அதனால அதனோட உட்புற சுற்றளவு அதிகமா இருந்தது. உட்கருவோட இருந்த சிவப்பு செல்களும் இந்த இரத்த குழாய் வழியா சுலபமா பயணம் பண்ண முடிஞ்சிருக்கு. ஆனா, பரிணாம வளர்ச்சில, இந்த விலங்குகள் உருவத்துல பெருசா வளர்ந்ததும்,  இரத்த குழாய்கள் முழு உடலையும் இணைக்க மேலும் மேலும் பல முறை கிளைகளாக பிரிய வேண்டி இருந்தது. அதனால இந்த இரத்த குழாய்களோட உட்புற சுற்றளவு குறைஞ்சி செல்களால நுழைய முடியல... 


 THANKS TO: SCIENCEPHOTO.COM , VISUALPHOTOS.COM AND WIKIPEDIA

ஸோ, இந்த பிரச்னையை சரிபண்ண இயற்கை கை வெச்ச இடம் தான் இரத்த சிவப்பு செல்கள். ஏன்னா, சிவப்பு செல்கள் பிரியறது கிடையாது, DNA சம்பந்தப்பட்ட எந்த வேலையும் அதுக்கு கிடையாது.  அதனோட ஒரே வேலை ஆக்சிஜன் எடுத்திட்டு போறது மட்டும் தான். அதுக்கு உட்கருவோ அல்லது மத்த செல் உறுப்புகளோ இல்லாம போனாலும், அதனோட வேலையில எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனா, மத்த செல்கள் பிரிஞ்சி புது செல்களை உருவாக்கும், அதுவும் இல்லாம DNA  சம்பந்தப்பட்ட நிறைய வேலைகளை செய்யும். 

அதனால பரிணாம் அடைய அடைய சிவப்பு செல்கள் உட்கரு, அதனோட செல் உறுப்புகள் அப்படின்னு எல்லாத்தையும் இழந்து உருவத்துல சின்னதாவும், தட்டையாவும் ஆயிடுச்சி. 

இந்த தகவலை அனுப்பின டாக்டருக்கு நன்றி. மீண்டும் அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!



No comments:

Post a Comment