Sunday, April 15, 2012

புற்று நோய் (Cancer) சில தகவல்கள்

மக்களே,

Dr . dolittle அப்படிங்கற நம்ம நண்பர்களில் ஒருத்தர் நான் மறந்து போன ஒரு விஷயத்தை பின்னூட்டம் மூலமா நினைவுபடுத்தினர். அவருக்கு எனது நன்றிகள். சில அபத்தங்கள் அப்படிங்கற தலைப்புல நான் சில ஊசிபோடும் முறைகளை பத்தி எழுதி இருந்தேன். அதுல விட்டுப்போன (அதுல ஒன்னு நானே என்னோட ஆராய்ச்சிக்காக பல முறை போட்டிருக்கேன், இருந்தும் மறந்து போயிடுச்சி) சில ஊசிபோடும் முறைகளை பத்தி சீக்கிரமா இன்னொரு பதிவு போடப்படும்.

இங்க biochemistry அப்படின்னு மட்டுமில்லாம, life science அப்படிங்கற இந்த களத்தில இருக்கிற முக்கியமான சுவாரஸ்யங்கள் இங்க பதியலாம்ன்னு இருக்கேன். உங்க யோசனைகளை சொல்லுங்க... உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள், கேள்விகள் இருந்தாலும் கேக்கலாம்... முடிந்த வரை தெளிவு படுத்த முயற்சிக்கிறேன்... 

இயற்கையின் படைப்பில், ஒரு உயிருள்ள செல் அப்படிங்கறது தான் இந்த உலகத்தில இருக்கிற ஒரு அற்புதமான விஷயம். கண்ணுக்கே தெரியாத இந்த செல்லுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் நடந்திட்டு இருக்குன்னு நான் சொல்ல சொல்ல நீங்க வியப்போட உச்சிக்கே போகப்போறிங்க.

நான் என்னோட முந்தைய பதிவுகள்ள அடிப்பட்டு ஒரு செல் இறந்து போனா புது செல் உருவாகும்ன்னு சொல்லியிருந்தேன் இல்லையா? அது எப்படி தெரியுமா...? புது செல் எப்படி உருவாகும்? இங்க தான் இயற்கை நமக்கு ஒரு அற்புதமான விஷயம் வெச்சிருக்கு. இப்போ ஒருத்தருக்கு கையில கத்தியால காயம் அதுவும் உள்ளங்கையிலன்னு வெச்சிக்குவோம். மொதல்ல அடிப்பட்ட இடத்துல இருக்கற செல்கள் இறந்து போயிடும். ஒரு ரெண்டு நாள்ல சேதமடைந்த செல்கள் அத்தனையும் இறந்து, உடலை விட்டு வெளியேற்றப்படும் சீழாக. பிறகு நாம டாக்டர்கிட்ட போய் அதை சுத்தபடுதறவகையில வெளியேற்றிவிடுவோம். இது முறை வெளியில் இருந்து வரும் ஆபத்தினால் இறந்து போகும் செல்களுக்கு மட்டுமே. தானாக வயதாகி இறக்கும் செல்களுக்கு நமது உடலே வேற சில வழிமுறை வெச்சிருக்கு. அது பிறகு...

பிறகு அடிப்பட்ட இடத்துல இருக்கும் நல்ல செல்கள் தூண்டப்பட்டு இரண்டு, நான்கு என பிரிய ஆரம்பிக்கும். மொத்தமா, அந்த காயம் முழுதுமா மூடப்படும் அளவுக்கு செல்கள் உருவானவுடன், நமது உடல் செல்கள் பிரியும் வேலையை நிறுத்த உத்தரவிடும். செல்கள் பிரிவது நின்று விடும். இதை நாம காயம் ஆறிவிட்டது என்கிறோம். 

இப்போ, தான் நமக்கு புது சுவாரஸ்யமான விஷயங்கள் ஆரம்பம். அப்படி நம்ம சிஸ்டத்தோட ஆணைக்கு கட்டுபடாம, அந்த செல்கள் பிரிந்து புதிய செல்கள் உருவாயிட்டே இருந்தா என்ன ஆகும்? யோசிச்சி பாருங்க, அந்த உள்ளங்கையில் புது செல்கள் உருவாயிட்டே இருந்தா ? இதை தான் நாம கேன்சர் என்கிறோம். அதாவது புற்று நோய்...

ஆமா மக்களே, நம்மளோட உடல், உடலோட எந்த பகுதியிலும் அல்லது எந்த உறுப்பிலும் தேவைப்படும் போது, சில ஆபத்து காலங்களில் புது செல்கள உருவாகவும், தேவையில்லதப்போ நிறுத்தவும் தேவையான மெக்கானிசம் வெச்சிருக்கு. இயற்கையின் படைப்பில் இது ஒரு பெரிய அற்புதம். ஆனா, சில செல்கள் இந்த மெக்கானிசத்தை மதிக்காம மேலும் மேலும் புது செல்களை உருவாக்கறதுதான் புற்று நோய். அப்படி உருவாகிற புது செல்களும் அதோட தாய் செல்களை போலவே இந்த சிஸ்டத்துக்கு கட்டுபடாது. இந்த நிலைதான் புற்று நோய் அப்படின்னு அழைக்கப்படுது. 

சரி புற்று நோய் எதனால குணப்படுத்த இயலாததா இருக்கு...? அப்படி என்ன இந்த நோய்க்கு மட்டும் ஸ்பெசல்? இதுக்கான பிரச்சனை DNA வுல இருந்து ஆரம்பிக்குது... இன்னும் மருந்து குடுத்து பிரச்னைக்கு காரணமான DNA வை சரிபடுத்தர அளவுக்கு இன்னும் விஞ்ஞானம் வளரல... மேலும், இந்த ஒரு காரணத்தால்தான் புற்று நோய் வருது அப்படின்னு சொல்ல முடியல... ஒரே லிவர் கேன்சர் பத்து பேருக்கு பத்து விதமான காரனத்தால வந்து இருந்தா ஒரே மருந்து எப்படி வேலை செய்யும்...? தினம் தினம் புது புது காரணங்கள் வந்திட்டே இருக்கு... 

இன்னொரு முக்கியமான காரணம், இந்த கேன்சர் செல்கள் ஒரு கட்டி மாதிரி ஒரு இடத்துல உருவானாலும் கொஞ்ச நாள் கழிச்சி, தனித்தனி செல்களா பிரிந்து ரத்தத்துல கலந்து இடம் விட்டு இடம் நகர கூடியவை.  ரத்தம் மூலமா உடல் முழுதும் உல்லாச பயணம் மாதிரி போயிட்டே இருக்கும் இவை, எந்த இடத்துல நிக்குதோ, அது உடலின் எந்த பகுதியா இருந்தாலும், அந்த இடத்துல தங்கி, மேலும் பிரிந்து புதிய கேன்சர் செல்களை உருவாக்கும். அந்த புதிய செல்கள் மறுபடியும் உல்லாச பயணம் போகும். ஒரு செல் இன்னொரு புதிய செல்லை உருவாக்க, 12  மணி  நேரம் போதும்.

இந்த செல்கள் உருவான உடனே கண்டு பிடிக்கிறது கஷ்டம். வலி இருக்காது. அநேகமாக சிறு சிறு கட்டிகள் போல இருக்கலாம். இப்போ கையில சின்ன கட்டி உருவாகி மரு போல இருந்தா, நாம கண்டிப்பா அதை கண்டுக்க மாட்டோம். ஆனா அதுல குறைஞ்சது பத்து லட்சம் செல்கள் இருக்கும். அது தனி தனி செல்களா பிரிந்து ரத்தத்துல கலந்திட்டா நமக்கு ஒண்ணுமே தெரியாது.  இன்னும் சொல்லப்போனா, என்னவோ கையில  கட்டி மாதிரி வந்துச்சி... தானா சரியா போயிடுச்சின்னு தான் நெனப்போம். ஆனா பத்து லட்சம் கேன்சர் செல்கள் ரத்தத்துல இருக்கு. 

இப்போ ஜஸ்ட் இமாஜின் பண்ணுங்க... கண்ணுக்கே தெரியாத இந்த செல்கள் உடல் முழுதும்  பரவ ஆரம்பிச்சா எத்தனை செல்கள் உடம்புல என்ன எங்க எல்லாம் போச்சின்னு எப்படி கண்டுபிடிக்கிறது...? அது வளர்ந்து கொஞ்சம் பெரிய கட்டியா மாறும்போது தான் நமக்கு தெரிய வரும்... அதுக்குள்ளே கொறஞ்சது ஒரு பத்து கோடி செல்களாவது இன்னும் புதுசா ரத்தத்துல கலந்து இருக்கும். 

ஓகே? புது செல்கள்... வளர்ந்திட்டே இருக்கு...உடம்புல பரவுது... அதனால நோயாளி செத்து போறது எப்படி? சாவுக்கு என்ன காரணம்...? நம்ம உடம்புல எவ்வளோவோ விதமான செல்கள் இருக்குன்னு உங்களுக்கு தெரியும் .ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு விதமான வேலை. அதுவும் தெரியும்.  ஆனா,  அந்த வேலையை அந்த செல்கள் எப்படி பண்ணுது? அதுக்கு  என்ன கை, காலா இருக்கு... தானே களத்தில இறங்கி வேலை செய்ய? அது எப்படின்னா அந்த வேலையை செய்யக்கூடிய திறமை உள்ள ஒரு ஆளை அனுப்பி அந்த வேலையை செய்விக்கும். இது என்ன புதுசா இருக்கு... ? அந்த ஆள் யார் அப்படின்னு தோணுதா? இங்க தான் நம்மளோட போன பதிவுல பார்த்த ஒரு முக்கியமான ஒன்னு.... ப்ரோடீன்.... என்னோட ஸ்டேட்மென்ட் ஞாபகம் வருதா....? பேக்டரியில மெசின் மாதிரி....!!!  தொழிலாளர்கள் மாதிரி....!!!!

எஸ்....செல் என்ன பண்ணும் அப்படின்னா, ஒரு வேலை ஆகணும்ன்னா, அந்த வேலையை செய்ய தெரிந்த ஒரு ப்ரோடீனை உருவாக்கி, அது எங்க போய் வேலையை செய்யணுமோ அதையும், அந்த ப்ரோடேனின் கட்டமைப்பிலேயே பதிவு செய்து ரத்தத்துல கலந்து விட்டுடும்... அந்த ப்ரோடீனும் ரத்தத்துல பயணம் செய்து, அந்த இடத்தை அடைந்து, தனக்கு அளிக்கப்பட அந்த வேலையை சரியா செய்து முடிச்சிடும். வேலை முடிந்ததும் இதுக்குன்னே இருக்கிற இன்னொரு சிஸ்டம் அந்த ப்ரோடீனை அழிச்சிடும். 

இது நார்மலா நடக்கிற சிஸ்டம் நம்ம உடல்ல... நம்ம நார்மல் செல்களோட வேலை எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது... தேவை படும்போது ஆத்தல், தேவையில்லாத போது அழித்தல் என எல்லாமே  சிஸ்டமேட்டிக்கா  சொன்னது சொன்னபடி, நடக்க கூடியவை...கண்டிப்பா நடக்க வேண்டியவை.... இதுல எங்கயாவது ஒரு சின்ன தப்பு நடந்தாலும், மொத்த சிஸ்டமே கொலாப்ஸ் ஆயிடும்.

இப்போ இமாஜின் பண்ணுங்க...அந்த குறிப்பிட்ட செல், கேன்சர் செல்லா ஒரு நூறு கிராம் அளவுக்கு மாறி பரவி இருக்கிற நிலைமை.....  இப்போ இந்த செல் எதுக்கும் கட்டுபடாம அந்த ப்ரோடீனை தேவையே இல்லன்னாலும் உருவாக்குச்சின்னா, அதுவும் உடல் முழுக்க பரவின பல கோடி செல்கள் ஒரே நேரத்தில செயல்பட்டா எப்படி இருக்கும்? 

இப்போ, நாம சொல்ற ப்ரோடீன் ரத்தத்துல சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும் இன்சுலின் அப்படின்னு வெச்சிக்குவோம். ரத்தத்துல சர்க்கரை அளவுக்கு அதிகமா போகும்போது, இன்சுலின் உருவாக்கும் செல்களால இன்சுளுன் உருவாகி, சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுபடுத்தி தன் வேலை முடிந்ததும் அழிக்கப்பட்டு விடும். இதுவே, சர்க்கரை அளவு சரியா இருக்கும் போதும் இன்சுலின் உருவாயிட்டே இருந்தா ? அப்புறம் நம்ம ரத்தத்துல சர்க்கரையே இருக்காது. மொத்த இன்சுலினும் சேர்ந்து, எல்லா சர்க்கரையும் அழிச்சிடும். நோயாளி கோமாவுக்கு போயிடுவாங்க. அப்புறம் சாக வேண்டியது தான். உடல் முழுக்க பல கோடி செல்கள், ஒரு அட்சய பாத்திரம் மாதிரி இன்சுலினை உருவாக்கிட்டே இருந்தா, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல நம்ம உடலும் அதிகமா உருவான இன்சுலினை கட்டுப்படுத்த முடியாது. இது ஒரு சாம்பிள் தான். இது மாதிரி பல கேன்சர்... பல ப்ரோடீங்கள்... பல செயல்கள்...:-(

ஓகே... இப்போ ஒரு முக்கியமான, அதே சமயம் சுவாரஸ்யமான விஷயம்... உடலோட எல்லாவிதமான செல்லும் கேன்சர் செல்லாக மாறலாம்... மாறியிருக்கு... ஆனா, ஒரே ஒரு செல்லை தவிர... இது வரைக்கும் இந்த ஒரு செல்லில் மட்டும் கேன்சர் வந்தது இல்லை... உலகத்தோட அத்தனை விஞ்ஞானிகளும் மண்டையை பிச்சிகிட்டு அதுக்கு என்ன காரணம்....? மத்த செல்களில் இல்லாத, இந்த செல்லுல இருக்கற எதோ ஒன்னு கேன்சரா மாறாம தடுக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க... அது எந்த செல்லுன்னு தெரியுமா?

இதய செல்கள்.... யோசிச்சி பாருங்க... பல கேன்சர் கேள்வி பட்டிருக்கோம்... ஆனா, இதய கேன்சர் அப்படின்னு எங்கயாவது கேள்வி பட்டிருக்கோமா? இருக்கு... அதுக்கு பேரு காதல் அப்படின்னு கவிதை எல்லாம் சொல்லக்கூடாது...:-)


8 comments:

  1. நல்ல பதிவு

    ஒரு செல்லில் கான்செர் வருவதற்கு அது பல mutation களை அடைந்திருக்க வேண்டும் , அதற்கு அது பல முறை replicate ஆகி இருக்க வேண்டும் , ஆனால் இதய செல்லில் replication கம்மியாக நடக்கும் , இது ஒரு காரணம் . வேறு ஏதேனும் காரணம் இருந்தால் தெரியப்படுத்துங்கள் . இருப்பினும் அரிதின் அரிதாக இதயத்தில் கான்செர் வர வாய்ப்பு உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. Dr.Dolittle,

      Thank you for your comment. I read your blog today. you are doing good. keep it up.

      Yeah, I know about those reasons. But, I have not introduced about mutation and replication to our readers yet. Still we are in learning basics and just started to talk about cells. So, I will write about proper reasons, as separate post later on. Please keep visiting here and do comments as well.

      as a doctor, your comments would be a boost for me to do my job well here.

      Thank you very much.

      Delete
  2. This basic information about cancer is very useful and interesting. Good work. Keep going. I Am Expecting more details about different types of cancer. Thanks a lot friend.

    ReplyDelete
    Replies
    1. Thank you Philip.

      Yeah, I am writing just basic information for now. I am thinking to introduce basics first to our readers. Otherwise when we go in to deeper, understanding everything would be a problem.

      But, I would present everything here as soon as possible as your wish.

      Keep visiting.

      Delete
  3. மிக அருமையான பதிவு,
    என்னுடைய கல்லூரி நன்பனை கடந்த வருடம் இப்புற்று நோய்க்கு பறிகொடுத்தோம். அவனுடைய நினைவுகள் இன்னும் என்ன்ள்ளே பசுமையாய். மருத்துவ உலகம் மிக சீக்கிரம் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும்.
    என்றும் நட்புடன்
    ஸ்ரீனி.

    ReplyDelete
  4. நண்பர் ஸ்ரீநி...

    வேண்டியவங்களோட இழப்பு அதுவும் இந்த மாதிரியான கொடுமையான காரணதாலன்னா அது கஷ்டமான விஷயம் தான். ஆனா இந்த நோயை இப்போதைக்கு எதவும் செய்ய முடியாதுங்கறது தான் உண்மை. இப்போ இருக்கற சிகிச்சை முறைகளை வெச்சி இறப்பை கொஞ்சம் தள்ளி போடலாம்.

    நம்ம முன்னோர்களோட இயற்கையான வாழ்க்கி முறையையை மாற்றி எப்போ வெஸ்டர்ன் கல்ச்சர்க்கு மாறுவதற்கு நாம் கொடுக்கற விலை இது... இதுல கொடுமை என்னன்னா, வெஸ்டர்ன் கல்ச்சர்ல இருக்கற பிரச்சனையை உணர்ந்து, நம்ம வாழ்க்கை முறை தான் மேம்பட்டதுன்னு, அவங்க மாற துவங்கியிருக்கிற இந்த நேரத்துல தான், நாம நம்மளோட இயல்பை தொலைக்க ஆரம்பிச்சிருக்கோம்.

    ReplyDelete
  5. நிதர்சனமான உன்மை பாஸு..!!!

    ReplyDelete