Saturday, June 16, 2012

சில சுவாரஸ்யங்கள்: ஓரின சேர்க்கை ஜீன் - கேய் ஜீன் (GAY GENE )

மக்களே...!!!

நம்மளோட போன செல் அமைப்பு பத்தின பதிவுக்கு இதுவரைக்கும் எதுவும் கமெண்ட்ஸ் வரல. கொஞ்சம் வருத்தமா இருக்கு. நான் சரியா உங்களுக்கு புடிக்கிற மாதிரி, புரியற மாதிரி எழுதறேனா அப்படிங்கறதை நீங்க போடற கமென்ட் வெச்சி தான் நான் புரிஞ்சிக்க முடியும். அதனால படிச்சிட்டு ஏதாவது கமென்ட் போட்டுட்டு போங்க...!!!

ஓகே... நம்ம வலைதளத்தை இன்னும் சுவாரஸ்யமா மாத்த என்னவெல்லாம் பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தப்போ, இன்னிக்கு ஒரு ஐடியா வந்தது. அப்பப்போ, சில வித்தியாசமான, ஆனா சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி உலகத்துல நடக்கும். அதுமாதிரி இருக்கிற சில விசயங்களை இங்க அறிமுகப்படுத்தலாம்ன்னு இருக்கேன். நம்ம நண்பர்களுக்கும் சின்ன சின்ன டைம் பாஸ்  நடுவுல. 

உங்க ரெஸ்பான்ஸ் பார்த்திட்டு தான் இது தொடரனுமான்னு நான் முடிவு பண்ணனும். ஓகே...???

இன்னிக்கு நான் நெட்ல என்னோட ஆராய்ச்சி சம்பந்தமா சில ஆர்டிக்கில் தேடிட்டு இருந்தப்போ ஒரு சுவாரஸ்யமான, அதே சமயம் வித்தியாசமான விஷயம் என் கண்ல பட்டது. அதை பத்தின பின்னனி விவரங்கள் தேடினப்போ கிடைச்ச ஆச்சர்யமான சங்கதிதான் இன்னைக்கு பதிவு. 

ஓரின சேர்க்கை ஜீன் - கேய் ஜீன் (GAY GENE )

சில வருசங்களுக்கு முன்னாடி வாசிங்டன்ல இருக்கிற US NATIONAL INSTITUTE OF CANCER ஐ சேர்ந்த மரபியல் விஞ்ஞானி DEAN HAMER தானும் தன்னோட குழுவும் ஓரின சேர்க்கை பழக்கத்துக்கு காரணமான Xq28 அப்படிங்கிற ஜீனை அதுவும் ஆண்களில் மட்டும் கண்டுபிடிச்சிட்டதா அறிவிச்சாரு. ஆனா, பெண்களில் உள்ள ஓரின சேர்க்கை பழக்கத்துக்கும் இந்த ஜீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு சொன்னாரு.

இதை கண்டுபுடிக்க, அவர் குறைந்தது ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய இரண்டு ஆண்களை கொண்ட 114 குடும்பங்களை செலக்ட் பண்ணி, அவங்க இரத்த மாதிரிகளை பரிசோதனை செஞ்சி கண்டுபுடிச்சதா சொல்லியிருந்தாரு. இதாவது பரவாயில்லை, அவங்க வீட்டு பெரியவங்களை நிறைய கிராஸ் கொஸ்டின் பண்ணதுல, இந்த பழக்கம் பரம்பரை பரம்பரையா கூட வந்திருக்கலாம்ன்னு சொல்லி பீதிய கெளப்புனாரு.

ஆனா, அவர் அப்படி அறிவிச்சதும், ஆராய்ச்சி உலகமே பரபரப்பாயிடுச்சி. முக்கால்வாசி விஞ்ஞானிகள் இதை ஒத்துக்கல. ஏன்னா, ஓரினச்சேர்க்கை பழக்கம் அப்படிங்கறது ஒருவரோட தனிப்பட்ட விருப்பம், இருக்கும் அல்லது வாழும் சூழ்நிலை, சில சமயம் அவரோட மனநிலை அப்படின்னு பல விசயங்களை பொறுத்து தான் முடிவாகுது.

செக்ஸ், அதாவது பாலின அதுவும் எதிர்ப்பாலின ஈர்ப்பு அப்படிங்கறது ஒரு இனத்தோட இனவிருத்தி தொடர்பானது. ஒரு இனம் இந்த பூமியில நிலைச்சிருக்க தேவையான அடிப்படை விஷயம். ஆனா,  ஓரினச்சேர்க்கை அப்படிங்கறது இயற்கைக்கு மாறான ஒரு விஷயம். சரியா சொல்லனும்ன்னா, ஒரு இனத்தினுடைய இருப்பு, ஆங்கிலத்தில் சொல்லனும்ன்னா EXISTENCE ஐ ஆட்டிபார்க்கற விஷயம். கண்டிப்பா இயற்கை இந்த மாதிரி ஒரு ஜீனை உருவாக்கி இருக்காது. அப்படியே தவறி உருவாகி இருந்தாலும் இத்தனை வருசங்கள் இத விட்டு வெச்சிருக்காது. 

இவர் சொல்ற மாதிரி ஒரு ஜீன் தான் இத்தனைக்கும் காரணம்ன்னா, ஓரினச்சேர்க்கை அப்படிங்கறது பெர்சனல் விருப்பம் இல்லை, இது ஒரு வியாதி. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது சின்ன DNA பரிசோதனை செய்தே இந்த குழந்தையோட பாலின ஈர்ப்பு சம்பந்தப்பட்ட விருப்பங்களை தெரிஞ்சி அதை சரி செய்துடலாம். தேவை இல்லன்னா கருவியே கூட அழிச்சிடலாம்.

அப்புறம் எதுக்கு இதுக்குன்னு சட்டம், போராட்டம் அங்கீகாரம் எல்லாம்...? அடுத்த சில வருசங்கள் கழிச்சி, லண்டன்ல இருக்கிற University of Western Ontario வை சேர்ந்த சில விஞ்ஞானிகள், இந்த ஜீனுக்கும் ஓரின சேர்க்கை பழக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நிரூபிச்சாங்க. 
இருந்தாலும் தான் சொன்னதுதான் சரின்னு அறிவியல்பூர்வமா காட்டுவேன்னு சவால்விட்டு தன்னோட குழுவோட சேர்ந்து ஆராய்ச்சியை தொடர்ந்திட்டு இருக்காரு HAMER.  

ஓகே... படிச்சிட்டு புடிச்சிருந்தா கமெண்ட் போடுங்க. செல் சுவர் பத்தின விரிவான பார்வை சுடச்சுட தயாராயிட்டு இருக்கு. ஸோ, அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

5 comments:

  1. சுவாரஸ்யங்கள் தொடரட்டும்...

    ReplyDelete
  2. muthallaa font style, normalkku vidungo...italicized font vaasikkaa kaduppaaguthu...
    article research not enough....

    ReplyDelete
    Replies
    1. hi,
      thank you for your comment. but, no need to be in anonymous in our blog.
      i am ready to welcome any comment and ready to answer for that.

      1. no one asked me to change the font till now. but i can not change font style only for you. if i receive the same type of comment from some more of our readers, then i will think of changing font style.

      2. i can write even more and in deep and details. but most of my readers from non science background and undergraduate course. so i have to write for them and i have to make them understand. that's why i am writing in the way of non - detail and not giving too much details. but i will start to give in detail once i get confident that all my readers could understand everything.

      3. i may write some more posts like this, and then start to give more details slowly

      3.

      Delete
  3. பான்ட் சூப்பர் ... விசயமும் சூப்பர் .... வாழ்க உங்களுடைய படைப்புகள் வளர்க.... நண்பரே...

    ReplyDelete