Tuesday, June 5, 2012

INTRON - இன்ட்ரான் - NON CODING SEQUENCE - அமினோ அமில வரிசை தராத DNA - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!

நம்ம வலை பூவை நேரடியா இன்ட்லியிலயும் தொடர்பவர்கள் எண்ணிக்கை குறிப்பிட தகுந்த எண்ணிக்கையை அடைஞ்சிருக்கு. எல்லாம் உங்க ஆதரவும் உற்சாகமுமே காரணம். நான் எழுதறதுல எதுவும் குறை இருந்தா, எதுவும் யோசனைகள் இருந்தா, இல்லை எதுவும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தா, நீங்க தாராளமா எனக்கு சொல்லலாம். முடிஞ்ச வரைக்கும் சரி பண்ண முயற்சி செய்யிறேன். 

இந்த வலைப்பூவை நான் எழுத ஆரம்பிச்சதுக்கு, எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை நாலு பேருக்கு சொல்லணும் அப்படிங்கற ஆர்வம் மட்டுமே காரணம். இன்னும் சொல்லப்போனா, நான் எழுதறது இத்தனை பேருக்கு புடிக்கும்ன்னே நான் மொதல்ல எதிர்ப்பார்க்கல. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா நீங்க காட்டின ஆர்வமும், குடுத்த வரவேற்பும் எதிர்ப்பார்க்காதது. அது இன்னும் நல்லா, நெறைய எழுதணும் அப்படிங்கற உற்சாகத்தை கொடுத்துச்சி. எப்படி இருந்தாலும் நான் என்னோட வேலையை சரியா செய்யணும் அப்படிங்கறதுல எந்த விதமான காம்ப்ரமைஸ்சும் பண்ணிக்க போறது இல்லை.


ஓகே... கதை போதும்... இன்னிக்கு பதிவு, நம்ம நண்பர் டாக்டர் டூ லிட்டில் கேட்ட சில சந்தேகங்களை பத்தினது. நம்மளோட DNA , RNA GENE மற்றும் குரோமோசோம் பதிவுல இன்ட்ரான் பத்தியும் அதனோட பயன்கள் பத்தியும் சில தகவல்கள் சொல்லியிருந்தேன். அதை பத்தின ஒரு விரிவான பார்வை தான் இன்னிக்கு பார்க்க போறோம்.  

INTRON - இன்ட்ரான் மற்றும் EXON - எக்ஸான்

ஒரு ஜீன் அப்படிங்கறதுக்கு விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிற வரையறை என்னன்னா, நம்ம DNA வுல எந்த எந்த பகுதிகள் எல்லாம் ஒரு முழுமையான வேலை செய்யும் திறனுடைய புரோட்டீன்களை குடுக்க முடியுமோ, அந்த பகுதி தான் ஒரு ஜீன் அப்படின்னு சொல்ல முடியும். இந்த ஜீன்கள் ஒரு நீளமா DNA வுல அடுத்தடுத்து அமைஞ்சிருக்கலாம். இல்லை ஒன்னுக்கு மேல ஒன்னு ஓவர்லேப் ஆகி இருக்கலாம். எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். அதுக்கு எந்த விதமான கட்டுபாடும் கிடையாது. இதனால எந்த பிரச்சனையும் வர வாய்ப்பும் இல்லை. ஏன்னா எல்லா ஜீனும் ஒரே சமயத்துல டிரான்ஸ்லேட் ஆகாது. தேவைப்படும்போது அந்த குறிப்பிட்ட ஜீன் மட்டுமே டிரான்ஸ்லேட் ஆகும் அப்படிங்கறதுனால இந்த ஜீன் ஓவர்லேப் எந்த பிரச்சனையும் உண்டாக்காது. 


இப்போ இந்த ஜீனுக்குள்ள என்ன என்ன, எப்படி எப்படி இருக்கும்ன்னு பார்த்தோம்ன்னா, ஒரு புரோட்டீனோட அமினோ அமில வரிசை எப்படி இருக்கணும் அப்படிங்கற கோடான் வரிசை அப்படியே நேரிடையா இருக்காது... ஜீனோட முதல் கொஞ்சம் பகுதி புரோட்டீனை டிரான்ஸ்லேட் பண்ணும். அடுத்த கொஞ்சம் பகுதில ஒன்னும் இருக்காது. மறுபடியும் கொஞ்சம் பகுதி ஜீன். அடுத்த கொஞ்சம் பகுதி உபயோகமில்லாத இன்ட்ரான். இப்படி ஒரு ஜீன் அப்படிங்கறது அமினோ அமில வரிசை பத்தின செய்தி இல்லாத இன்ட்ரானாவும், புரோட்டீன் கொடுக்கிற எக்சானாவும் மாறி மாறி உருவாகி இருக்கும். இதை பத்தியும் நாம ஏற்கனவே பார்த்திருக்கோம்.


நம்ம செல்லோட பழைய வரலாறு எடுத்து பார்த்தா, தனக்கு உபயோகமில்லாத எதையும் செல் தனக்குள்ள உருவாக்கிக்கிட்டது இல்லை. அதேபோல உருவானதுக்கு அப்புறமா தன்னோட உபயோகத்தை இழந்த எதையும் செல்லுக்குள்ள வெச்சிக்கிட்டதும் இல்லை. காலப்போக்குல அந்த பகுதி கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிடும். ஆனா, புரோட்டீன் உருவாக உபயோகப்படாத இந்த இன்ட்ரான் பல ஆயிரம் வருசங்களா இன்னமும் செல்லுக்குள்ள அப்படியேதான் இருக்கு. ஸோ, இந்த ஒரு விசயமே போதும், இந்த இன்ட்ரான் செல்லுக்கு தேவையான என்னவோ ஒரு வேலையை செய்யிதுன்னு சொல்ல...

ஸோ, நாம இப்போ இங்க பார்க்க போறது, இந்த இன்ட்ரானோட வேலை என்னவா இருக்கும் அப்படிங்கறது தான். ஆக்சுவலா பார்க்க போனா, இன்ட்ரான்  உபயோகத்தை பத்தி நெறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க, அப்படினாலும் எதுவுமே இன்னும் முழுசா நிரூபிக்கப்படல.  இருந்தாலும் எல்லாரும் ஏத்துக்க முடியிற மாதிரி சில விளக்கங்களை இந்த விஞ்ஞானிகள் குடுத்திருக்காங்க. அதெல்லாம் என்னன்னு பார்க்கலாம்.

முதல் விளக்கம், ஆனா மிக முக்கியமானது... அதாவது, உயிரினங்கள் பரிணாமம் அடையும் போது, ஒரு உயிர் மட்டும் வளரல... அதோட சேர்ந்து, DNA வும் வளர்ந்தது... வளர்ந்ததுன்னா, இருக்கற DNA கூட இன்னும் சில நைட்ரஜன் கார மூலக்கூறுகள் நிறைய ஒரு குத்து மதிப்பா ஏற்கனவே இருக்கிற DNA  வோட சேர்க்கப்பட்டது. செல் பரிணாமம் அடைஞ்சி வளர வளர, அதனோட தேவைகள் அதிகமா ஆனது. நெறைய வேலைகளை செய்ய புது புது புரோட்டீன்கள் தேவைப்பட்டது. இந்த தேவைக்கு ஏற்ப, புதிய புரோட்டீன்களை உருவாக்க புதிய ஜீன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில DNA எக்ஸ்ட்ராவா சேர்க்கப்பட்ட உபயோகமில்லாத DNA செயினில் சில மாற்றங்களை செய்து வேலை செயும் திறனுடைய ஜீன்களா நம்ம செல் மாத்திக்கிச்சி. இது தான் இன்ட்ரான் நம்ம செல்லுக்குள்ள, ஜீனுக்குள்ள வந்த கதை. 



ஸோ , இவங்க சொல்றபடி பார்த்தா ஒரு ஜீன்ல இன்ட்ரானா உபயோகமில்லாம இருக்கிற பகுதி வேற ஒரு ஜீனுக்கு புரோட்டீன் வரிசையை நிர்ணயிக்க கூடியதா இருக்கலாம். ஏன்னா நமக்கு நிறைய ஓவர் லேப்பிங் ஜீன்கள் இருக்கு. இன்னும் சரியா சொல்லனும்ன்னா நாம வண்டிக்குபெட்ரோல் டான்க்ல ரிசர்வ் பகுதி வெக்கிற மாதிரி இந்த இன்ட்ரான். நம்ம செல்லுக்கு எப்போ ஒரு புது ஜீன் தேவைப்பட்டாலும் உடனடியா அதை உருவாக்கிக்க கொஞ்சம் DNA வை சேர்த்து வெச்சிருக்கு. இப்படி சேர்த்து வெச்சிக்கிட்ட செல் தான் திடீர் தேவையை சமாளிச்சி பரிணாமத்தோட அடுத்த லெவலுக்கு போயிருக்கு. அப்படி இல்லாத செல் அந்த நிலையிலேயே நின்னுடும் அல்லது செத்து போயிடும்.

புரிஞ்சிருக்கும்ன்னு நெனக்கிறேன் மக்களே... அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

2 comments:

  1. Replies
    1. thank you and welcome doctor...

      why don't you make your friends to join in our site and in face book dr...???

      our face book page would be a good place for discussion right?

      Delete