Thursday, August 2, 2012

மனித உடலும், உறுப்புகளும் - விரிவான தொடர் - அறிமுக பதிவு

மக்களே...!!!

செல் அமைப்பு பத்தின பதிவுகள் பார்த்திட்டு இருக்கோம். மாறுதலுக்காக இனிமே செல் அமைப்பு பத்தி ஒரு பதிவு மற்ற பகுதிகள் அடுத்த பதிவு அப்படின்னு மாத்தி மாத்தி எழுதலாம்ன்னு இருக்கேன்.  அதன்படி பார்த்தா போன பதிவு செல் அமைப்பு பத்தினது. அப்போ இந்த பதிவு மற்ற பகுதிக்கான பதிவு. எந்த பகுதி பத்தி எழுதலாம்ன்னு யோசனையோட பழைய பகுதிகளை பார்த்திட்டு இருந்தப்போ தான் இது கண்ணுல பட்டது. நம்ம வலைப்பூல முழு மூச்சா எழுத ஆரம்பிச்ச ஆரம்ப காலத்துல ஆரம்பிச்ச பகுதி இது. ஒரே ஒரு பதிவு தான் போட்டேன். அதுக்கப்புறம் கடந்த நாலு மாசமா எதுவுமே எழுதல. இது மனித உடலும், உறுப்புகளும் - ஒரு அறிமுகம் பகுதி. இந்த பகுதிக்கான ரெண்டாவது பதிவு தான் இன்னைக்கு பதிவு.

இந்த பகுதியை ஆரம்பிக்கும் போது பெருசா எந்த ஒரு திட்டமும் இல்லை. ஆனா, இப்ப இந்த பகுதியில மனித உடல், அதனோட உறுப்புகள், அதன் கட்டமைப்பு, உறுப்புகளுக்குள்ள இருக்கிற ஒற்றுமைகள், வித்தியாசங்கள் அப்படின்னு ஒரு முழு தொடரா எழுத முடிவு பண்ணியிருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க.

                                      

இன்னைக்கு பதிவு ஒரு அறிமுக பதிவு தான். மனித இனம் தான் இந்த நிமிசத்துல பரிணாம வளர்ச்சியியோட உச்சத்தில இருக்கிற உயிரினம். இது நமக்கு தெரிஞ்ச ஒண்ணுதான். இந்த பூமியில ஒரே ஒரு செல்லா ஆரம்பிச்ச உயிரினங்களோட வரலாறு, படிப்படியா இருக்கிற இடம், சூழ்நிலை, காலநிலை மாற்றங்கள், பருவ நிலை மாற்றங்கள்ன்னு ஒவ்வொரு இடத்துலயும் அடிப்பட்டு, எல்லா இடர்பாடுகளையும் சந்திச்சி, அதுக்கேத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, இந்த நொடியில தொட்டிருக்கிற இடம் இந்த மனிதன்.

அப்படி ஒவ்வொரு இடத்துலயும் ஒரு புது பிரச்சனையை  உதாரணத்துக்கு எதிரிகள், உணவு தட்டுப்பாடு, காலநிலை மாற்றம் இப்படி சந்திக்கும்போது அந்த பிரச்னையை தாண்டிவர அளவுக்கு தன்னை, தன்னோட உடல் அமைப்பை, இப்படி எல்லாத்தையும் மாத்திக்கிச்சி. ஸோ, இந்த தொடர்ல வெறும் மனித உடல் அமைப்பு அப்படின்னு மட்டும் இல்லாம, நான் எழுதப்போற செல் ஆகட்டும், இல்ல உறுப்புகள் ஆகட்டும், இல்ல உறுப்பு மண்டலம் ஆகட்டும் எதுவா இருந்தாலும், அதனோட தோற்றம் அதாவது அந்த உறுப்பு உருவாக காரணம், காலப்போக்குல அந்த உறுப்பு எப்படி எல்லாம் மாற்றம் அடைஞ்சது, அதனோட இப்போதைய நிலைமை அப்படின்னு எல்லாத்தையும் விரிவா அலசுவோம்.

                                     

சரியா மக்களே...!!! ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு தயார் ஆகுங்க. இந்த தொடரோட உண்மையான முதல் பதிவோட சந்திக்கிறேன். அடுத்த பதிவுல சிந்திப்போம்.

No comments:

Post a Comment