Wednesday, August 22, 2012

இணையத்தில அறிவியல் பாடம் - வீடியோ...!!!

மக்களே...!!!

இன்னைக்கு பதிவுல ஒரு சின்ன விசயத்தை உங்களோட பகிர்ந்துக்கலாம்ன்னு இருக்கேன்.  மத்திய அரசின் தொழில்நுட்ப துறை, சென்னை ஐஐடி மற்றும் பெங்களூருவில் உள்ள அகில இந்திய அறிவியல் கழகம் இணைந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கு. அதன்படி ஐஐடி மற்றும் அகில இந்திய அறிவியல் கழகம் பேராசிரியர்கள் பாடம் நடத்த அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்காங்க. 

இதை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து சொந்தமாக வைத்துக் கொள்ளலாம்.  அதுவும் முற்றிலும் இலவசமாக. இதில் பல்வேறு பொறியியல், அறிவியல், மேலாண்மை என அனைத்து பாடங்களும் அடக்கம்.

இதை யு டியூப் பிலும் சென்னை ஐ ஐ டி  இணைய பக்கத்திலும் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். 


நான் உதாரணத்துக்கு ரெண்டு வீடியோக்களை இங்க சேர்த்திருக்கேன். முழு வீடியோக்களுக்கு இங்க போய் பாருங்க.
யூகேரியோட் செல்கள்ள ஒரு ஜீன் எப்படி புரோட்டீனை உருவாக்கும் அப்படிங்கற லெக்சர் இந்த வீடியோல கெடைக்கும்.  
ஒவ்வொரு லிங்க்லயும் கிட்டத்தட்ட 30-40 வீடியோக்கள் இருக்கு. எல்லாத்தையும் உபயோகபடுத்திகோங்க.  இங்க பாடம் எடுக்கும் ஒவ்வொருத்தரும் பெரிய பேராசிரியர்கள். இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள். இவங்க பாடம் எடுத்து கேக்கறதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும். அதனால கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. 
அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

4 comments:

  1. சீக்கிரமே பள்ளிக்கூடம் கல்லூரி போயி பாடம் படிக்க வேண்டிய நிலமை மாறிடும்... அதற்கு இது போன்ற வீடியோக்கள் எடுத்துக்காட்டு...

    ReplyDelete
  2. நீங்க இதையே இப்படி யோசிச்சி பாருங்க. இங்க பாடம் எடுக்கற ஒவ்வொருத்தரும் வெறும் பேராசிரியர்கள் மட்டுமல்ல... இந்தியாவோட சிறந்த அறிவியல் விஞ்ஞானிகளும் கூட. எல்லாராலயும் IIT அல்லது IISc பேராசிரியர்களோட பாடத்தை அவ்வளவு ஈசியா கேக்க முடியாது. தமிழ்நாட்டுல இருக்கிற ஒரு அரசு அல்லது தனியார் கல்லூரியில் படிக்கிற சாதாரண மாணவனுக்கு இவங்க பாடத்தை கேக்கறது கனவுல மட்டுமே நடக்க கூடியது.

    ஆனா இப்போ இருக்கிற தொழில்நுட்பமும் சில பேரோட நல்ல முயற்சியும் சேர்ந்து இப்போ இதை எல்லாருக்கும் கிடைக்கிற மாதிரி பண்ணியிருக்கு. நல்லதை வரவேற்போம் நண்பா...!!!

    ReplyDelete
  3. its really good and helpful to me.i have just completed information technology.but my interest is science.my PG is should be this field(space).
    thanks for your tips and route.

    ReplyDelete