Saturday, August 11, 2012

செல் அமைப்பு : செல் சுவர் அமைப்பு - CELL WALL STRUCTURE (ஆர்க்கியே பேக்டீரியா - ARCHAEA BACTERIA) - 5

மக்களே...!!!

அங்க இங்க சுத்தி, மறுபடியும் செல் அமைப்பு பதிவுகளுக்கு வந்தாச்சி. நம்ம வலைப்பூவை இன்னும் எப்படியெல்லாம் சிறப்பா கொண்டு வரலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். சில ஐடியாக்களும் கெடைச்சிருக்கு. ஸோ, புது அறிவிப்புகள் சீக்கிரமே வரும். அப்புறம் நம்ம வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே உயிரியலை தமிழ்ல அறிமுகப்படுத்தனும் அப்படிங்கறது தான். அதன் மூலமா தமிழ் வழியில இருந்து வந்து இப்போ ஆங்கிலத்துல படிக்கிற மாணவர்களுக்கு உதவியா இருக்கும் அப்படிங்கறதும் இன்னொரு காரணம். நம்ம வலைப்பூவுக்கு தினமும் வந்து போற வாசகர்கள் எங்க எல்லாம் இருந்து வந்து போறாங்க அப்படின்னு பார்த்ததுல ஒரு விஷயம் புரிஞ்சது. நம்ம வலைப்பூ இந்தியாவை விட வெளிநாடுகள்ல தான் ரொம்ப நல்லா ரீச் ஆகி இருக்கு. இது சந்தோசமான விஷயம் தான் அப்படின்னாலும், நம்ம ஊர் மாணவர்களுக்கும் அதே அளவு போய் சேரும்போது தான், நம்ம வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டதோட உண்மையான நோக்கம் நிறைவேறும். அதனால மக்களே, இதை படிக்கிற நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தயவு செய்து அறிமுகப்படுத்துங்க. ஓகே...???

ஸோ, மக்களே...!!! இன்னைக்கு பதிவு செல் அமைப்பு வரிசையில செல் சுவர் விரிவான அமைப்பு பதிவோட தொடர்ச்சி. இதுல ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்பு பத்தி பார்த்திட்டு இருந்தோம். நான் போன பதிவுலயே சொல்லி இருக்கேன். ஆர்க்கியே பேக்டீரியாவுக்கு அப்படின்னு ஒரு குறிப்பிட்ட செல் சுவர் அமைப்பு கிடையாது. நான் தேடினதுல கிடைச்ச தகவல்களை தொகுத்து, அது மத்த செல்களோட செல் சுவரோட எப்படி வேறுபடுது அப்படின்னு தான் இங்க சொல்ல போறேன். ஒரு வேலை உங்களுக்கு ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் பத்தின புது தகவல்கள், நம்ம வலைப்பூவுல சொல்லப்படாததா கிடைச்சா எனக்கும் சொல்லுங்க. நம்ம வாசகர்களோட இங்க பகிர்ந்துக்கலாம்.

இங்க இன்னொரு விசயமும் இங்க தெளிவுப்படுத்த விரும்பறேன்.  நான் இங்க எழுதற எல்லா தகவல்களும், வேற வேற புத்தகங்கள்ல, இணையத்துல அப்படின்னு தேடி படிச்சி, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சரி பார்த்ததுக்கு அப்புறமா தான் பதிவா போடறேன். இதுக்கு காரணம் இங்க சொல்லப்படற தகவல்கள் எதுவும் தவறா இருந்திட கூடாதுன்னு தான். இருந்தாலும் சில நேரங்களில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கு அப்படிங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஸோ, நீங்க படிக்கும் போது தவறுகள் எதுவும் கண்டுபுடிச்சிங்கன்னா, எனக்கு தயங்காம தெரியப்படுத்துங்க. அதே மாதிரி நான் எழுதற தகவல்கள் சம்பந்தமா உங்களுக்கு அதிகப்படியான தகவல்கள் தெரிஞ்சிருந்தா, அதை எனக்கும் தெரியப்படுத்துங்க. நம்ம வலைப்பூ வழியா வாசகர்களோடவும் பகிர்ந்துக்கோங்க. நம்ம FACE BOOK கணக்குல எல்லாரும் சீக்கிரமா சேருங்க. இப்போ,  இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.

ஆர்க்கியே பேக்டீரியா - செல் சுவர் அமைப்பு - ARCHAEA BACTERIA - CELL WALL STRUCTURE - விரிவான அமைப்பு 

மக்களே...!!! பேக்டீரியாவுக்கும் ஆர்க்கியே பேக்டீரியாவுக்கும் செல் சுவரையும் சேர்த்து வெளிப்பார்வைக்கு எந்த ஒரு வித்தியாசமும் சொல்ல முடியாது. அதனோட வெளி தோற்றம், செல் சுவர், தந்துகி அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்க, FLAGELLA  ஆங்கிலத்துல. இது எல்லாமே அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கும்.  இப்போ யாராவது கொஞ்சம் பேக்டீரியாவையும், ஆர்க்கியே பேக்டீரியாவையும் கலந்து வெச்சிட்டு, தனிதனியா கண்ணால பார்த்து பிரிச்சி எடுங்கன்னு சொன்னா கண்டிப்பா முடியாது. அந்த அளவுக்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனா அதனோட வேதி கட்டமைப்பு வேற மாதிரி. அந்த வேறுபாடுகள் என்ன என்ன அப்படிங்கறது தான் விளக்கமா பார்க்க போறோம்.

பெப்டிடோ கிலைக்கன் PEPTIDOGLYCAN  - மற்ற இனங்கள் அதாவது பேக்டீரியா, பூஞ்சைகள், தாவரங்கள் இப்படி எதை எடுத்துகிட்டாலும் அதனோட செல் சுவர்ல பெப்டிடோ கிலைக்கன் அப்படிங்கற வேதி பொருள் ஒரு சின்ன பகுதியாவாவது இருக்கும். ஆனா, ஆர்க்கியே பேக்டீரியாவோட செல் சுவர் பேக்டீரியாவோட செல் சுவர் மாதிரி இருந்தாலும், அதுல பெப்டிடோ கிலைக்கன் இல்லை. இதுல இருக்கறது பெப்டிடோ கிலைக்கன் மாதிரி. ஆனா பெப்டிடோ கிலைக்கன் கெடையாது. இந்த மாதிரி வேதி பொருளுக்கு சூடோ பெப்டிடோ கிலைக்கன் (PSEUDO PEPTIDOGLYCAN ) அப்படின்னு சொல்லுவாங்க. இதை தமிழ்ல பொய்யான பெப்டிடோ கிலைக்கன் அல்லது போலி பெப்டிடோ கிலைக்கன் அப்படின்னு மொழி பெயர்க்கலாம்.

ஒரு பெப்டிடோ கிலைக்கன் அப்படின்னா அதுல நீளமான கார்போஹைட்ரேட் பகுதி, சின்ன சின்ன புரோட்டீன் செயின் பகுதி அப்படின்னு ரெண்டு பகுதி இருக்கணும். இந்த நீளமான கார்போஹைட்ரேட் பகுதி N - அசிட்டைல் குளுகோஸ் அமைன் (N-ACETYL GLUCOSE AMINE) மற்றும் N - அசிட்டைல் மியூராமிக் ஆசிட் (N-ACETYL MURAMIC ACID) அப்படிங்கற குளுகோஸ் சம்பந்தப்பட்ட ரெண்டு வேதி மூலக்கூறுகளை நீளமான செயின் மாதிரி இணைஞ்சி உருவானது. இப்படி உருவான கார்போஹைட்ரேட் செயின்கள் சிறு சிறு புரோட்டீன் செயின்கள் மூலமா ஒண்ணுக்கொண்ணு இணைஞ்சிருக்கும். இந்த சிறு சிறு புரோட்டீன் செயின்கள் தான் பெப்டிடோ கிலைக்கன்ல இருக்கிற புரோட்டீன் பகுதி. இந்த புரோட்டீன் செயின்கள் ஐந்து L - வகை அமினோ அமிலங்களும், D - வகை அமினோ அமிலங்களும் கலந்து உருவாகி இருக்கும்.

ஆனா சூடோ பெப்டிடோ கிலைக்கன் அதாவது பொய்யான அல்லது போலி பெப்டிடோ கிலைக்கனோட கார்போஹைட்ரேட் பகுதி N - அசிட்டைல் குளுகோஸ் அமைன் (N-ACETYL GLUCOSE AMINE) மற்றும் N - அசிட்டைல் தாலோஸமைநியூரோனிக் ஆசிடால் (N - ACETYL TALOSAMINURONIC ACID) ஆனது. ஸோ, பெப்டிடோ கிலைக்கனும், சூடோ பெப்டிடோ கிலைக்கனும் கார்போஹைட்ரெட் பகுதியில வேறுபடுது. அதே மாதிரி அதனோட சின்ன சின்ன புரோட்டீன் பகுதியை பார்த்திங்கன்னா, இதுல உள்ள எல்லா அமினோ அமிலங்களும் வெறும் மூணு L - வகை அமினோ அமிலங்கள் மட்டும் தான் இருக்கும். இதுல D-வகை அமினோ அமிலங்களே இருக்காது.




NOTE : இப்போ மக்களே, மேல சொன்னதுல உங்களுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும். ஒன்னே ஒன்னை தவிர..!!! அதாவது L - வகை D வகை அமினோ அமிலங்கள். கரெக்டா...? ஏன்னா பெப்டிடோ கிலைக்கன், அதனோட வேதி கட்டமைப்பு, N - அசிட்டைல் குளுகோஸ் அமைன் (N-ACETYL GLUCOSE AMINE) மற்றும் N - அசிட்டைல் மியூராமிக் ஆசிட் (N-ACETYL MURAMIC ACID) எல்லாமே நாம முன்னாடியே பார்த்திருக்கோம். இங்க புரியலன்னாலும் முன்னாடி நான் சொல்லியிருக்கறதை திருப்பி பார்த்திங்கன்னா உங்களுக்கு ஞாபகம் வந்திடும். ஆனா, இந்த L - வகை, D - வகை அமினோ அமிலங்கள் நான் இதுக்கு முன்னாடி சொல்லாதது.

பரவாயில்ல மக்களே...!!! பதிவு நீளமா போறதால இதை பத்தி அடுத்த பதிவுல விளக்கமாவே பார்க்கலாம். அடுத்த பதிவுல சிந்திப்போம்.     

No comments:

Post a Comment