Saturday, October 20, 2012

சில சுவாரஸ்யங்கள்: ஆப்ரேசன் ரெட் புல் ஸ்ட்ராடோஸ் - OPERATION RED BULL STRATOS...!!!

மக்களே...!!!

அடுத்த சுவாரஸ்யமான விஷயங்கள் தொடர்ல ஒரு முக்கியமான தகவல் இன்னைக்கு. போன வாரம் ஞாயிறு கிழமை 14. 10. 2012 அன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது. எத்தனை பேருக்கு இது முக்கியமான விஷயம்ன்னு தெரியல. ஆனா, எங்களை மாதிரி ரிசர்ச்ல இருக்கறவங்களுக்கு இது முக்கியமான விஷயம். 

ஆஸ்திரியாவை சேர்ந்த விண்வெளி வீரர் பிலிக்ஸ் பாம்கார்ட்னர் அப்படிங்கறவர் வானத்துல இருந்து குதிச்சார். எவ்வளவோ பேரு குதிக்கறாங்க. இவர் குதிச்சதுல என்ன விசேஷம்ன்னு கேக்கரிங்களா? எவ்வளவோ குதிச்சிருக்காங்க...ஆனா இவர் குதிச்சது வானத்தோட எல்லை... புரியல இல்லை ...? அதாவது இந்த பூமிக்கு மேல காற்று மண்டலம் மற்றும் புவி ஈர்ப்பு விசையோட கடைசி எல்லை. இவர் குதிச்ச இடத்தோட எல்லைக்கு மேல போனா காற்று மற்றும் புவி ஈர்ப்பு விசை இருக்காது. அது தான் நம்ம பூமியோட எல்லை. 

இவர் எதுக்காக குதிச்சாருன்னு தெரியுமா...? NASA ஒரு ஆராய்ச்சிக்காக, அதாவது பூமியோட எல்லையில இருந்து குதிக்கும்போது மனித உடல்ல, செல்கள்ள ஏற்ப்படும் மாற்றங்களை பத்தி படிக்கறதுக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.


குதிக்கறதுன்னா சும்மா இல்லை. வானத்தோட எல்லையில இருந்து வான்வெளியில குதிச்சி, காற்று வெளியில பாரசூட் எதுவும் இல்லாம இயற்கையான வேகத்தோட கீழ வேகமா வந்து தரையை தொட இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட உயரத்துல பாராசூட்டை விரிக்க வெச்சி தரை இறங்கனும். இதுக்கு ஆப்பரேசன் ரெட் புல் ஸ்ட்ராடோஸ் - OPERATION RED BULL STRATOS அப்படின்னு பேரு வெச்சி நடத்தியிருக்காங்க. 

படிக்க சாதாரணமா இருந்தாலும், மிக ஆபத்தான ஆப்பரேசன். காற்றோட எல்லை அப்படிங்கறது தரையில இருந்து கிட்டத்தட்ட 31 கிலோ மீட்டர் உயரம். அவ்வளவு உயரத்துல இருந்தது ஒரு சாதாரண பொருள் கீழ விழற  இயற்கையான வேகத்துல கீழ வரணும். கீழ வர வர உடலோட எடை காரணமா  வேகம் அதிகரிச்சிட்டே போகும். ப்ரீயா கீழ விழும்போது ஏற்படற மாற்றம் பத்தின ஆராய்ச்சி அப்படிங்கறதால தரையை தொட கொஞ்சம் உயரத்துல தான் பாரசூட் உபயோகப்படுத்தணும். எதுவும் பிரச்சனையாகி பாரசூட் வேல செய்யாம போயிட்டா கீழ விழுந்து சிதறிப்போக வேண்டியது தான். குதிச்சி 4.15 நிமிசத்துல பாரசூட் விரிக்கிற இடத்தை அடைஞ்சிட்டாருன்னா என்ன வேகம் இருக்கும்ன்னு யோசிச்சிக்கோங்க. அதோட அவ்வளவு வேகமா கீழ விழும்போது உடல்ல நடக்கும் மாற்றங்கள் என்ன என்னன்னு தெரியாத நிலைமை. ஏதாவது தவறா நடக்கவும் சான்ஸ் இருக்கு. இவ்வளவு ரிஸ்க் இருக்கிற  நிலமையால கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளோட  கடந்த ஞாயிறு கிழமை பிலிக்ஸ் குதிச்சி பத்திரமா தரை இறங்கினார். 

வீடியோ இணைச்சிருக்கேன். பாருங்க. என்ஜாய் பண்ணுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.



  

No comments:

Post a Comment