Saturday, December 8, 2012

வீடியோ: கரு முட்டையும், விந்து செல்லும் சந்தித்தால்...!!!

                     கரு முட்டையும், விந்து செல்லும் சந்தித்தால்...!!!

மக்களே...!!!

மறுபடியும் அதேதான், கடுமையான வேலை பளு காரணமா, நம்ம வலைப்பூவுக்கு தொடர்ந்து எழுத முடியல. நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். எப்படியும் மாசம் நாலு பதிவாவது போட முயற்சி பண்றேன். முடியத்தான் இல்ல. இன்னைக்கு இணையத்துல மேய்ஞ்சிட்டு இருந்தப்போ பார்த்த ஒரு தகவல்கள் தான் சில சுவாரஸ்யங்கள் பகுதியோட அடுத்த பதிவு.

இன்றைய சுவாரஸ்யமான வீடியோ மனித கரு முட்டை பத்தினது. ஒரு கரு முட்டையும், விந்து செல்லும் சேர்ந்து ஒரு குழந்தை உருவாகும் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஒரு முட்டை ஒரே ஒரு விந்து செல் கூடத்தான் சேருது. அங்க வெளியிடப்படர இலட்சகணக்கான மற்ற விந்து செல்கள் எதனால அதே முட்டை கூட சேர முடியல. ஏன்..? எப்படி கரு முட்டை முதல் விந்து செல் கூட சேர்ந்ததும் மற்ற செல்களை தன் கூட சேர விடாம எப்படி தடுக்குது? அது தான் இன்னைக்கு சுவாரஸ்யமான விஷயம்.

ஒரு செல்லோட செல் சவ்வு எப்படி இருக்கும்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். நாம படிச்சிருக்கோம். மனித கரு முட்டை கூட அப்படிதான் இருக்கும். அதோட செல் சவ்வுக்கு வெளிய செல்லை சுத்தி சுத்தியும் ஜவ்வு மாதிரியான புரோட்டீன் படலம் இருக்கும். விந்து செல் இதை எல்லாம் தாண்டி தான் முட்டைக்குள்ள நுழைய முடியும். முதல் விந்து செல் கரு முட்டையை தொட்டு அதுக்குள்ளே நுழைஞ்சதும், செல் சவ்வு மேல வேதி வினைகள் நடந்து சுலபமா துளைக்க கூடிய நிலையில இருந்த செல் சவ்வு அமைப்பு மாறி சுலபமா நுழைய முடியாத ஒரு படலம் மாதிரி அமைப்பு தன்னை சுத்தி உருவாக்கிக்கும். அதனால இன்னொரு விந்து செல் அதே முட்டைக்குள்ள நுழைய முடியாது.

ஸீ அர்ச்சின் - SEA URCHIN - கடல் முள்ளேலி அப்படிங்கறது ஒரு சிறிய, உடல் முழுதும் முள்ளு முள்ளா இருக்கிற மாதிரியான, அதே சமயம் ஆண், பெண் வகைப்பாடு இருக்கிற கடல் வாழ் உயிரினம். ஒரு முட்டையும் விந்து செல்லும் சேரும்போது என்ன நடக்குதுங்கற ஆராய்ச்சி இந்த உயிரினங்களை வெச்சி தான் பண்ணினாங்க.


இதை அப்படியே காட்ற  ஒரு வீடியோ கெடைச்சது. பரிசோதனை கூடத்துல வெச்சி, கடல் வாழ் உயிரினம் (SEA URCHIN) கரு முட்டையையும், விந்து செல்களையும் ஒண்ணா சேர்த்து வெச்சி பார்த்தப்போ, நிறைய விந்து செல்கள் ஒரே முட்டையில சேருவது தடுக்க முட்டை என்ன பண்ணுதுன்னு பார்த்திட்டு, அப்படியே வீடியோ எடுத்து வெச்சிருக்காங்க. அதோட முட்டை சைசும், விந்து செல்லோட சைசுக்கும் இருக்கிற வித்தியாசம், ஒண்ணுக்கும் மேற்பட்ட விந்து செல்கள் முட்டைக்குள்ள எப்படியாவது நுழைய முட்டி மோதறதும், சான்சே இல்லை. என்ன ஒரு அற்புதமான வீடியோன்னு நீங்களே பார்த்து என்ஜாய் பண்ணுங்க...!!!



அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!



No comments:

Post a Comment