Saturday, December 22, 2012

நோபல் பரிசு - NOBEL PRIZE - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!

அடுத்த பதிவுக்கான நேரம் இது. நானே எதிர்ப்பார்க்கல, அடுத்த பதிவு உடனடியா  போடுவேன்னு...!!! இது எழுதலாம்ன்னு முன்னாடியே பிளான் எல்லாம் பண்ணி டிராப்ட்ல போட்டு வெச்சி ரொம்ப நாள் ஆச்சி. இப்போ தான் நேரம் வந்தது. ஓகே... ரொம்ப அறுக்க போறது இல்ல. நேரிடையா விசயத்துக்கு வரேன்.  எல்லாரும் நோபல் பரிசு பத்தி கேள்விபட்டு இருப்போம். ஒவ்வொரு துறையிலயும் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை, அதுலயும் மனித குலத்தின் வாழ்வுக்கு உபயோகப்படும்படியான கண்டுபிடிப்புகளை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் பரிசு இது. 

சுவீடனை சேர்ந்த ஆல்பிரெட் நோபல் (1833-1896) அப்படிங்கற விஞ்ஞானி, 1895வது வருஷம் தன்னோட சொத்துகளை எல்லாம் உபயோகப்படுத்தி இதுமாதிரி பரிசு வழங்கணும் அப்படின்னு எழுதி வெச்சிட்டு செத்து போயிட்டாரு. அதுக்கு அப்புறம் கவர்ன்மெண்ட் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி 1901ஆம் வருசத்துல இருந்து இதை குடுத்திட்டு வராங்க. இந்த கமிட்டியில SWEDISH ACADEMY - ஸ்வீடன் அகாடமி, NOBEL COMMITTEE OF ROYAL - இராயல் நோபல் கமிட்டி, SWEDISH ACADEMY OF SCIENCE - ஸ்வீடன் அறிவியல் அகாடமி, NOBEL COMMITTEE OF KAROLINSKA INSTITUTE - கரோலின்ஸ்கா நிறுவன நோபல் கமிட்டி, NORWEGIAN NOBEL COMMITTEE - நார்வே நோபல் கமிட்டி அப்படின்னு 5 விதமான கமிட்டி சேர்ந்து பரிசு வாங்கறவங்களை தேர்வு பண்ணும். 



அதுவும் குறிப்பா, சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்கிய இயற்பியல் - PHYSICS , வேதியியல் - CHEMISTRY , இலக்கியம் - LITERATURE, உலக அமைதி - PEACE , உடற்கூறு இயல் அல்லது மருத்துவம் - PHYSIOLOGY OR MEDICINE மற்றும் பொருளாதாரம் - ECONOMICS ஆகிய துறைகளை சேர்ந்தவங்களுக்கு வழங்கப்படும். இதுல உலக அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நோபல் கமிட்டி குடுக்குது. மத்தது எல்லாம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நோபல் கமிட்டி குடுக்குது. சினிமாவுக்கு ஆஸ்கர் அப்படின்னா ரிசர்ச் பண்றவங்களுக்கு நோபல் பரிசுதான் உச்சக்கட்ட லட்சியமா இருக்கும்.   



நோபல் பரிசு அப்படிங்கறது பரிசு பணம் - 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை (தற்போதைய நிலவரப்படி 5.5 கோடி இந்திய ரூபாய்கள்) (வருசா வருஷம் பரிசு பணம் கூடவோ, குறையவோ செய்யலாம். இந்த வருஷம் 1. 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரைக்கும் ), தங்க பதக்கம் - 175 கிராம் சுத்த தங்கம், அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட சான்றிதழ் இதெல்லாம் உள்ளடக்கியது. ஒரே சமயத்துல ஒரே துறையில ரெண்டு பேரு பரிசு வாங்கினா பரிசு பணம் சமமா பிரிச்சி குடுப்பாங்க. பதக்கம், சான்றிதல் தனித்தனியா கெடைக்கும். 



நோபல் பரிசு வழங்கறதுலயும் சில சமயம் காமெடி எல்லாம் நடந்திருக்கு. நெறைய சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் உண்டு. இது எல்லாம் சேர்த்து,  இதுவரைக்கும் உயிரியல் துறையை சேர்ந்தவங்க என்னென்ன கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வாங்கியிருக்காங்க, அப்படி என்னென்ன கண்டு புடிச்சாங்க அப்படின்னு விளக்கமா ஒரு தொடரா எழுதலாம்ன்னு இருக்கேன். 

இதை எல்லாம் பார்த்து யாராவது நாமளும் முயற்சி செய்தா என்ன அப்படின்னு நெனச்சா கூட எனக்கு சந்தோசம் தான். அடுத்த பதிவுல சிந்திப்போம்.

1 comment:

  1. /விளக்கமா ஒரு தொடரா எழுதலாம்ன்னு இருக்கேன். /

    நோபல் தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கேன்.

    ReplyDelete