Thursday, February 14, 2013

கேள்வி நேரம் - QUIZ TIME - 1

மனிதன் என்பவன் ஒரு செல் உயிரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவன் அப்படிங்கறது நமக்கு எல்லாம் தெரியும். இந்த பரிணாம வளர்ச்சியில் கடைசியா வந்த உயிரினம் மனிதன் தான். பரிணாம வளர்ச்சியின் கோட்பாடுகள் படி உபயோகத்தில் இல்லாத உறுப்புகள் அல்லது சிறப்புகள் அடுத்த படி நிலையில் காணாம போயிடும். அதேப்போல அதிகப்படியான உபயோகத்தில் இருக்கும் உறுப்புகள் அல்லது சிறப்புகள் பெரியதாக அல்லது அதிகப்படியாக மேம்பாடு அடையும். அதேப்போல எந்த ஒரு படி நிலையும் நிலையானது அல்ல. வேண்டுமானால் முந்தின நிலையில் உருவான உயிரினங்கள் அப்படியே இருக்கலாமே தவிர, பரிணாமம் காலப்போக்கில் அடுத்த படிநிலைக்கு நகரும். அதன்படி மனிதனுக்கு அடுத்த நிலையும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
 
                                                      படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம் 

இப்போ என்னோட கேள்வி - மனிதனுக்கு அடுத்தத கட்டமாக வரக்கூடிய உயிரினம் எப்படி இருக்கும் அப்படின்னு உங்களால் யூகிக்க முடிகிறதா ? முடிகிறது என்றால் அந்த உயிரினம் எப்படி இருக்கும் ? அப்படி இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

பதில் எழுதுங்க மக்களே...!!!!!!!!!

2 comments:

  1. எதிர்காலத்துல அணு உலைகளோ,அணுகுண்டுகளோ வெடிச்சு உலகம் அழியாம இருந்தது,
    மனித இனமும் தொடர்ந்து இருந்ததுனா?
    நம்ம சுவாச உறுப்புகள்ல மாறுதல் வரலாம்,
    ஏன்னா,ஹெல்மெட் & கூலிங் கிளாஸ் போடாம பைக்ல போனா
    கண்களுக்குள்ளையே கரிபடியுற அளவுக்கு ஒரே புகைமயம்.
    வாகனங்கள்,தொழிற்சாலைகள் வெளியிடும் புகை பால்ல தண்ணி கலந்தது போல காத்தோட ஒன்னா கலந்துடுச்சு.
    மத்தபடி நம்ம உருவத்துல பெரிய மாறுதல் வரும்னு எனக்கு தோனல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு செழியன் அவர்களே...!!!!

      நல்ல சிந்தனை, அதுக்கு சரியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமும் கூட...!!!!!!!!!

      உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பதிவுகளை படிச்சிட்டு தவறாம பின்னூட்டம் போடுங்க.
      உங்க நண்பர்களுக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க.
      மறுபடியும் நன்றி...!!!!!!!!!!!!!!!

      Delete