Friday, April 12, 2013

கேள்வி நேரம் - QUIZ TIME: பேரு வெச்சவங்க யாரு ????

 மக்களே...!!!

பூமி எப்படி உருவாச்சின்னு நமக்கு தெரியும். பலர் சொல்ல கேட்டிருக்கறோம். எவ்வளவோ பேரு எழுதின புத்தகங்கள் படிச்சிருக்கறோம். அறிவியல் சம்பந்தப்படுத்தி, கடவுளை சம்பந்தப்படுத்தி கதைகள் எல்லாம் பார்த்திருக்கறோம். 

நான் நம்ம பரிணாமம் தொடருக்காக தகவல்களை தேடிட்டு இருக்கும்போது, திடீர்னு இந்த சந்தேகம் வந்தது. இது வரைக்கும் பூமி பூமின்னு (EARTH அப்படின்னு ஆங்கிலத்துல) எல்லாரும் எந்த காலத்துல இருந்தோ சொன்னாங்க. சொல்றாங்க. சொல்லுவாங்க.   



ஆனா, பூமி உருவாகும் போதே கண்டிப்பா அது பூமி அப்படிங்கற பேரோட பொறந்திருக்காது. இங்க உருவான மனுசங்க தான் பின்னாடி இந்த கிரகத்தை பூமி - EARTH அப்படிங்கற பேர்ல கூப்பிட்டு இருக்கணும். பூமி அல்லது EARTH அப்படிங்கற இந்த பேரு யாரோ ஒருத்தரால பின்னாடி வைக்கப்பட்டிருக்கணும். ஸோ யாரால, எப்போ இந்த கிரகம் பூமி அல்லது EARTH அப்படிங்கற இந்த வார்த்தையை, பெயரை உபயோகிச்சி வைக்கப்பட்டது? எளிமையா சொல்லணும் அப்படின்னா நம்ம பூமிக்கு பூமி அல்லது EARTH அப்படின்னு பேரு வெச்சவங்க யாரு ? நானும் இணையத்துல தேடிபார்த்தேன். சூரிய குடும்பத்தோட மத்த கிரகங்கள் பத்தி தான் தகவல்கள் இருக்கே தவிர, குறிப்பா பூமியினுடைய பெயர் காரணம் பத்தின தகவல்கள் இல்லை. ஸோ,   தெரிஞ்ச நண்பர்கள் நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட பகிர்ந்துக்கலாம். கண்டிப்பா சொல்லணும்... ப்ளீஸ்...!!!!!!!


13 comments:

  1. நானும் தேடினேன் கிடைக்கல பாஸு..

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ, அதிஷா சார்...!!!!
      நன்றி உங்க பின்னூட்டத்துக்கு.
      தேடிப்பாருங்க. கெடைச்சா சொல்லுங்க...!!!

      Delete
  2. இந்த கிரகத்துக்கு உலகம்னு பேர்வச்சவங்கதான் பூமின்னும் பேர்வச்சிருக்கனும்,
    இல்லையா!?
    சரி,சரி மொறைக்காதீங்க,
    அனேகமா பெயர் காரணத்த பத்தி யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்,
    உங்களுக்கு பதில் தெரிஞ்சா(எத்தன வருஷம் ஆனாலும் சரி)மறக்காம எங்களுக்கும் சொல்லுங்க.


    ReplyDelete
    Replies
    1. நன்றி செழியன்.
      கண்டிப்பா சொல்றேன், பதில் கெடைச்சதும்.

      Delete
  3. இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைச் சீண்டும் பதிவு.


    நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தெரியும், கடவுள் மனிதனைப் படைத்தான்; மனிதன் பெயர்ச்சொற்களை உருவாக்கினான் என்று. எ.டு. ஆபிரகாமிய மதத்தவர்களுக்குத் தெரியும், ஆதம்(Adam)தான், அதுவும் கடவுளின் நன்மதிப்பில் இருந்து வீழ்ந்துபட்ட பிறகு, எல்லாவற்றிற்கும் பெயர்வைத்தான் என்று. ஆனால் அது அராமிக் (Ademic) மொழியிலா அல்லது ஹீப்ருவிலா என்று கேட்டால் சண்டை வரலாம். அல்லது பேபேலுக்கு முந்தி என்ன மொழி இருந்தது என்று வினவினாலும் குழப்பம் வரும்.

    நம்மூர் ஆட்கள் பார்த்தார்கள், "அப்படி வர்றீயா? இந்தா புடி!" என்று, "அது தேவபாஷை, அதுதான் ஸம்ஸ்க்ருதம்," என்றார்கள். "ஆனால் ஸம்ஸ்க்ருதம் செய்யப்பட்ட மொழியாயிற்றே, இயல்பானது இல்லையே?" என்றவர்க்கு, "சரியாகச் சொன்னாய். ரிஷிகள் தவமிருந்து ஞானக் கண்ணில் கண்டறிந்து தேவபாஷையைச் செய்தார்கள்" என்பதே விடை. "என்றால், குர்ஆனை எப்படி முஹம்மது (ஸல்) அரபி மொழியில் கண்டறிந்தார்?"

    "என்னாதிது, சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு?! நம்பிக்கை வேறு. நம்பிக்கை வேறு. நம்பிக்கை வேறு. அதில் வினா விடைகளுக்கு இடம் இல்லை."

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார். நான் எங்கயும் கடவுள் பத்தியோ கடவுள் நம்பிக்கை பத்தியோ எதுவும் சொல்லவும் இல்லை எழுதவும் இல்லை. சூரிய குடும்பத்தோட மத்த கிரகங்கள் பேரை வெச்சவங்க அப்படின்னு பார்த்தா கிரேக்கர்கள், ரோமானியர்கள் அப்படின்னு நெறைய தகவல்கள் இருக்கு. அது மாதிரி பூமிக்கு பேர் வெச்சவங்க யாரு ? இதுல கடவுளோ, கடவுள் நம்பிக்கை எங்க வந்தது ?

      நான் பூமியும், உயிரினங்களும் எப்படி எப்போ உருவானது, உருவான உயிரினங்கள் மனிதன் ஆக பரிணாமம் அடைந்தது வரையான அறிவியல் பூர்வமான தகவல்களை திரட்டி மாணவர்களுக்கும், மத்தவங்களுக்கும் உதவும் வகையில் எளிய தமிழில் தர முயற்சி பண்ணிட்டு இருக்கேன். புடிச்சா படிங்க. கேட்டிருக்கிற கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க. தெரியலன்னா விடுங்க. சும்மா சீன்டிவிடற வேலை எல்லாம் வேணாம்.

      Delete
  4. The modern English word and name for our planet ‘Earth’, is said to go back at least 1,000 years. Just as the English language evolved from ‘Anglo-Saxon’ (English-German) with the migration of certain Germanic tribes from the continent to Britain in the fifth century A.D, the word ‘Earth’ came from the Anglo-Saxon word ‘erda’ and it’s germanic equivalent ‘erde’ which means ground or soil. In Old English, the word became ‘eor(th)e’ or ‘ertha ‘. There is speculation that the origins of the word may be from an Indo-European language base ‘er’ which produced more modern adaptations of the word used in languages today. What is certain though is of all the Planet’s names, Earth is the only one in our solar system that does not come from Greco-Roman mythology. All of the other planets were named after Greek and Roman gods and goddesses.
    Read more at http://www.todayifoundout.com/index.php/2010/09/how-earth-got-its-name/#SlisTOrIdxky1BuA.99

    ReplyDelete
  5. Translations of the Bible into English was one of the earliest recorded use of the name Earth – ” God called the dry land Earth, and the waters that were gathered together he called Seas. And God saw that it was good. “(Genesis 1:10)
    Read more at http://www.todayifoundout.com/index.php/2010/09/how-earth-got-its-name/#SlisTOrIdxky1BuA.99

    ReplyDelete
  6. http://en.wikipedia.org/wiki/Earth

    ReplyDelete