Saturday, July 27, 2013

ஒரு வேண்டுகோள்...!!!


நண்பர்களே...!!!

அடுத்த பதிவுக்கு தயார் ஆகிட்டு இருக்கேன். அதுக்கு நடுவுல நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். நம்ம வலைப்பூவை பின்தொடர்பவர்களிலும், உயிர்நுட்பம் FACE BOOK கணக்குல இருக்கிற நண்பர்களிலும் நெறைய ஆசிரியர்கள் இருக்கறதால இந்த வேண்டுகோளை கேக்கலாம் அப்படின்னு தோணுச்சி. 

முதல்ல இது நாள் வரை நீங்க நம்ம வலைப்பூவுக்கு குடுத்த ஆதரவுக்கு நன்றி. 

உயிர்நுட்பம்  தொடங்கின புதுசுல படிக்கிற வாசகர்கள்ல பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுல இருந்து படிக்கிறவங்களா தான் இருந்தாங்க. நான் எழுதறதையும் நெறைய பேர் படிக்கிறாங்க அப்படின்னு சந்தோசம் ஒரு பக்கம்  இருந்தாலும், அப்போ எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கும். ஏன்னா, நான்  இந்த வலைப்பூ எழுதத் தொடங்க ஒரு முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் சரியான வாசிப்பு திறன் இல்லாத தமிழ் வழி வந்த மாணவர்களுக்கு இந்த வலைப்பூ உதவியா இருக்கும்   அப்படின்னு தான்.    ஏன்னா,  நானும் தமிழ் வழி பள்ளியில் இருந்து வந்து, கல்லூரியில் ஆங்கிலம் படிக்க முடியாமல் தடுமாறியவன். முறையான தமிழ் வழிப் புத்தகங்கள் இல்லாமல், ஆங்கிலமும் புரியாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டவன்.  இது நடந்தது 2001-ஆம் வருஷம். ஆனா, இத்தனை வருடங்கள் கடந்தும், இப்பவும் ஒரேயொரு சரியான தமிழ் வழி புத்தகம், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கிடையாது. அதனால, வலைப்பூ ஆரம்பிச்சி உயிரியல் எழுதலாம்னு முடிவானதும், தயக்கமே இல்லாமல் அதை தமிழ்ல தான் எழுதறதுன்னு முடிவு செய்தேன்.

இப்போ, நெறைய ஆசிரியர்களும் நம்ம வலைப்பூவை படிக்கிறதால, நீங்க உங்க மாணவர்களுக்கு குறிப்பா தமிழ் வழிமாணவர்கள் இருந்தா, அவங்க எல்லாருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தனும் அப்படின்னு கேட்டுக்கறேன். ஆசிரியர்கள் அப்படின்னு இல்லை, நம்ம நண்பர்கள் எல்லாரும், நம்ம வலைப்பூவையும், உயிர்நுட்பம் FACE BOOK பக்கத்தையும் உங்க நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகப்படுதினிங்கன்னா, அப்படியே ஒவ்வொருத்தரா சேர்ந்து இன்னும் நெறையப் பேருக்கு போய் சேரும். என்னோட நோக்கமும் நிறைவேறும். நண்பர்கள் இதை கண்டிப்பா செய்வீங்கன்னு நெனக்கிறேன். நம்பறேன். 




நண்பர்கள் எல்லாருக்கும், உங்க ஆதரவுக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி.  


NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

15 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஹாய்,

      உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. நான் ஜெர்மனியில் தான் இருக்கேன். like box எப்படி போடறதுன்னு எனக்கு தெரியல. இந்த டெக்னிகல் விசயங்களில் நான் கொஞ்சம் வீக். உங்களுக்கு தெரியும்னா கொஞ்சம் சொல்லிக்குடுங்க.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      நன்றி உங்க உடனடி பதிலுக்கு. என்னோட வலைப்பூ செட்டிங்கிள் எதோ பிரச்சனை இருக்கு
      நான் இதுக்கு முன்னாடி சில code - களை paste செய்து பார்த்திருக்கேன். என்ன காரணத்தாலோ எதையும் அது ஏத்துக்கல.

      இப்படி வேண்டுமானால் இப்படி செய்யலாம். என்னோட பாஸ்வோர்ட் தரேன். சில உபயோகமான மாற்றங்களை, tool- களை இணைத்துக் கொடுங்கள். நான் இப்போ இருக்கிறது ஜெர்மனின்னாலும் நான் நம்ம ஊர் தான். சென்னை.

      Delete
  3. தங்கள் பதிவுகள் அனைத்தும்
    பயனுள்ள பதிவுகளாக இருப்பது மகிழ்வளிக்கிறது
    ஆரம்பம் முதல் படிக்கத் துவங்கியுள்ளேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.
      படிக்கிறதோட விட்டுடாம உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
      சந்தோசப்படுவேன்.
      மிக்க நன்றி

      Delete
  4. https://www.facebook.com/photo.php?fbid=1387170414834854&set=a.1378840972334465.1073741828.100006257257014&type=1&theater

    ReplyDelete
  5. அடடாடா இவ்ளோ நாள் எப்படி இந்த வலைப்பூவை பாக்காம விட்டனு தெரியல.......எப்படியோ இப்ப பாத்துட்டன்..Facebook லயும் bloga share பண்ணிடேன்.. Biochemicians என்று ஒரு குழு facebook la இருக்கு. அதுலயும் இணைச்சிடேன். வாழ்த்துக்கள்., உங்கள் தளம் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது... கண்டிப்பாக தொடரவும்...தொடர்ந்து பதிவுகளை எதிர்ப்பார்ப்பேன்.


    அப்படியே facebook like box-உம் Google+ +1 button-உம் இணைச்சிட்டா ரொம்ப வசதியா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. திரு சாமுவேல் அவர்களுக்கு, நன்றி.
      படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொன்னதுக்கு.
      இதே யோசனையை இன்னும் வேற ஒரு நண்பரும் வெச்சிருந்தார். ஆனா என்னவோ ஒரு தொழில்நுட்ப பிரச்சனையால் என்னால் அதை செய்ய முடியல. யாரேனும் எனக்காக செய்து தர முன்வந்தால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.

      தொடர்ந்து படிங்க பின்னூட்டத்துல உங்க கருத்துக்களை தவறாம சொல்லுங்க. அது என்னோட எழுத்தை இன்னும் சிறப்பாக்க உதவும்.

      Delete
    2. உங்க நண்பர்களுக்கும் பகிருங்க...!!!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன மாதிரி CODE காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணி பார்த்தேன். அது ஏத்துக்க மாட்டேங்குது. code can not be saved அப்படின்னு காமிக்குது.

      நன்றி.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. yes. i think so. i had sent you one mail.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete