Sunday, April 22, 2012

செல் - சில உண்மைகள் - திருத்தப்பட்ட பகுதி - 1

நண்பர்களே...!!! 

இது திருத்தப்பட்ட நமது முந்தைய பதிவு. 

நாம ஆரம்பத்துல இருந்து நாம பார்த்திட்டு வரது என்னன்னா, செல்கள் தான் நம்ம உடலோட அடிப்படை அல்லது அலகு. அதென்ன அலகு...? உதாரணத்துக்கு, ஒரு நீளமான பாசிமணிகளால் ஆன மாலையில் ஒவ்வொரு மணியும் ஒரு அலகு.  அதே மாதிரி, பல கோடி செல்களால் ஆன நம்மளோட உடலுக்கு, ஒவ்வொரு செல்லும் அடிப்படை அல்லது அலகு. செல்களை அடிப்படையா கொண்ட உயிரினங்களில்  ஒரே ஒரு செல் மட்டுமே ஒரு உயிரினமா இருக்கலாம் (பேக்டீரியா, வைரஸ் போன்றவை) அல்லது பல செல்கள் சேர்ந்து ஒரு  உயிரினமாகவும் இருக்கலாம் (மனிதன், தாவரங்கள், விலங்குகள்). இன்னைய தேதில, நம்மளோட உடல்ல மொத்தம் 75 முதல் 100 டிரில்லியன்  செல்கள் வரைக்கும் இருக்கலாம்ன்னு கணக்கிட்டு இருக்காங்க. ஓகே ...!!!
(10 லட்சம் - 1 மில்லியன் , 1000 மில்லியன் - 1 பில்லியன் , 1000 பில்லியன் - 1 டிரில்லியன் )

ஓகே...!!! இன்னிக்கு செல்கள் பத்தின சில சுவாரஸ்யமான உண்மைகள் பத்தி பார்க்க போறோம். 

1 . முதல் விஷயம் செல்களோட சைஸ். செல்களை நம்ம கண்ணால் அப்படியே பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப் வழியா பார்த்தாலே   அதிகபட்சம் ஒரு சின்ன குமிழ் மாதிரி தெரியலாம் அவ்ளோதான். ஆனா, நம்ம ஸ்கூல்ல, காலேஜ்ல, மருத்துவமனையில இருக்கிற   சாதாரண லேப்ல பயன்படுத்தற மைக்ராஸ்கோப்போடதிறமை ஒருபொருளை அதிகபட்சம் இரண்டு ஆயிரம் மடங்கு மட்டுமே பெருசுபடுத்தி காட்டும். மிக சக்தி வாய்ந்ததா கருதப்படும் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் 10000000 மடங்கு பெருசாக்கி காட்டும். இந்த எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாக  பார்த்தாலே அதிகபட்சம் ஒரு கோலி அளவுக்கு தெரியலாம் அவ்ளோதான். 

முதல் படத்துல இருக்கிற டியுப்குள்ள எவ்வளவு செல்கள் இருக்கலாம்ன்னு ஒரு யூகம் பண்ண முடியுமா...? என்னோட கெஸ் கடைசில...


2 . இந்த உலகத்தில இருக்கிற செல்களை மொத்தம் ரெண்டு அடிப்படை
   வகைகளா பிரிக்கலாம்.
  • புரோகேரியோட்ஸ்- Prokeriyotes- மேம்படுத்தப்படாத கட்டமைப்பு உடையவை. (தமிழாக்கம் சரியா? )
  • யூகேரியோட்ஸ் - Eukaryotes - மேம்படுத்தப்பட்ட செல் கட்டமைப்பு உடையவை
புரோகேரியோட்ஸ் எனப்படும் மேம்படுத்தப்படாத கட்டமைப்புடையவை அப்படிங்கறது என்னன்னா, இந்த பூமியில் முதன்முதல்ல உயிரினம் அப்படிங்கற பேர்ல தோன்றின செல்கள் தான் இது. முதன்முதல்ல உருவானதால, ஒரு செல் (அப்போ ஒரு செல் உயிரினகள் தான் அப்படிங்கிறதால, இதை உயிரினம் அப்படின்னே சொல்வோம் ) ஒரு உயிரினம் முழுமை அடைய என்ன என்ன தேவை அப்படின்னு அந்த உயிரினத்துக்கும் தெரியாது. ஸோ, அது ஒரு உயிரினம் அப்படிங்கிற பேர்ல ஒரு செல் ஒன்னு உருவாகி முக்கியமா, முழுமையடையாத நிலையில உருவாகி பிறகு தன்னோட தேவைக்கு, தன்னோட வசதிக்கு ஏத்த மாதிரி தன்னை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிச்சி.


உதாரணத்துக்கு, முதல் செல் உருவான டைம்ல இங்க வெறும் கடல் மட்டுமே இருந்தது. அந்த கடல்ல தான் முதல் செல் உருவாச்சி. அப்படி உருவான செல்கள்ள  கொஞ்சம் DNA அதை சுத்தி செல் சவ்வு மட்டும் தான் இருந்தது. அப்புறமா, கெடைச்சதை சாப்பிட்டு வந்த அது, சாப்பாடு கெடைக்காத போது தன்னோட சக்தியை தானே தயாரிக்க மைட்டோகான்ட்ரியா உருவாக்குச்சி.

(நண்பர் Dr. Dolittle, அனுப்பின சில பேப்பர்கள்ள, இந்த மைட்டோகாண்ட்ரியா என்பது வேறொரு ஒரு செல் உயிரினம் அப்படின்னும், அது இந்த செல்லுக்குள்ள புகுந்து பிறகு மைட்டோகான்ட்ரியாவா மாறினதுன்னும் ஒரு கருத்து நிலவரதா போட்டிருக்கு. நானும் இதைப்பத்தி கேள்வி பட்டிருக்கேன். ஆனா இதைப்பத்தி தனியா ஒரு ஆர்ட்டிகிள் இருக்கறதும், தனியா ஒரு தியரம் இருக்கறதும் எனக்கும் புது செய்தி. நன்றி நண்பரே...!!!)


மேட்டருக்கு வருவோம். இன்னும் கொஞ்ச செல்கள் பச்சையம் கொண்ட செல் உறுப்பை வளர்த்து தாவரம் ஒரு இனமாகவும், விலங்கு ஒரு இனமாகவும் வந்தது. தன்னோட DNAவை பாதுகாப்பா காப்பாத்திக்க நியூக்ளியஸ் உருவாக்குச்சி. தனக்கு தேவையான ப்ரோடீன்களை உருவாக்க என்டோப்லாஸ்மிக் வலையமைப்பு, உருவான ப்ரோடீன்களை ஒரு இடத்துல இருந்து வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ண கோல்கை உறுப்பு இப்படி பல இடைப்பட்ட நிலைகள்...பல மாற்றங்கள். மாற்றம் அப்படின்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டனே தவிர, இந்த ஒவ்வொரு மாற்றமும் ஏற்பட, ஒரு நிலையில இருந்து இன்னொரு நிலைக்கு மேம்பட, பல நூறு வருடங்கள் ஆச்சி. இந்த மாற்றத்துக்கு பேருதான் பரிணாமம்.

இந்த பரிணாம வளரச்சி தான் ஒரே ஒரு செல்லுல உருவான அந்த உயிர், இன்னைக்கு மனிதன் வரை வளர்ந்து வந்திருக்கு. ஆனா, ஒவ்வொரு உயிரும், அடுத்த நிலைக்கு வளர்ந்து போனாலும், அதுக்கு முந்தைய நிலையில் இருந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போகல... அதனாலதான், மனிதனுக்கு முந்தைய நிலைகளான ஒரு செல் உயிரினங்களில் இருந்து குரங்கு வரை இந்த பூமியில் இன்னும் இருக்கு.

ஸோ, இந்த கதையில, புரோகேரியோட்ஸ் என்பது, முதலில் தோன்றிய முழுமை அடையாத அந்த ஒரு செல் உயிரில் இருந்து, ஒரு முழுமையான கட்டமைப்பு உடைய அதேமாதிரியான ஒரு செல் வரை. அதாவது தன்னோட கட்டமைப்பை தேவைக்கு ஏற்ப மேம்படுத்தி  முழுமை அடையற வரைக்கும் அந்த செல் ஒரு செல் உயிரினமாகவே இருந்துச்சி. தன்னை முழுசா மேம்படுத்திகொண்டதுக்கு அப்புறம் தான், இந்த ஒருசெல் உயிரினம் இரண்டு, மூன்றுன்னு பிரிஞ்சி, பல செல் உயிரினங்களா மாற ஆரம்பிச்சது. ஸோ, இந்த பூமியில் உயிரினம் தோன்றியதுக்கு ஆரம்ப புள்ளி அந்த முழுமையடையாத ஒரு செல்.

அதே மாதிரி, பல செல் உயிரினம் தோன்ற ஆரம்ப புள்ளி முழுமையடைந்த ஒரு செல் உயிரினம். அந்த முழுமை அடைந்த ஒரு செல் உயிரினத்தில் இருந்து, இன்னிக்கு இருக்கிற மனிதன் வரை யுகேரியோட்ஸ். இடைப்பட்ட ஒவ்வொரு அடுத்த நிலையும் ஒவ்வொரு உயிரினம். உதாரணம் ஒரு செல் உயிரினம், இரு செல் உயிரினம், பிறகு பல செல் மீனினம், தவளை, ஊர்வன, பறப்பன போன்றவை.

அப்போ, புரோகேரியோட்ஸ் என்பது, முதலில் தோன்றின செல்லில் இருந்து, மேம்படுத்தப்பட்ட செல்லாக முழுமை அடையிற வரைக்கும் (முழுமை அடைந்த ஒரு செல் அல்ல ) இருந்த, பல்வேறு நிலைகள்... ஒவ்வொரு இடைப்பட்ட நிலையும் தனி தனி அடுத்த லெவல் உயிரினம்.... அடுத்த லெவல் செல்கள்.  

ஓகே என்னோட கெஸ் படி அந்த டியூப்க்குள்ள மிக குறைந்த பட்சமே, ஒரு நூறு கோடி செல்கள் இருக்கலாம். நீங்க எவ்வளவு கெஸ் பண்ணிங்க...?

இந்த பதிவு நீளம் கருதி இரண்டு பகுதிகளாக பதிய இருக்கிறேன் மக்களே... !!! பதிவு பற்றின உங்க கருத்துக்களை பின்னூட்டத்தில சொல்லுங்க. அடுத்த பதிவுல சந்திக்கலாம்.

No comments:

Post a Comment