Thursday, August 21, 2014

ஒரு வலைப்பூ இணையதளமாகிறது...!!!

 
நண்பர்களே...!!!

மறுபடியும் ஒரு சந்தோசமான செய்தி. வரும் மாதத்தில் இருந்து நான் எழுதற கட்டுரைகள் ஹெல்த் கேர் மாத இதழில் வெளி வர இருப்பது நான் ஏற்கனவே உங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டிருக்கேன்.

ஹெல்த் கேர் மாத இதழின் ஆசிரியர் திரு. ராஜா அவர்கள் நமக்காக மற்றும் ஒரு ஏற்பாட்டினை செய்து கொடுத்திருக்காரு. அதன்படி, நமது உயிர்நுட்பம் வலைப்பூ இணையதளமாகிறது.

இணையத்தள முகவரி -http://uyirnutpam.com/

இணையதள வடிவமைப்பு வேலைகள் நடந்திட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே நாம புதிய இணையதளத்தில் இயங்க போறோம். வடிவமைப்பு வேலைகள் முடிந்ததும், புதிய தளத்தில் புதிய பதிவுகளோடு ஆரம்பிக்கலாம். அடுத்த பதிவில் சிந்திப்போம்.  


NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

Tuesday, August 19, 2014

நானும் எழுதப்போறேன்...!!!

 நண்பர்களே...!!!!

வலைப்பூ பக்கம் வந்து, ரொம்ப நாள் இல்ல இல்ல சில மாதங்களே ஆயிடுச்சு. என்னோட PhD - யின் கடைசி வருடங்களில் இருக்கறதால, கடுமையான வேலை பளு. அப்பப்போ வந்து பார்க்கும் போது எழுத நேரம் ஒதுக்க முடியலயேன்னு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

அதுக்கும் ஒரு வழி கெடைச்சிடுச்சி. நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ பார்த்துட்டு நெல்லையில் இருந்து திரு. ராஜா, ஹெல்த் கேர் மாத இதழின் ஆசிரியர் தொடர்பு கொண்டு நம்ம வலைப்பூவில் கடைசியா வெளியான தூக்கம் சம்பந்தப்பட்ட பதிவை வெளியிட விரும்புவதாக அனுமதி கேட்டார். அதோட மட்டும் இல்ல, ஒவ்வொரு மாதமும் அறிவியல், ஆராய்ச்சி அல்லது மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் அந்த பத்திரிக்கைக்காக எழுத முடியுமான்னு கேட்டிருக்கார். இது தமிழில் வெளிவரும் மருத்துவ மாத இதழ். எனவே நானும் எழுத ஒப்புக்கொண்டுள்ளேன். 



ஸோ, நம்ம வலைப்பூவுக்கும், பத்திரிக்கைக்கும் சேர்த்தே எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்தே என்னுடைய கட்டுரைகள் வெளிவரும். படிக்க வாய்ப்பு கெடைக்கிறவங்க படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க. 

அடுத்த பதிவில் சிந்திப்போம்.



NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.