Showing posts with label உயிர்நுட்பம் FACE BOOK. Show all posts
Showing posts with label உயிர்நுட்பம் FACE BOOK. Show all posts

Saturday, July 27, 2013

ஒரு வேண்டுகோள்...!!!


நண்பர்களே...!!!

அடுத்த பதிவுக்கு தயார் ஆகிட்டு இருக்கேன். அதுக்கு நடுவுல நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். நம்ம வலைப்பூவை பின்தொடர்பவர்களிலும், உயிர்நுட்பம் FACE BOOK கணக்குல இருக்கிற நண்பர்களிலும் நெறைய ஆசிரியர்கள் இருக்கறதால இந்த வேண்டுகோளை கேக்கலாம் அப்படின்னு தோணுச்சி. 

முதல்ல இது நாள் வரை நீங்க நம்ம வலைப்பூவுக்கு குடுத்த ஆதரவுக்கு நன்றி. 

உயிர்நுட்பம்  தொடங்கின புதுசுல படிக்கிற வாசகர்கள்ல பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுல இருந்து படிக்கிறவங்களா தான் இருந்தாங்க. நான் எழுதறதையும் நெறைய பேர் படிக்கிறாங்க அப்படின்னு சந்தோசம் ஒரு பக்கம்  இருந்தாலும், அப்போ எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கும். ஏன்னா, நான்  இந்த வலைப்பூ எழுதத் தொடங்க ஒரு முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் சரியான வாசிப்பு திறன் இல்லாத தமிழ் வழி வந்த மாணவர்களுக்கு இந்த வலைப்பூ உதவியா இருக்கும்   அப்படின்னு தான்.    ஏன்னா,  நானும் தமிழ் வழி பள்ளியில் இருந்து வந்து, கல்லூரியில் ஆங்கிலம் படிக்க முடியாமல் தடுமாறியவன். முறையான தமிழ் வழிப் புத்தகங்கள் இல்லாமல், ஆங்கிலமும் புரியாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டவன்.  இது நடந்தது 2001-ஆம் வருஷம். ஆனா, இத்தனை வருடங்கள் கடந்தும், இப்பவும் ஒரேயொரு சரியான தமிழ் வழி புத்தகம், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கிடையாது. அதனால, வலைப்பூ ஆரம்பிச்சி உயிரியல் எழுதலாம்னு முடிவானதும், தயக்கமே இல்லாமல் அதை தமிழ்ல தான் எழுதறதுன்னு முடிவு செய்தேன்.

இப்போ, நெறைய ஆசிரியர்களும் நம்ம வலைப்பூவை படிக்கிறதால, நீங்க உங்க மாணவர்களுக்கு குறிப்பா தமிழ் வழிமாணவர்கள் இருந்தா, அவங்க எல்லாருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தனும் அப்படின்னு கேட்டுக்கறேன். ஆசிரியர்கள் அப்படின்னு இல்லை, நம்ம நண்பர்கள் எல்லாரும், நம்ம வலைப்பூவையும், உயிர்நுட்பம் FACE BOOK பக்கத்தையும் உங்க நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகப்படுதினிங்கன்னா, அப்படியே ஒவ்வொருத்தரா சேர்ந்து இன்னும் நெறையப் பேருக்கு போய் சேரும். என்னோட நோக்கமும் நிறைவேறும். நண்பர்கள் இதை கண்டிப்பா செய்வீங்கன்னு நெனக்கிறேன். நம்பறேன். 




நண்பர்கள் எல்லாருக்கும், உங்க ஆதரவுக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி.  


NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

Monday, June 17, 2013

அறிவிப்பு...!!!

 அன்பான நண்பர்களுக்கு,

நம்ம உயிர்நுட்பம் FACEBOOK நண்பர் என்னோட கைப்பேசி எண் கேட்டிருந்தார். குடுக்கறதுல எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லன்னாலும், வேற ஒரு பொதுவான பிரச்சனை இருக்கு. நான் இருக்கறது வெளிநாட்டில். நண்பர்கள் என்னை கைப்பேசியில கூப்பிட்டு பேசறது அப்படிங்கறது மிக மிக செலவு புடிக்கிற விஷயம். அது வேண்டாம்னு பார்க்கிறேன். அதனால, உங்களுக்கு என்ன கேக்கணும் அப்படின்னாலும் என்னோட மின்னஞ்சல் முகவரியில ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைங்க போதும். ஒரு மின்னஞ்சல்ல முடியிற விசயத்துக்கு, காசு செலவு பண்ணி போன் எல்லாம் பண்ண வேண்டாம். 

என்னோட மின்னஞ்சல் - kovamnallathu@gmail.com

வேணும்னா, உங்க கேள்வியோட சேர்த்து, உங்க கைப்பேசி எண்ணையும் அனுப்புங்க. உங்க கேள்வியை, உங்க தேவையை பொறுத்து, தேவைப்பட்டா நானே உங்களுக்கு போன் பண்ணி பேசறேன். நண்பர்கள் புரிஞ்சிக்குவிங்கன்னு நம்பறேன். அடுத்த பதிவுல சிந்திப்போம்.


 

Monday, February 18, 2013

உயிர்நுட்பம் FACEBOOK பக்கம்

மக்களே...!!!

நம்ம வலைப்பூவை இன்னும் நெறைய பேரிடம் கொண்டு சேர்க்கும்  முயற்சியாக, நான் எழுதும் பதிவுகளை உயிர்நுட்பம் FACEBOOK கணக்கிலும் பகிர்ந்திட்டு வரேன். நம்ம வலைப்பூவை தொடர்ந்து படிச்சிட்டு வர நம்ம நண்பர்களுக்கு இது தெரியும்.  அதோட உங்க மேலான ஆதரவினால நம்ம வலைப்பூ நல்ல முறையில சிறப்பா இயங்கிட்டு வருது.  அதுக்காக உங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த  நன்றிகள்.


இப்போ, நெறைய புது நண்பர்கள் நம்ம வலைப்பூவுக்கு தொடர்ந்து வரத்தொடங்கி இருக்காங்க. அவங்களுக்கும் இது தெரியனும் இல்லையா ? இந்த லிங்க் அவங்களுக்காக. எல்லாரும் கண்டிப்பா நம்ம FACEBOOK கணக்குலயும் சேருங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க, நண்பர்கள் எல்லாருக்கும் நம்ம வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க. படிச்சிட்டு தவறாம பின்னூட்டம் போடுங்க. அது என் வேலையை இன்னும் செம்மைபடுத்திக்க ரொம்பவே உதவியா இருக்கும். சீக்கிரமே அடுத்த பதிவுல சிந்திப்போம்.