என்னோட ப்ளாக்கை தன்னோட தளத்தில் அறிமுகப்படுத்தியதோட மட்டும் இல்லாம என்னோட மெயிலை அப்படியே வெளியிட்ட திரு ஜாக்கி அவர்களுக்கும், நான் மெயில்ல விடுத்த வேண்டுகோளை ஏற்று, என்னோட பதிவை படிச்சிட்டு மெயில் பண்ணின திரு கேபிள் சங்கர் அவர்களுக்கும் என்னோட நன்றிகள் பல.
திரு ஜாக்கி அவர்கள் எனக்கு சொன்ன மாதிரி நானும் இங்க எழுத ஆரம்பிக்கும் பொது எனக்கு நெறைய பின்னூட்டம் வரணும், நெறைய பாலோவர் வரணும்ன்னேல்லாம் நெனக்கல. நான் எழுதறது குறைந்தது ஒருத்தர் ரெண்டு பேருக்கு உபயோகமா இருந்தா சரி. அவ்வளவே.
பதிவுலகத்தின் ரெண்டு பிக் ஷாட்களும் எனக்கு ரெஸ்பாண்ட் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. மறுபடியும் என்னோட நன்றிகள் ரெண்டு பேருக்கும்.
அறிவியல் மற்றும் இல்லாம இங்க சில அபத்தங்களையும் கூட சொல்லலாம்ன்னு இருக்கேன்.
அபத்தம் நம்பர் 1 .
சினிமாவில, நரம்பு ஊசி போடறதா சொல்லுவாங்க இல்லை...? உண்மையிலேயே நரம்பு ஊசி அப்படின்னு ஒன்னு இல்லவே இல்லன்னு தெரியுமா? (நம்மள எவ்வளவு முட்டாளுங்கன்னு நெனச்சிருந்தா அப்படி எல்லாம் காமிப்பாங்க... )
ஊசி மொத்தம் நாலு விதம். 1). நேரிடையா ரத்தத்துல ரத்த குழாய் வழியா போடறது (இதை தான் நரம்பு ஊசின்னு சினிமால சொல்றாங்க). 2 . நேரிடையா வயித்துக்குள்ள போடறது. இது எப்படின்னா நம்ம குடல் மற்றும் இரைப்பைக்கும் உடல் சுவருக்கும் (அதாவது தோல் ) இடையில இருக்கற இடைவெளிக்குள் வயித்திலே ஊசிய குத்தி போடறது. இது மிகவும் அரிதா பயன்படுத்தும் முறை.
மேல இருக்கற படத்தில பார்த்திங்கன்னா உடல் சுவருக்கும் குடலுக்கும் (
தோல் முழுசுமா மூடி இருக்கற மாதிரி இமாஜின் பண்ணிக்கோங்க ) இடையில இடைவெளி இருக்கறது புரியும்.
மூன்றாவது தோலின் மேற்பரப்புக்கு ஜஸ்ட் கீழ, ஆனா சதைக்குள்ள போகாம போடறது. நான்காவது சாதாரணமா சதைக்குள்ள குத்தி போடறது. இது தான் எல்லாருக்கும் சாதாரணமா பயன்படுத்தும் முறை.
இன்னும் ஒரு சுவாரஸ்யமான அபத்தத்தோடு சீக்கிரமே சந்திக்கலாம்.