நண்பர்களே...!!!
அடுத்த பதிவுக்கு தயார் ஆகிட்டு இருக்கேன். அதுக்கு நடுவுல நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். நம்ம வலைப்பூவை பின்தொடர்பவர்களிலும், உயிர்நுட்பம் FACE BOOK கணக்குல இருக்கிற நண்பர்களிலும் நெறைய ஆசிரியர்கள் இருக்கறதால இந்த வேண்டுகோளை கேக்கலாம் அப்படின்னு தோணுச்சி.
முதல்ல இது நாள் வரை நீங்க நம்ம வலைப்பூவுக்கு குடுத்த ஆதரவுக்கு நன்றி.
உயிர்நுட்பம் தொடங்கின புதுசுல படிக்கிற வாசகர்கள்ல பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுல இருந்து படிக்கிறவங்களா தான் இருந்தாங்க. நான் எழுதறதையும் நெறைய பேர் படிக்கிறாங்க அப்படின்னு சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், அப்போ எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கும். ஏன்னா, நான் இந்த வலைப்பூ எழுதத் தொடங்க ஒரு முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் சரியான வாசிப்பு திறன் இல்லாத தமிழ் வழி வந்த மாணவர்களுக்கு இந்த வலைப்பூ உதவியா இருக்கும் அப்படின்னு தான். ஏன்னா, நானும் தமிழ் வழி பள்ளியில் இருந்து வந்து, கல்லூரியில் ஆங்கிலம் படிக்க முடியாமல் தடுமாறியவன். முறையான தமிழ் வழிப் புத்தகங்கள் இல்லாமல், ஆங்கிலமும் புரியாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டவன். இது நடந்தது 2001-ஆம் வருஷம். ஆனா, இத்தனை வருடங்கள் கடந்தும், இப்பவும் ஒரேயொரு சரியான தமிழ் வழி புத்தகம், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கிடையாது. அதனால, வலைப்பூ ஆரம்பிச்சி உயிரியல் எழுதலாம்னு முடிவானதும், தயக்கமே இல்லாமல் அதை தமிழ்ல தான் எழுதறதுன்னு முடிவு செய்தேன்.
இப்போ, நெறைய ஆசிரியர்களும் நம்ம வலைப்பூவை படிக்கிறதால, நீங்க உங்க மாணவர்களுக்கு குறிப்பா தமிழ் வழிமாணவர்கள் இருந்தா, அவங்க எல்லாருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தனும் அப்படின்னு கேட்டுக்கறேன். ஆசிரியர்கள் அப்படின்னு இல்லை, நம்ம நண்பர்கள் எல்லாரும், நம்ம வலைப்பூவையும், உயிர்நுட்பம் FACE BOOK பக்கத்தையும் உங்க நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகப்படுதினிங்கன்னா, அப்படியே ஒவ்வொருத்தரா சேர்ந்து இன்னும் நெறையப் பேருக்கு போய் சேரும். என்னோட நோக்கமும் நிறைவேறும். நண்பர்கள் இதை கண்டிப்பா செய்வீங்கன்னு நெனக்கிறேன். நம்பறேன்.
நண்பர்கள் எல்லாருக்கும், உங்க ஆதரவுக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி.
NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.



