Thursday, April 12, 2012

உடலும் அதன் உறுப்புகளும் ஒரு அறிமுகம் - 1

வணக்கம் மக்களே!!!

என்னோட போன பதிவுக்கு ஒரு பாலோவர் சேர்ந்திருக்காருன்னு இன்ட்லியில் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு... :-) அவருக்கு என்னோட வரவேற்பு மற்றும் வணக்கம். இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, உயிர் வேதியியலை நமது தமிழில் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதேன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

அதனால, இதை படிக்கிறவங்க எனக்கு பின்னூட்டம் போடுங்க, ஒட்டு போடுங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன். உங்களுக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு மாணவர்களுக்கு, இல்லை இந்த துறையில் ஆர்வமுள்ள ரெண்டு பேருக்கு அறிமுகப்படுத்துங்க. அது போதும். 

என்னோட ப்ளாக் www.uyirnutpam.blogspot.com

ஆனா, இன்ட்லியில அபிராமியின் பக்கங்கள் அப்படிங்கற பேர்ல தான் சேர்ந்திருப்பேன். அது ஒரு வேற காரணம். அதனால, மக்கள் என்னோட பதிவுகள மேல இருக்கற ப்ளாக்ல பார்க்கலாம். போன பதிவுல செல்ல பத்தி தெரிஞ்சிக்கிட்டோம். ஆனா இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கு. இருந்தாலும் அடிப்படைக்கு இது இப்போதைக்கு போதும். 

அதேமாதிரி, நம்மளோட உடலையும், உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் அதற்கான அதன் தேவைகளையும் நாம தெரிஞ்சிக்கணும். அப்போ தான் நான் மேல மேல, புதுப்புது விஷயங்கள் சொல்லும் போது உங்களுக்கு புரியும்.

நம்ம உடல் பல விதமான உறுப்புகளால் கட்டமைக்கப்பட்டது நமக்கு நல்லா தெரியும். ஆனா ஒவ்வொரு உறுப்பும் தனி தனி விதமான செல்களால் ஆனதுன்னு உங்களுக்கு தெரியுமா..? உதாரணத்துக்கு கல்லீரல் செல்கள் இதயத்தில் இருக்காது. நமது உடல் சதை செல்கள் தோலில் இருக்காது. நரம்பு செல்கள் வேற விதமானதுன்னு போன பதிவிலேயே சொல்லியிருக்கேன்.


இதற்கு காரணம் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான வேலையை செய்யிறது தான். உதாரணம், இதயம் நாள் முழுதும் துடிக்க வேண்டியது  மட்டும் இல்லை, ஒரு நாளைக்கு 150  லிட்டர் ரத்தத்தை உடல் முழுதுமா செலுத்தனும். அவ்வளவு பெரிய வேலையை செய்யிற இதயம் சாதரணமா இருக்க முடியுமா...? அதனால இதயம் கடினமான செல்களால் நெருக்கமா கட்டமைக்கப்பட்டிருக்கும். நான் வெஜ் சாப்பிடும் அன்பர்கள் இதயத்துக்கும், உடலின் மற்ற பகுதிக்கும் கண்டிப்பா வித்தியாசம் உணர்ந்திருப்பிங்க. அதுவே நுரையீரல் (lungs) பகுதி தெர்மாகோல் மாதிரி சாப்ட்டா இருக்கறதுக்கு காரணம் அது நம்ம மூச்சு விடும்போது நெறைய சுருங்கி விரிய வேண்டியிருப்பதால் தான்.


இதில் இதயம் மற்றும் நரம்பு செல்களுக்கும் மற்ற உடல் உறுப்பு செல்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அதாவது நம்ம உடம்புல எங்க அடிப்பட்டு காயம் ஏற்பட்டாலும் நமக்கு கொஞ்ச நாள்ல சரியா போயிடும். அதுக்கு காரணம் அடிப்பட்டு இறந்து போற செல்களுக்கு பதிலா புதிய செல்கள் உருவாவது தான். அந்த செல்களுக்கு தானே இரண்டாக பிரிந்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை உண்டு. அதுவே இதயத்திலோ அல்லது நரம்பு மண்டலத்திலோ (மூளை உட்பட ) அடிப்பட்டு செல்கள் இறந்து போனா அவ்ளோ தான். அந்த காயம் ஆறாது. காரணம் நரம்பு செல்களும் இதயத்தில் இருக்கற செல்களுக்கும் தானே பிரிந்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை இல்லை. (என்ன ஒரு இயற்கையின் படைப்பில் உள்ள வினோதம்!!!!!!) அந்த உயிர் காயத்தின் தன்மையை பொறுத்து இறந்து போன செல்களின் சதவிதத்தை பொறுத்து உயிரோடு இருப்பதோ, இறந்து போவதோ நடக்கும்.

இந்த காரணத்தினால தான், இயற்கை இதயத்தை விலா எலும்புகளும் மூளை மண்டை ஓடும் வெளிப்புறமா சூழ, அதற்கும் உள்ளே, ஒரு விதமான நீர் நிரம்பிய பை மாதிரியான அமைப்புக்குள்ள, ரொம்ப பாதுகாப்பா அமைச்சிருக்கு.  இந்த நீர் நிரம்பிய பை தான் நாம ஓடும்போதும், தவறி கீழ விழுந்தாலும், குதிச்சாலும், வெளிய இருந்து எந்த விதமான அதிர்வுகளும் இந்த உறுப்புகளை பாதிக்காம பாதுகாக்குது. பைக்குக்கு சஸ்பென்சன் மாதிரி.

நம்ம உடம்பு ரொம்ப சுயநலம் கொண்டது. அதற்கு ஒரே தேவை உயிர் வாழனும். இனப்பெருக்கம் மத்தது எல்லாம் அதற்கு அப்புறம் தான். உதாரணம் சொல்லனும்னா, திடீர்ன்னு வெளிய இருந்து வர உணவு நின்னு போச்சி. அதாவது நீங்க ஒரு மாசம் பட்டினியா இருக்க முடிவு பண்ணிட்டிங்க. அப்போ நம்ம உடல் என்ன பண்ணும்? மொதல்ல அங்க அங்க சேர்த்து வெச்சது உபயோகபடுத்தும். அப்பவும் வெளிய இருந்து எதுவும் வரல. என்ன நடக்கும் தெரியுமா....? உயிர் வாழ தேவையான உறுப்புகள் தவிர மீதி இருக்கும் விரல்கள், கை கால்  அதுக்கெல்லாம் உணவு சப்ளையை அதிரடியா நிறுத்திடும். அந்த உறுப்புகள் செத்து போனாலும் போனா போகட்டும்ன்னு விட்டுடும். நல்லா இருக்கு இல்லை?

இப்போதைக்கு இது போதும். மீதி அடுத்த பதிவுல...!!!!!!!









  

 

4 comments:

  1. miga arumai boss...!!! adutha padivukku kaathurukkindren....!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. சாதிக் அவர்களே...

      ப்ளாக்ல உங்களோடது தான் எனக்கு வர முதல் கமென்ட்.

      மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. Vanakkam, Jackiesekar blog moolamaaga ungal blog arimugam kedaithadhu.
    Siru vayadhil english mediathil purindhum puriyaalum science paadathai manappaadam seidhu exams ezhudhiya naatkal ninaivuku varugiradhu. ippozhudhu iniya tamilil ungaludaya suvaarasiyamaana ezhutu nadaiyil padipadharku miga aarvamaaga ulladhu.
    Please dont stop this and continue. Waiting for your next padhivu.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. பிலிப்!!!

      (உங்க பெயரை சரியா எழுதி இருக்கேனா ? ) தொடர்ந்து வாசிங்க. உங்களோட விருப்பத்தையும், ஆர்வத்தையும் முடிந்த வரை எனது புதிய பதிவுகளின் மூலம் திருப்திபடுத்த முயற்சிக்கிறேன்.

      எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தி வெச்ச ஜாக்கி அவர்களுக்கு, அதுவும் நான் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதி இருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை எனது நன்றியை உங்க பின்னூட்டம் வழியா தெரிவிச்சிக்கறேன்.

      ஜாக்கி...!!! உங்களோட இந்த உதவியை மறக்கவே மாட்டேன்.

      Delete