நண்பர்களே...!!!
நம்ம உயிர்நுட்பம் FACE BOOK
கணக்குல இன்னைக்கு சேர்ந்த திரு. ராஜையா சின்னதுரை அவர்களோட சேர்ந்து
நண்பர்கள் எண்ணிக்கை 50- ஐ தொடுகிறது. மிக்க மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சியை
உங்களோட பகிர்ந்துக்கறேன். எந்த ஒரு குறிக்கோளும், எதிர்ப்பார்ப்பும்
இல்லாம விளையாட்டுத்தனமா ஆரம்பிக்கப்பட்டதே நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ.
ஒரு வழியா, உயிரியல் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணி நான் எழுத ஆரம்பிக்கும்
போது இதையெல்லாம் யாரு படிப்பா அப்படிங்கற அவநம்பிக்கையோட தான் எழுத
ஆரம்பிச்சேன். ஆனா, இன்னைக்கு தினமும் குறைஞ்சது இருநூறு வாசகர்கள்
படிக்கிற ஒரு அறிவியல் வலைப்பூ நம்மளோடது. 63 நேரடி பின்தொடர்பவர்கள், 50
நண்பர்கள் FACEBOOK கணக்குல, அது மட்டும் இல்லாம தொடர்ந்து உள்ளூர்ல
இருந்தும், வெளிநாடுகள்ல இருந்தும் நான் எழுதினாலும், இல்லைன்னாலும்
தொடர்ந்து வருகை தர்ற வாசக நண்பர்கள். அதோட எனக்கு தெரிஞ்ச அளவுக்கு
தமிழ்ல, முழுமையா உயிரியல் பத்தி மட்டும் எழுதப்படற ஒரே ஒரு வலைப்பூ நம்ம
உயிர்நுட்பம் மட்டும் தான். இந்த பெருமை எல்லாம் உங்க தொடர் ஆதரவுனால மட்டுமே சாத்தியமாச்சி. ஸோ, நம்ம வாசக நண்பர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியும், நன்றியும்.
உங்க ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பார்க்கிற - உயிர்நுட்பம்.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் சார்.
Deleteஉங்களை மாதிரி பெரியவங்க முன்னாடி நான் பண்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னாலும், தவறாம வாழ்த்தர உங்களுக்கு எப்பவும் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்.
எல்லாம் உங்களோட ஆதரவு தான் காரணம்.