மக்களே...!!!
சில சுவாரஸ்யங்கள் பகுதி எழுதி கொஞ்ச நாள் ஆயிடுச்சி இல்ல..? இந்த பகுதிக்கான விஷயம் எதுவும் சரியா மாட்டல. வேற எந்த காரணமும் இல்லை. இப்போ, நான் சொல்ல போற விஷயம் என்னன்னா, விஞ்ஞானிகள் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு கிட்டத்தட்ட மருந்து கண்டுபிடிச்சிட்டாங்க. இன்னைக்கு பதிவை பார்க்கலாமா?
சில சுவாரஸ்யங்கள் பகுதி எழுதி கொஞ்ச நாள் ஆயிடுச்சி இல்ல..? இந்த பகுதிக்கான விஷயம் எதுவும் சரியா மாட்டல. வேற எந்த காரணமும் இல்லை. இப்போ, நான் சொல்ல போற விஷயம் என்னன்னா, விஞ்ஞானிகள் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு கிட்டத்தட்ட மருந்து கண்டுபிடிச்சிட்டாங்க. இன்னைக்கு பதிவை பார்க்கலாமா?
முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுமையா குணமடைந்த முதல் எய்ட்ஸ் கேஸ் பதிவு பண்ணப்பட்டிருக்கு. இந்த மாத முதல் வாரத்தில் அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜான் ஹோப்கின்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் மஸ்ஸாசூசெட்ஸ் மெடிக்கல் ஸ்கூல் பல்கலைக்கழகத்தை (Johns Hopkins Children's Center, the
University of Mississippi Medical Center and the University of
Massachusetts Medical School) சேர்ந்த விஞ்ஞானிகள் இதை அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்தரங்கில் அறிவிச்சிருக்காங்க. இவங்க அறிக்கையின் படி, பிறந்து சில நேரங்களே ஆன, பிறக்கும் போதே எய்ட்ஸ் நோயுடன் பிறந்த குழந்தைக்கு முப்பது மணி நேர இடைவிடாத சிகிச்சை மூலம் இந்த நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோல பிறக்கும்போதே எய்ட்ஸ் நோயுடன் இருந்த குழந்தை குணமடைவது இதுவே முதல் முறை. டாக்டர். டிபோரா பெர்சோத், வைரஸ் அறிவியல் நிபுணர் (தமிழாக்கம் சரியான்னு தெரியல, தவறா இருந்தா சொல்லுங்கப்பா) - DR. DEBORAH PERSAUD, M.D., a virologist at Johns Hopkins
Children's Center, டாக்டர். கேத்தரின் லுசுரியாகா, நோய் எதிர்ப்பியல் நிபுணர் - DR. KATHERINE LUZURIAGA, M.D., an immunologist at the
University of Massachusetts Medical School, இவங்க தான் விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கி இந்த ஆராய்ச்சியை செய்திருக்காங்க. டாக்டர். ஹன்னாஹ் கேய், எய்ட்ஸ் நோய் சிகிச்சை நிபுணர் - Hannah Gay, M.D., a pediatric HIV specialist at the
University of Mississippi Medical Center, விஞ்ஞானிகள் தயாரிச்ச மருந்தை கொண்டு சிகிச்சை செய்திருக்கார்.
அந்த குழந்தையின் அம்மா ஒரு எய்ட்ஸ் நோயாளி. அதனால அந்த குழந்தை கருவில் இருக்கும்போதே எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கு. அப்புறம் பிறந்தே சில மணி நேரங்களிலேயே விஞ்ஞானிகள் சிகிச்சையை ஆரம்பிச்சிருக்காங்க. முப்பது மணி நேரம் இடைவிடாத கண்காணிப்புல, குறிப்பிட்ட கால இடைவெளியில தவறாம மருத்துகள் கொடுக்கப்பட்டு இருக்கு. பிறகு சோதனை செய்து பார்த்தப்போ நோயின் கடுமை மற்றும் HIV வைரஸ் அளவு குறைஞ்சிடுச்சி. பிறகு தொடர் சிகிச்சையை நிறுத்திட்டு, 10 மாதங்கள் குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு முறை அந்த குழந்தைக்கு மருந்துகள் கொடுத்திருக்காங்க. அதற்க்கு அப்புறம் சிகிச்சையை நிறுத்திட்டு. 18 மாதங்கள் கண்காணிப்புல வெச்சி, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை குழந்தையின் இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்திருக்காங்க. ஆனா HIV வைரஸ் மறுபடியும் வளரல.
வழக்கம் போல, இதையெல்லாம் ஏத்துக்காத சிலர், இரத்த மாதிரிகளை சோதனை செய்யும்போது சோதனைகள்ள ஏதாவது தப்பு வந்திருக்கும் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருக்காங்க. எது எப்படியோ, இதனால சில பேருக்காவது நல்லது நடந்தா சந்தோசமே...!!! அடுத்த பதிவுல சிந்திப்போம்.
நல்ல தகவல் தான்...
ReplyDeleteஆனால் தப்புக்கள் குறையுமா...? கூடுமா...?
தவறு செய்ய நெனக்கிறவங்க எய்ட்ஸ் இருக்கும் போதும் செய்திட்டு தான் இருந்தாங்க சார்
Deleteஅதனால தவறுக்கும் எய்ட்ஸ்க்கும் சம்பந்தம் இல்லை.
எல்லாம் மனசு தான் காரணம்.