மக்களே...!!!
அடுத்த பதிவு போடறதுக்கான நேரம் இப்போ. ஆனா, மறுபடியும் சில சுவாரஸ்யங்கள் பகுதி தான். நான் என்னோட ஆராய்ச்சிக்காக சில ஆராய்ச்சி கட்டுரைகளை தேடிட்டு இருந்தப்போ கண்ல பட்டது. ஜூன் மாசம் வெளியான CURRENT BIOLOGY அப்படிங்கற ஆராய்ச்சி பத்திரிக்கையில வெளியான ஒரு ஆராய்ச்சி கட்டுரையோட சுருக்கம் தான் நம்மளோட இன்னைய பதிவு.
பரிணாமம் பத்தி நமக்கு எல்லாருக்குமே ஓரளவுக்கு தெரியும். அதைப்பத்தின பல்வேறு படிநிலைகள் அதாவது எந்த உயிரினம் முதல்ல வந்தது, எந்த உயிரினம் எந்த உயிரினத்தோட பரிணாம வளர்ச்சி அப்படின்னு தெரிஞ்சிக்க உலகம் முழுக்க பல ஆராய்ச்சிகள் நடந்திட்டு வருது. பல்வேறு உயிரினங்களை புடிச்சி, அதுக்கு முந்தைய அல்லது அதுக்கு அடுத்தப்படியான நிலையில் இருக்கிற உயிரினகளோட உடல் உறுப்புகள், அது உருவாகியிருக்கும் விதம், அதனோட பயன்பாடு இப்படி எல்லாமே ஒப்பிட்டு பார்த்து, கெடைக்கிற ஆராய்ச்சி முடிவுகளை வெச்சி பரிணாமத்தோட படிநிலைகளை கட்டமைச்சிட்டு இருக்காங்க. இது மாதிரியான ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்திட்டு தான் இருக்கு.
இதுல, பார்த்திங்கன்னா சில உயிரினங்கள்ள சில பண்புகள் ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிரா இருக்கும். ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு முந்தைய நிலையிலயும் இருக்காது. அதுக்கு அடுத்த நிலையிலயும் இருக்காது. அந்த ஒரு உயிரினதுல மட்டும் எங்கிருந்தோ வந்து குதிச்ச மாதிரி அந்த பண்பு மட்டும் இருக்கும். உதாரணத்துக்கு பார்த்திங்கன்னா, வவ்வால் ஒரு பறவையினம் மாதிரி பறக்கும். அதே சமயம் மத்த பறவைகள் மாதிரி முட்டை போட்டு குஞ்சு பொரிக்காம, குட்டி போட்டு பால் குடுக்கும். மனிதன் மாதிரி பற்கள் இருக்கும். பறவை இனத்தோடவும் இல்லாம, மனித இனமோ அல்லது குரங்கு இனமோ இல்லாம அதுக்கு மட்டும் அதிகப்படியான குணங்கள் வந்திருக்கு.
அது மாதிரி, ரொம்ப வருசங்களா விஞ்ஞானிகளை தலைய சுத்த வெச்சிட்டு இருந்த ஒரு விஷயம், இப்பவும் இருக்கிற ஒரு விஷயம், எல்லா விலங்கினங்களிலும் ஒரே ஒரு பிரிவை தவிர அதுலயும் குறிப்பா பறவை இனங்களில், ஒரு குறிப்பிட்ட பிரிவை தவிர மற்ற எல்லாத்துக்கும் இனப்பெருக்க உறுப்பு குறிப்பா, ஆண் இன விலங்கு அல்லது ஆண் இனப் பறவைக்கு ஆண் இனப்பெருக்க உறுப்பு இருக்கு. ஆனா, அந்த ஒரு பிரிவை சேர்ந்த பறவைகளுக்கு மட்டும் ''அது'' இல்லை. விளக்கமா சொல்லணும் அப்படினா, கோழி, சேவல் மாதிரியான பறக்க இயலாத, தரையில் நடக்கும் பிரிவை சேர்ந்தவைகளுக்கு மட்டும், ஆண் இனப்பெருக்க உறுப்பு கிடையாது. அதுவே கிட்டத்தட்ட அதே மாதிரியான வாத்து மாதிரியான நீரிலும் வாழும் இரு வாழ்விகளுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்பு உண்டு.
இந்த குறிப்பிட்ட பிரிவு விலங்குகளுக்கு மட்டும் என்ன ஆச்சி...? ஏன் இதுக்கு மட்டும் இனப்பெருக்க உறுப்பு இல்லைன்னு தலையை பிச்சிகிட்டு இருந்தவங்களுக்கு இப்போ மாதிரியான விடை கிடைச்சிருக்கு.
ஒரு உருவாகும் போது, Bmp4 அப்படிங்கற ஒரு புரோட்டீன் தான் விலங்குகளோட இனப்பெருக்க உறுப்பு உருவாகி வளர்றதுல முக்கிய பங்கு வகிக்கிறது அப்படின்னும், அந்த குறிப்பிட்ட புரோட்டீன் இந்த பிரிவு பறவைகள்ள இல்லைன்னும் கண்டுபுடிச்சிருக்காங்க. ஆனா, இனப்பெருக்க உறுப்பு இருக்கிற பறவையோட கரு ஒன்னை எடுத்து, இந்த குறிப்பிட்ட புரோட்டீனை உருவாகாம தடுத்துட்டு, அந்த கருவை சோதனைக்கூடத்துல வளர்த்தப்போ, அதுக்கு இனப்பெருக்க உறுப்பு வளரல. அதே மாதிரி ஆனா இனப்பெருக்க உறுப்பு இல்லாத பிரிவை சேர்ந்த பறவையோட கரு ஒன்னுல, இதே புரோட்டீனை வெளிய இருந்து குடுத்து பார்த்தப்போ, அதுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்பு வளர்றதை கண்டு பிடிச்சாங்க.
அது ஏன் இந்த ஒரு பிரிவு உயிரினங்களில் மட்டும் அந்த புரோட்டீன் உருவாகல அப்படிங்கறதை பத்தின ஆராய்ச்சி இன்னமும் போயிட்டு இருக்கு. ஸோ மக்களே, இன்றைய செய்தி சுவாரஸ்யமா இருந்திருக்கும்னு நம்புவோம். படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்துல சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம்.
சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
Deleteதங்கள் பதிவுகளைத்
ReplyDeleteதொடர்வதில் மிக்க ஆர்வமும்
பெருமிதமும் கொள்கிறேன்
பயனுள்ள பதிவுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
திரு. இரமணி அவர்களுக்கு,
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!!
u can find more interesting issues on virgin birth also sir, there r some species capable of producing offsprings by virgin birth. search with key words of virgin birth in aphids, whip tail lizard. some r claiming in humans also some cases r documented(birth of jesus, karnan, budha r different issues;))
ReplyDeleteThank you doctor. I will look in to it surely.
Deletewhat happened? I couldn't see you for a while here?
You asked for Photosynthesis. I started that for you only.
I thought you comment something on it. But, no comments from you on the posts about Calvin cycle so fare :-((((((
கோழி, சேவலுடன் இணை செருவர்தற்கு முன்பே முட்டை இடும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? உண்மை என்றால் எவ்வாறு ? ஏன் என்று விளக்கவும் ?
ReplyDeleteஆமாம் நண்பரே...!!! நான் ஏற்கனவே இதை பற்றி எழுதி உள்ளேன்.
Deleteகோழி இனத்தில் முட்டை இடுதல் என்பது ஒரு தன்னிச்சையான நிகழ்வு.
ஆனால் முட்டையில் இருந்து குஞ்சு உருவாக கோழி தன் இணையுடன் சேர்ந்த பின்
உருவாகும் முட்டை வேண்டும். தன்னிச்சையாக உருவாகும் முட்டையில் இருந்து குஞ்சு வெளிவராது