Tuesday, April 17, 2012

செல் அமைப்பு ஒரு முன்னோட்டம்


மக்களே,

சிலபேருக்கு இந்த உயிரியலை ஏன் படிக்கணும்? எதுக்காக ஒரு செல்லுக்குள்ள என்ன நடக்குதுன்னு வேலை மெனக்கெட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்கன்னு ஒரு கேள்வி ஓடும். ஆனா பாருங்க,  ஒரு மெசின் ரிப்பேர் ஆயிடுச்சின்னா, அதை சரி பண்ணனும்ன்னா அந்த மெசின்ல என்ன என்ன  பார்ட்ஸ் இருக்கு?   அது எங்க எங்க இருக்கு? அது எப்படி இருக்கும்? அது எப்படி வேலை செய்யும்ன்னு நல்லா தெரிஞ்சாதான் அந்த பகுதியை தனியா கழட்டி, அதை சரியா ரிப்பேர் பண்ண முடியும்.

ஆனா பாருங்க, அது சாதாரண, நாம நம்ம கையாள உருவாக்கின மெசின். ஆனா, நம்மளோட செல் தானா, இயற்கையா உருவானது. அதுல, என்ன என்ன , எங்க எங்க இருக்கு...? அது என்ன வேலைகளை பண்ணும்? எதுவும் தெரியாது. மெசின் மாதிரி, நம்ம உடல்ல, செல்கள்ள, ஏதாவது பிரச்சைன்னா, அதாவது ஏதாவது ஒரு நோய் வந்தா, அதை சரி பண்ண நம்மால அந்த பகுதியை மட்டும் தனியா எடுத்தெல்லாம் பண்ண முடியாது. இன்னும் சரியா சொல்லனும்ன்னா, கையில ஒரு பிரச்சனைன்னா, கைக்கு மட்டும் தனியா நம்மால மருந்து குடுக்க முடியாது.

பொதுவா நம்ம மருத்துகளை உடம்புல ஊசி மூலமாவோ, இல்ல மாத்திரையாவோ தான் எடுத்துப்போம். அது நம்ம ரத்தம் மூலமா, பாதிக்கப்பட்ட கைக்கு மட்டும் இல்லாம, நம்மளோட உடல் முழுக்க பரவும். அப்படி பரவும் போது, உடல் முழுக்க இருக்கிற மத்த நல்ல நிலையில இருக்கிற செல்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. ஸோ, ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படும் போது இதெல்லாம் கவனமா பரிசோதிக்கப்படும். இதையெல்லாம் பரிசோதிக்கப்படனும்ன்னா, நமக்கு செல்கள், அதோட அமைப்பு, அதோட வேலைன்னு எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருந்தா தான் நம்மால நல்ல மருந்துகளை கண்டுபிடிக்க முடியும்.

ஆனா, துரதிஷ்டவசமா, மனிதன் இந்த விசயத்துல பாதி கிணறுதான் தாண்டியிருக்கான். இன்னும் ஒரு செல்லுக்குள்ள தெரிஞ்சிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதனாலதான் நிறைய நோய்களுக்கு இன்னும் நம்மால சரியான சிகிச்சை முறை கண்டுபிடிக்க முடியல... நான் கூட இந்த மாதிரி ஒரு வேலைதான் செய்யிறேன்....:-)

சரி விசயத்துக்கு வருவோம். நாம இப்போ பார்த்திட்டு இருக்குறது இன்னும் உயிரியலின், உயிர் வேதியியலின் அடிப்படை விஷயங்கள் மட்டுமே. அதனால ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத மாதிரி தெரியும். ஆனா, போக போக புதிய விசயங்களை விளக்கமாக தெரிந்துகொள்ளும் போது எல்லாமே புரிய ஆரம்பிக்கும். உடல், உறுப்புகள் மற்றும் செல் அப்படின்னு ஒவ்வொரு விசயமா பார்த்திட்டு வரோம். நம்மளோட உடல் மாதிரியே செல்லும் அதனுடைய சொந்த  உறுப்புகளை வெச்சிருக்குன்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். 

நம்மளோட அடுத்த பதிவு, அதை பத்திதான் இருக்க போகுது. (ஸ்கூல்ல பண்ற மாதிரி செல்லின் படம் வரைஞ்சி பாகம் குறிக்காம இது விடாது போல... என்ன பண்ண....?  எல்லாம் நம்ம விதி....! ) 

நம்ம உடல் மாதிரியே, செல்லும் ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி உறுப்புகளை வெச்சிருக்கு. மொதல்ல செல்லுக்கு என்ன என்ன வேலைன்னு பார்ப்போம். 

1 . தன்னை உயிரோட வெச்சிக்கணும். அதுக்கு தேவையான சக்தியை நாம சாப்பிடற உணவில் இருந்து தயார் செய்யனும். 
2 . தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்யணும்.
3. அந்த வேலையை செய்ய தேவையான இயந்திரங்கள் அல்லது தொழிலாளர்கள் அதாவது ப்ரோடீன்களை உருவாக்கணும்.
4 . அந்த வேலை சரியா செய்யப்படுதான்னு கண்காணிக்கணும். வேலை முடிந்ததும் அந்த ப்ரோடீகளை அழிக்கனும்.
5 . முக்கியமா தன்னோட எதிரிகள் கிட்ட இருந்து தன்னை பாதுகாத்துக்கணும். அதாவது தன்னை தாக்க வரும் நோய் கிருமிகள் கிட்ட இருந்து. அப்படி ஒரு வேலை நோய் தாக்கிட்டா, அந்த கிருமிகள் அளிக்கப்படனும். இந்த இடத்துல ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. அது பிறகு.
6 . இனப்பெருக்கம், அதாவது வயதாகியோ அல்லது நோய் தாக்கியோ அல்லது விபத்து மூலமாகவோ இறந்து போன செல்களுக்கு மாற்று செல்களை உருவாக்கணும். 

ஒரு செல்லுக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு. இருந்தாலும் இவை தான் முதன்மையானவை. இத்தனை செயல்களும் தடையில்லாம நடந்தா தான் ஒரு செல் ஆரோக்கியமா இருக்குன்னு அர்த்தம்.   இதுல எந்த இடத்துல ஒரு பிரச்சனை வந்தாலும் மத்த எல்லா வேலையும் சேர்த்து பாதிக்கப்படும்.

செல் மொதல்ல ஆரோக்கியமா இருக்கணும் அப்படினா, அதுக்கு தேவையான சக்தி, அதாவது தன்னோட உயிரை காப்பாத்திக்கவும், தனக்கு அளிக்கப்பட வேலைகளை செய்யவும் தேவையான சக்தியை ஒவ்வொரு செல்லும் தானே தயார் பண்ணிக்கணும். நம்ம உடலுக்கு தேவையான மொத்த சக்தியையும் தருவது சர்க்கரை அதாவது carbohydrates. அதிலும்  முதன்மையாக இருப்பது  குளுகோஸ்.

ஒரு செல் தனக்கு தேவையான சக்தியை தயாரிக்க பெருமளவு குளுகோஸை தான் பயன்படுத்துகிறது. குளுக்கோஸ் கெடைக்கல அப்படிங்கிற நிலமையில தான் மத்த அதாவது லிபிட்ஸ் அல்லது ப்ரோடீன்கள் பயன்படுத்தப்படும். இந்த சக்தி தாயாரிக்கிற வேலை ஒரு பெரிய ப்ராசஸ். நாம சாப்பிடற சாப்பாடு கிட்டத்தட்ட சுமாரா ஒரு இருபது விதமான வேதி வினைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடைசியாதான் நமக்கு தேவையான சக்தி அதுல இருந்து கெடைக்குது. இது நம்ம உடல்ல, கல்லீரல்ல  (liver ) நடக்கும். இந்த வேலை எப்படி நடக்குதுன்னு நாம தனியா ஒரு பதிவு போடுவோம்.

மேல சொன்ன வேலைகளை செய்ய நம்ம செல் தனித்தனியா தனக்கு மட்டுமே சொந்தமான உறுப்புகளை வெச்சிருக்கு. மனிதன் மிருகம் அப்படின்னு வேற வேற இருந்தாலும் உடலுக்கு ரெண்டு கை, ரெண்டு கால், தலைன்னு அடிப்படை கட்டமைப்பு ஒன்னு தான். அதே மாதிரி தான் செல்லுக்கும். தாவரம், விலங்கு, பாக்டீரியா என எல்லாத்துக்கும் ஒன்னு தான். இருக்கிற இடத்துக்கு ஏத்த மாதிரி செய்யிற வேலையிலும், அதோட அமைப்பும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாப்படலாம்.

ஸோ, அடுத்த பதிவு செல்லோட முழு அமைப்பு மற்றும் செல் உறுப்புகள் ஒரு முழுமையான பார்வை.  என்ஜாய்...!!!

4 comments:

  1. விளக்கப்படங்களையும் சேர்க்கலாமே புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. yes mr.Dr. I am making pictures now. my next post would be about complete overview of cell structure with pictures only.

      Delete
  2. அறிவியல் பற்றி தமிழில் வலைப்பக்கங்கள் அரிதாகவே கிடைக்கின்றன். உங்கள் எழுத்து அந்தக் குறையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்...
    சீனி மோகன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...!!!

      நீங்க அனேகமா ஆசிரியரா தான் இருக்கணும். அடிக்கடி வந்து உங்க கருத்துகளை சொல்லுங்க. நிறைய எழுதவும், எழுதியதை மேம்படுத்தவும் எனக்கு மிகவும் உபயோகமா இருக்கும்.

      Delete