உயிர்வேதியியல் அப்படின்னா என்ன?
நான் BSc உயிர் வேதியியல் (biochemistry ) சேர்ந்தப்போ எனக்கு இந்த பேரை தவிர எதுவும் தெரியாது. இதுக்கு தான் பணம் ரொம்ப கம்மின்னு வீட்ல சேர்த்து விட்டுட்டாங்க... உயிரியல் தெரியும், வேதியியல் தெரியும். அது என்ன உயிர் வேதியியல்...? அப்படின்னு காலேஜுக்கு போற முதல் நாள் முதல் கிளாஸ் அட்டென்ட் பண்ற வரைக்கும் யோசிச்சிட்டு இருந்தேன்.ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ அவங்க எவ்வளவு பெரிய நல்ல காரியம் பண்ணியிருக்காங்கன்னு இப்போ யோசிக்கிறேன்.
ஆனா, அப்போ 2001 ல, தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில, எல்லாரையும் போல மனப்பாடம் பண்ணி, தேர்வெழுதி பாஸ்பண்ணிட்டு சென்னை வந்த நான், அப்போ தான் biochemistry அப்படிங்கற வார்த்தையே கேள்விப்பட்டேன். ஆனா அது ஒரு சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய உலகம் அப்படிங்கறதும், அதுதான் இந்த உலகமே ஆரோகியமா இருக்க முழு முதற்காரணம் அப்படிங்கறதும் எனக்கு போகப்போகத்தான் புரிஞ்சது.
ஓகே... நாம மேட்டருக்கு வருவோம். உயிர் வேதியியல் அப்படிங்கறது என்ன...? உயிர் என்பது உயிரியல் சம்பந்தமானது. உயிரோட இருக்கற எல்லாத்தையும் பத்தி படிக்கிறது. வேதியியல் முழுக்க முழுக்க, வேதி பொருட்களையும் அதன் வினைகளையும் பத்தி தெரிஞ்சிக்கறது. அப்போ, உயிர் வேதியியல்...? உயிரோட இருக்கற எல்லா பொருட்களிலும் இருக்கற வேதி பொருட்களையும், அதன் பயன்கள், அதில் நடக்கும் வேதி வினைகள் எல்லாத்தையும் படிக்கிறது. அதாவது, உயிரோட இருக்கிற நம்ம உடலில் (அதன் அடிப்படை செல் அப்படிங்கறதால) உயிரோட இருக்கிற செல்லுக்குள் நடக்கிற வேதி வினைகள் பத்தி படிக்கிறது தான் உயிர் வேதியியல்.
கண்ணுக்கே தெரியாத செல்லுக்குள்ள அப்படி என்ன பெருசா வேதி வினைகள் நடக்குதுன்னு யோசனையா இருக்கா? இப்போ நான் சொன்ன ஒரு ஸ்டேட்மென்ட் ஞாபகப்படுத்திக்கோங்க... ஒரே ஒரு செல்லுக்குள்ள நடக்கிற வேதி வினைகள் அதாவது கெமிக்கல் ரியாக்சன் இந்த உலகத்திலேயே பெரிய தொழிற்சாலையில கூட நடக்காது. உயிரோட இருக்கற செல் தான் இந்த உலகத்துலேயே பெரிய தொழிற்சாலை.
உடலும் அதன் உறுப்புகளும் பத்தி பார்த்திட்டு இருந்த நாம இதையும் தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா, என்னால உடல் உறுப்புகளை பத்தின நெறைய புது சுவாரஸ்யமான விசயங்களை சரியா சொல்ல முடியாது. அதனால ரெண்டையும் சேர்த்தே பார்ப்போம்.
நம்ம உடல் விதவிதமான உறுப்புகளால கட்டமைக்கப்பட்டதுன்னு நமக்கு இப்போ தெரியும். அந்த உறுப்புகள் விதவிதமான செல்களால் ஆனதுன்னு தெரியும். செல்லும் உடல் உறுப்புகள் மாதிரி அதற்கான செல் உறுப்புகளால் ஆனது. இதுக்குன்னு ஒரு தனி பதிவு தேவைப்படும். தேவைப்படும்போது இதப்பத்தியும் ஆரம்பிக்கலாம்.
அந்த செல்களில் இருக்கிற, அந்த செல்களின் கட்டமைப்புக்கும், செயல்பாட்டுக்கும் தேவையான சக்தியை குடுக்கிற, சுருக்கமா சொன்னா நாம உயிர் வாழ தேவையான அடிப்படை வேதி பொருட்கள் என்னவெல்லாம் தெரியுமா...?
1 . சர்க்கரை - சுகர் - கார்போஹைட்ரேட்ஸ் - carbohydrates
இதை நம்ம ஊருல மாவு சத்து இல்லன்னா சர்க்கரை சத்து அப்படின்னு
சொல்லுவாங்க. நம்ம உடலோட இயக்கத்துக்கும், செல்லோட
இயக்கத்துக்கும் தேவையான சக்தியை குடுக்கறதில முதல் இடம் இதுக்கு
தான். இப்போ சில வார்த்தைகளை நான் ஆங்கிலத்தில சொல்லிக்கறேன். அப்படியே தமிழ் படுத்தறது எந்த அளவுக்கு நல்லா இருக்கும் அப்படின்னு சொல்ல தெரியல.
சர்க்கரை அப்படிங்கறது ஒரு பொதுவான பெயர். நிறைய விதமான சர்க்கரை இருக்கு. அதுல ரொம்ப முக்கியமானது ரெண்டு. ஒன்னு நமக்கு நல்லா தெரிஞ்சது... குளுக்கோஸ் ( glucose) இன்னொன்னு பிரக்டோஸ் (fructose).
இதுல, நம்ம உடலுக்கு, அதன் இயக்கத்துக்கு என நம்ம உடலின் அத்தனை செல்களும் தனக்கு தேவையான அத்தனை சக்தியையும் குளுக்கோஸ் பயன்படுத்தி தயாரித்துக்கொள்ளும். அதனாலதான், நமக்கு டயர்டா இருக்கும் போது குளுகோஸ் சாப்பிட்டவுடன் பெட்டரா தெரியும். ஆனா, ஒரே ஒரு செல்லை தவிர....!!!! அதாவது நம்ம உடம்புல இருக்கிற ஒரே ஒரு செல் டைப் மட்டும் குளுகோஸை சக்திக்கு பயன்படுத்தாம, பிரக்டோஸ் பயன்படுத்தி சக்தியை தயாரிக்கும். அது நமது விந்தணுக்கள்...!!!!! சூப்பர் இல்லை...!!!! :-) பிரக்டோஸ் மட்டும் கெடைக்கலன்னா விந்தணுக்கள் செத்து போயிடும்...!!!! ((விந்தணுக்களும் செல்களே அப்படின்னு நாம ஏற்கனவே பார்த்திருக்கோம் ))
2 . அடுத்தது, ப்ரோடீன் - புரதம் - Protein
இதை புரத சத்துன்னு சொல்வாங்க. உடல் முழுக்க, உறுப்புகள் முழுக்க, செல்கள் முழுக்க ப்ரோடீன் இல்லாத இடமே கெடையாது. ஒரே ஒரு செல்லுக்குள்ள மட்டும் 3000 விதமான ப்ரோடீன்கள் இருக்கு. ஒரு செல் செயல்படறதே இந்த ப்ரோடீன்கள் உதவியால தான். அதாவது ஒரு தொழிற்சாலையில் இருக்கற எந்திரங்கள் மாதிரி... லேபர்ஸ் மாதிரி... அத்தனையும் ப்ரோடீன்கள் தான். நம்ம நகம் ப்ரோடீனால் ஆனது. நம்ம கண்ணின் விழி ப்ரோடீன். நம்ம சதை ப்ரோடீன். தோல் ப்ரோடீன். எலும்பு ப்ரோடீன். இதெல்லாம் திட நிலையில் இருக்கிற ப்ரோடீன்கள். ரத்தம் திரவ நிலையில் இருக்கும் ப்ரோடீன்.
அப்படின்னா, இது சக்தி குடுக்காதா அப்படின்னு கேட்டா, இதுவும் பயன்படும். சக்தியை தயாரிக்க குளுக்கோஸ் கிடைக்காத போது (உதாரணம் நாம சாப்பிடாம பட்டினி இருக்கும் போது ) ப்ரோடீன் உபயோகப்படுத்தப்படும். இது இயற்கை நமக்கு வெச்சிருக்கற மாற்று வழி...!!!! (என்னா ஒரு திங்கிங் நம்ம இயற்கைக்கு...!!!!!)
3 . அடுத்தது... லிபிட்ஸ் - கொழுப்பு சத்து - Lipids
இதுவும் எல்லா செல்களிலும் இருக்கிற முக்கியமான ஒன்னு. குறிப்பா, நம்மளோட நரம்பு செல்கள், மூளை இதெல்லாம் கொழுப்பு சத்தை அதிகமா கொண்டவை... க்ளுக்கோஸ் இல்லாதப்போ செல்கள் மொதல்ல லிபிட்சை தான் சக்தி தயாரிக்க தேடும். லிபிட்சும் இல்லாதப்போ தான் ப்ரோடீன்ஸ் உபயோகப்படுத்தப்படும்.
அது மட்டும் இல்லாம, நம்மளோட உடல் சுவர் (அதாவது ஜஸ்ட் தோலுக்கு கீழ) கொழுப்பு கொண்டு பாதுக்காக்கப்படுது. தோலை எப்பவாவது கட் பண்ணிக்கிட்டா, தோலுக்கு கீழ வெள்ளையான சதை தெரியும். அது கொழுப்பு படலம். அந்த கொழுப்பு படலத்துக்கும் உள்ள இருக்கறது தான் ப்ரோடீன்களால் ஆனா சதை.
ஒரு மனித உடலில் தீ பிடிச்சா நல்ல கொழுந்து விட்டு எரியும். அதுக்கு காரணம் ஜஸ்ட் தோலுக்கு கீழ இருக்கற கொழுப்பு உருகி நெருப்புக்கு எரிபொருளா ஆகறது தான். கொழுப்பு படலம் சேதமான பின்னாடி அவங்களை காப்பாத்தறதும் கஷ்டம். நம்ம உடம்பை வெளிப்புற நோய் கிருமிங்க கிட்ட இருந்து காப்பாத்தறது நமது தோலும் இந்த கொழுப்பு படலமும் தான்.
4 . நியூக்ளிக் ஆசிட்ஸ் - nucleic acids - (இதை எப்படி தமிழ் படுத்தறதுன்னு எனக்கு தெரியல...)
இது தான் நம்ம உடலை, உறுப்பை, செல்லை, செல் உறுப்புகளை, சர்க்கரை, ப்ரோடீன் என எல்லாத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. அதாவது நம்ம உடல் இல்லை உறுப்பு எது எது எங்க இருக்கணும்...அதனோட கட்டமைப்பு, அது என்ன வேலை செய்யணும்... அதை எப்படி செய்யணும் அப்படிங்கற மொத்த தகவல்களையும் தனக்குள்ள உள்ளடக்கியது. (ஒவ்வொரு செல்லும் எப்ப உருவாகனும்... எப்போ செத்து போகணும் முதற்கொண்டு...)
இந்த பேரை மோஸ்ட்லி எல்லாரும் எங்கயாவது ஒரு முறையாவது படிச்சிருப்பிங்க...இல்ல யாராவது சொல்ல கேட்டிருப்பிங்க... DNA and RNA. இது தான் nucleic acids . இதுலயும் ஒரு சுவாரஸ்யமான சங்கதி இருக்கு... நம்ம உடலின் எல்லா செல்களிலும் DNA & RNA இருக்கும். ஒன்னே ஒன்னை தவிர... அது, நம்ம ரத்த சிவப்பு செல்கள்... இதுக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கு... அது பின்னாடி...
ஸோ... இப்போ ரொம்ப நீளமான பதிவா போயிடுச்சி... இன்னிக்கு இதோட முடிச்சிப்போம்... மத்தது அப்புறம்...
Fructose patriya oru viyathagu unmaiyai therindhu kondaen. Mikka nandri. Idhu poandra ungaludaya katturagal tamil arindha petrorgal thangal pillaigaluku paadam sollithara payanulladhaaga irukkum enbadhu en karuthu. thodarattum ungal pani. Nandri.
ReplyDeleteநன்றி பிலிப். உங்க நண்பர்களுக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்துங்க. உங்க ஆதரவு என் வேலையை இன்னும் மெருகேற்றும்.
Deleteநன்றி
Good and Interesting information... Continue Boss...!!
ReplyDeleteஉங்க ஆதரவுக்கு என் நன்றிகள் சாதிக்...!!!
Deletewow evaluvu arumaiyana matter. net la biochemistry patri tamil la unga kitta mattum than iruku friend. thank u. by the way im anto from lakshmi b.ed college, gandhigram. dindigul.
ReplyDeleteநன்றி நண்பரே...!!!
Deleteதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
தவறாம படிங்க, உங்க கருத்துக்களை இங்க சொல்லுங்க
உங்க நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்க.