மக்களே, எப்படியோ திரு. ஜாக்கி அவர்களோட புண்ணியத்துல நானும் ஒரு பதிவரா இந்த ஏரியாவுல உருவாயிட்டேன். புதுசா எழுத ஆரம்பிச்ச உடனே பின்தொடர்பவர்கள், பின்னூட்டம்ன்னு நெனக்கும்போதே ஒரே களேபரம் தான் போங்க. எல்லாருக்கும் நன்றிகள். இதை தக்க வெச்சிக்க கண்டிப்பா முயற்சி பண்றேன்.
திரு. பிலிப் எனக்கு தமிழ் வழியில படிச்சிட்டு ஆங்கில வழியில படிக்கும்போது இருந்த பிரச்சனைகளை பத்தி ஒரு கமென்ட் போட்டிருந்தாரு. நானும் அதே கேஸ் தான். நானும் +2 வரைக்கும் தமிழ் வழியில படிச்சிட்டு காலேஜ்ல பயோ- கெமிஸ்ட்ரி ஆங்கில வழியில படிச்சவன் தான். அந்த கஷ்ட்டம் எனக்கும் புரியும். அதனால தான், இந்த ப்ளாக் எழுதபோறது ஆங்கிலத்திலயா இல்லை தமிழ்லயான்னு கேள்வி வந்தப்போ கொஞ்சம் கூட தயக்கமே இல்லாம தமிழ்ல எழுத முடிவு செய்தேன்.
இன்னொரு நண்பர், திரு. சுவாமிநாதன், ஒரு யோசனையை சொல்லியிருக்கார். சில முக்கியமான வார்த்தைகளுக்கும், பெயர்களுக்கும் இணையான ஆங்கில வார்த்தைகளையும் சொன்னா, இன்னும் நல்லா புரிஞ்சிக்க வசதியா இருக்கும்ன்னு. அதை கண்டிப்பா செயல்படுத்தறேன். மக்களே, உங்களுக்கும் நம்ம வலைப்பூவை எளிதாக படிக்கவும் புரிந்துக்கொள்ளவும் ஏதாவது யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் நன்றிகள் பல.
நம்ம வலைப்பூ பத்தி விரிவா உங்களுக்கு அறிமுகப்படுத்த இது சரியான நேரமா இருக்கும்ன்னு தோணுது. நம்ம வலைப்பூ மொத்தம் 3 விதமான களத்தில் பதிவுகளை கொண்டிருக்கும்.
1 . தமிழில் உயிர் வேதியியலை அறிமுகப்படுத்தும் (பள்ளிக்கூட தொனி இல்லாம சுவாரஸ்யமான விதத்தில் ) 2 . சில சுவாரஸ்யமான சங்கதிகள் 3 . இந்த துறையின் தேவைகள், வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பத்தின பதிவுகள்.
கூடவே, நான் உயிர்வேதியியலின் அடிப்படையை பத்தி சொல்ல ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன். ஏற்கனவே, நாம நம்ம உடலும் உறுப்புகளையும் பத்தின அறிமுகத்துல பாதி தூரத்தில இருக்கோம். இருந்தாலும், இந்த அடிப்படையும் இருந்தா இன்னும் நெறைய சுவாரஸ்யமான விசயங்களை என்னால சொல்ல முடியும். உங்களுக்கும் புரிஞ்சிக்க சுலபமா இருக்கும்.
so, lets begin மக்களே...!!!
No comments:
Post a Comment