Saturday, May 12, 2012

ரெப்ளிகேசன், டிரான்ஸ்கிரிப்சன் மற்றும் டிரான்ஸ்லேசன் - அறிமுகம்...!!!

மக்களே...!!!

செல் அமைப்பு பத்தி பேசறதுக்கு முன்னாடி, சில விசயங்களை சொல்ல வேண்டி இருந்தது. இன்னும் இருக்கு... இத சொல்லாம மேல மேல போனா, நான் சொல்ல வர விசயங்களை சரியா புரிஞ்சிக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம்... அப்படி இன்னிக்கு பார்க்கபோற விஷயம் உங்களுக்கு புதுசு இல்லை... ஏன்னா, நம்மளோட முதல் பதிவுல இருந்து அத்தனை பதிவுகள்ளையும் நாம இத பத்தி சொல்லிட்டு வரோம். அது செல் அமைப்பு பத்தி நல்ல புரியும் படியான பதிவுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.

அது ஒரு செல் இன்னொரு புது செல்லை உருவாக்கறது மற்றும் தன்னோட எந்த வேலைக்கும் தேவையான ஒரு புது புரோட்டீன் உருவாக்கறது (புது செல்லை உருவாக்கவும் புதுசா நெறைய புரோட்டீன்களை உருவாக்க வேண்டியிருக்கும்). ஒரு புது புரோட்டீன் உருவாக்கறது தான் செல்லோட அத்தனை வேலைகளுக்கும் ஆணி வேர் அப்படின்னு  சொல்லலாம்.    செல் தன்னோட எந்த வேலைக்கும் தான் உயிர் வாழ தேவையான சக்தியை தயாரிக்கிரதுல ஆரம்பிச்சி, புது செல் உருவாக்கறது ஏன் கடைசியா செத்து போகவும் கூட  தேவையான புரோட்டீன்களை தனக்கு தானே தயாரிக்க வேண்டி இருக்கும்.

ஒரு புது செல் உருவாகனும்ன்னா, அப்படி உருவாகற புது செல்லுக்கு தாய் செல்கள்ள இருக்கிற மாதிரியே அத்தனையும் அதுக்குன்னு தனியா உருவாக்கணும். ஆனா, இங்க தான் ஒரு ட்விஸ்ட்... அதாவது நம்ம செல்லோட அத்தனை விசயங்களும் நம்ம DNA வுக்குள்ள அடக்கம். அதாவது புதுசா உருவாகற செல் எப்படி இருக்கணும், எங்க இருக்கணும், என்ன வேலை செய்யணும் எல்லாமே...!!! அதனால செல்லை உருவாக்கும் போது அந்த செல்லுக்குன்னு தேவையான அத்தனையும் புதுசா உருவாக்கி குடுக்கறதை விட, ஈசியான வழியா அதுக்குன்னு ஒரு செட் குரோமோசோம் (இதுக்குள்ள தான் மொத்தத்த DNA வும் பாதுகாப்பா பேக் பண்ணி வெச்சிருக்கு) ரெடி பண்ணி குடுத்திட்டா, அப்புறம் தனக்கு தேவையானதை அந்த செல்லே உருவாக்கிக்கலாம். (உலகத்தை சுத்தி வந்து பழம் வாங்கறதை விட அப்பா அம்மாவை சுத்தி வந்து பழம் வாங்கின பிள்ளையாரோட பாலிசி தான்) இது இன்னும் ஈசி இல்லையா..?

ஸோ, ஒரு செல் ரெண்டா பிரியிறதா முடிவானதும், முதல் வேலையா, குரோமோசோம்கள் தவிர மீதி இருக்கிற (உட்கரு சவ்வு உட்பட) தன்னோட அத்தனை செல் உறுப்புகளையும் அப்படியே தனக்குள்ள கரைச்சிடும். அப்புறம் டைட்டா நூல்கண்டு மாதிரி பேக் ஆகி இருக்கிற குரோமோசோமை நீளமான DNA வா பிரிச்சி, அதுல இருந்துநகல் எடுக்க தயார் படுத்தும். அப்புறம் இந்த DNA வை அப்படியே நகல் எடுக்க தேவையான புரோட்டீன்களை உருவாக்கி அதனோட உதவியோட நகல் எடுத்து, அதை தாய்செல்கள்ள இருக்கிற மாதிரியே பேக் பண்ணி புது செட் குரோமோசோம்கள் உருவாக்கப்படும். இப்போ தாய் செல் ரெண்டா பிரிஞ்சி, புது செல்லை இந்த புது குரோமொசொம்களோட உருவாக்கும். அப்படி உருவான புது செல் இப்போ தனக்குள்ள இருக்கிற DNA வோட உதவியோட தனக்கு தேவையான அத்தனையும் உருவாக்கிக்கும். இப்படி ஒரு DNA வுல இருந்து புது DNA உருவாகும் முறைக்கு ரெப்ளிகேசன் - REPLICATION அப்படின்னு பேரு.

அதே மாதிரி DNA வுல இருந்து புரோட்டீன் உருவாகும் போது புரோட்டீன் நேரடியா வர முடியாது. ஒரு புரோட்டீன் எப்படி இருக்கணும் அப்படிங்கற செய்தியை DNA வுல இருந்து அப்படியே RNA வா மாத்தி, அந்த RNA வுல இருந்து புரோட்டீன் உருவாகும். DNA வுல இருக்கிற செய்தியை கொண்டுவரதால, இந்த RNA, மெசெஞ்சர் RNA (MESSENGER RNA - mRNA ) அப்படின்னு கூப்பிடுவாங்க. இப்படி DNA வுல இருந்து RNA வரும் முறைக்கு டிரான்ஸ்கிரிப்சன் - TRANSCRIPTION  அப்படின்னும், RNA வுல இருந்து புரோட்டீன் வரும் முறைக்கு டிரான்ஸ்லேசன் - TRANSLATION அப்படின்னும் பேரு. இந்த ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி புரோட்டீன்கள் இருக்கு. இந்த ரெப்ளிகேசன்,  டிரான்ஸ்கிரிப்சன் மற்றும் டிரான்ஸ்லேசன் தான் ஒரு செல் வேலை செய்யும் முறைக்கு அடிப்படை, அடிநாதம் ஆணிவேர் எல்லாம். இந்த REPLICATION, TRANSCRIPTION மற்றும் TRANSLATION எல்லாத்தையும் சேர்த்து நாங்க CENTRAL DOGMA OF CELL அப்படின்னு சொல்லுவோம். 



உதாரணத்துக்கு, ஒரு நோய் கிருமி உள்ள வருதுன்னு வெச்சிப்போம். நம்ம நோய் எதிர்ப்பு சிஸ்டத்துல இருக்கிற சில செல்கள் (நியுட்ரோபில்) செல் மேற்பரப்பு புரோட்டீன்களை நம்ம சொந்த புரோட்டீன்களோட ஒப்பிட்டு பார்த்து அது நம்ம உடலுக்கு சொந்தமானது இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டு சில புரோட்டீன்களை உருவாக்கி இந்த செய்தியை மேக்ரோபெஜ் (இது ஒரு வகையான வெள்ளை செல் வகையை சேர்ந்தது. நோய் கிருமிகளை அப்படியே சாப்பிட்டு ஜீரணம் பண்ணக்கூடிய தன்மை கொண்டது) செல்லுக்கு அனுப்பும். இந்த நியுட்ரோபில் செல்கள் தான் உள்ள வர எந்த ஒரு நோய்கிருமிகளையும் முதல்ல எதிர்கொள்ளும் செல்கள். இப்போ இது முக்கியம் இல்லை... நியுட்ரோபில் செல்கள் மேக்ரோபஜ் செல்லுக்கு செய்தி அனுப்பறது சில புரோட்டீன்களை உருவாக்கி... ஸோ இங்க நடக்கறது டிரான்ஸ்கிரிப்சன் மற்றும் டிரான்ஸ்லேசன் - TRANSLATION . செய்தியை வாங்கற மேக்ரோபஜ் அந்த நோய் கிருமியை ஆராய்ந்து பார்த்திட்டு அதால முடியும்ன்னா அந்த கிருமிகளை தானே சாப்பிட்டு அழிச்சிடும். ஆனா, இங்க பார்த்திங்கன்னா, சாதாரண நிலையில சில எண்ணிக்கையிலேயே மேக்ரோபஜ் இருக்கும். அதனால நோய் கிருமிகளை அளிக்க முடிவு பண்ணினதும், அதனோட தாய் செல்கள்ள இருந்து புது மேக்ரோபஜ்களை உருவாக்கும்.

இங்க ஒரு முக்கியமான விஷயத்தை நான் ஞாபக படுத்த விரும்பறேன். அது, மேக்ரோபஜ்கள் புது செல்களை தானே ரெண்டா பிரிஞ்சி புது செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது இல்லை. அதுக்குன்னு சில தாய் செல்கள் (HAEMATOPOITIC PRECURSOR CELLS )   எலும்பு மஜ்ஜையில் இருக்கும் . அங்க இருந்து தான் புது மேக்ரோபஜ்கள் வரணும். அதுக்கு நம்ம சிஸ்டம் சில புரோட்டீன்கள் மூலம் செய்தி அனுப்பனும். அந்த செய்தியை அதனோட தாய் செல்களுக்கு அனுப்ப சில புரோட்டீன்களை உருவாக்கி அனுப்ப நடக்கறது டிரான்ஸ்கிரிப்சன் மற்றும் டிரான்ஸ்லேசன்.

அதே மாதிரி இப்படி உருவாக்கும் புது செல்களுக்கு குடுக்க அதுக்குன்னு தனி தனி செட் குரோமோசோம் உருவாகணும். இப்போ தாய் செல்கள்ள  இருந்து DNA வை நகல் எடுத்து புது செல்களுக்கு குடுக்கணும். இங்க நடக்கறது ரெப்ளிகேசன் - REPLICATION . அடிப்பட்ட காயம் சரியாக புது செல்கள் உருவாகனும். அங்க ரெப்ளிகேசன் நடந்தா தான் புது செல்கள் உருவாகி காயம் சரி ஆகும். நம்ம உடல்ல தினம் தினம் செல்கள் வயசாகி இறக்கும். இந்த செல்களோட இழப்பை புது செல்களை உருவாக்கி சரி கட்ட ரெப்ளிகேசன் நடக்கணும்.

ஸோ, நம்ம இப்போ புரிஞ்சிருக்கும்ன்னு நெனக்கிறேன். நான் ஏன் இது பத்தி முதல்ல சொல்ல நெனச்சேன்னு. நம்ம தினப்படி செயல்கள் சரியான படி நடக்க ரெப்ளிகேசன், ட்ரான்ஸ்கிரிப்சன் மற்றும் ட்ரான்ஸ்லேசன் அப்படிங்கற இந்த மூணு  விதமான செயல்கள் நடந்தே ஆகனும். மத்தபடி சொல்றதுக்கு இன்னும் நெறைய இருக்குதான்... அதுக்காக ஒரே சமயத்துல திணிக்கிறதும் நல்லது இல்லை...

ஸோ, அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

1 comment:

  1. hi,

    i saw that dailylib. but, i have to vote any three compulsory to add my posts. this is sounds like cheating...

    you can't force me to vote. i will vote if i really like it. if you force people to vote, they do vote randomly. i don't have a feeling that people spend time to read before voting and adding their post. sorry, i don't like this.

    i am writing for my my own followers, readers and daily visitors, not for votes or any rewards. i am really satisfied with them.

    anyway, thank you for your visit and comment.

    ReplyDelete